வெள்ளி, 6 ஜூன், 2014

ரோசா தமிழ்ப்பெயரா? கலைஞரே! ஏன் இந்தத் தடுமாற்றம்?

ரோசா தமிழ்ப்பெயரா? கலைஞரே! ஏன் இந்தத் தடுமாற்றம்?


இன்றைய (வைகாசி 23,2045 / 06.06.12)தினமணியில்
"நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!!!"
என்னும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.
'என்ன சத்தம் இந்த நேரம்'  என்னும் திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் குருரமேசு, இப்படத்தில் நடிக்கும்,ஒரே மகப்பேற்றில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, அட்சிதி, ஆப்தி ஆகியோரை அழைத்துச் சென்றிருந்தாராம்.


''குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கருணாநிதி அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அட்சிதிக்கு ரோசா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.'' என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியாளராகவே கற்பனை செய்துகொண்டு கலைஞர்  தமிழில்தான் பெயர் சூட்டியிருப்பார் என எண்ணியிருந்தால் அதுவும் தவறுதான். ஏனெனில் தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டிய கலைஞர், குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 பூக்களை அழகாகக்  கூறியிருப்பாரே, அவற்றை எல்லாம் மறந்து தமிழில் பூக்களுக்குப் பெயர் இல்லை என எண்ணிச் சூட்டி விட்டாரா? 
அல்லது உண்மையில் கலைஞரே தமிழ்ப்பெயர் சூட்டுவதாக இப்பெயர்களைச் சூட்டியிருப்பின் அதுவும்  வேதனைக்குரிய செய்திதான்! ரோசாவைத் தமிழ் என எண்ணும் நிலையில் தினமணிச் செய்தியாளர் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், முத்தமிழறிஞர்  இவ்வாறு இருந்தால் இன்றைய இளந் தலைமுறையினரின் தமிழின் நிலை என்ன?
 வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/  எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

4 கருத்துகள்:

  1. கருணாநிதி தமிழர்களை மட்டுமில்லை, தமிழையும் மறந்துவிட்டார் என்பதையே இது காட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  2. ஐயா! மேலே உள்ள அந்தக் 'கபிலர் பூக்கள்' படம் மிகவும் அருமை! மிகப்பெரும் ஆராய்ச்சி செய்தே இப்படியொரு படத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், அதில் முதல் பத்துப் பூக்கள் இல்லையே? அவையும் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  3. 'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் குருரமேசு, அந்தப்படத்தில் நடிக்கும்,ஒரே மகப்பேற்றில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, அட்சிதி, ஆப்தி ஆகியோரை கலைஞர் கருணாநிதியிடம் அழைத்துச் சென்றிருந்தாராம்.

    'குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கருணாநிதி அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு முல்லை என்றும், அட்சிதிக்கு ரோசா என்றும், ஆப்திக்கு அல்லி என்றும் பெயர் சூட்டினார்.'
    கலைஞர் கருணாநிதி பிள்ளைகளுக்கு வைத்த நான்கு பெயர்களில் ரோசா தமிழ் இல்லை என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்குத் தெரியாதா என வள்ளுவன் இலக்குவனார் அவரோடு போர் தொடுத்துள்ளார்.
    http://thiru2050.blogspot.ca/2014/06/blog-post_6.html
    கபிலர் 99 பூக்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ரோசா இல்லை என்பது சரிதான். காரணம் அது அண்மையில் தமிழ்நாட்டுக்கு பிறநாட்டில் இருந்து வந்த பூ.
    ஆனால் இப்படி கலைஞர் கருணாநிதி மீது பாய்ந்து பிராண்டும் இலக்குவனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா வட மொழிப் பெயர்களை வைப்பதைக் கண்டு கொள்வதில்லை. அச்சம் காரணமாகவோ என்னவோ ஜெயல்லிதாவை யாரும் விமர்ச்சிப்பதும் இல்லை.
    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்ற ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 புலிக்குட்டிகளுக்கு பெயரிட்டார். இவற்றில் 4 வெள்ளைப்புலிக்குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், மற்ற 3 வங்காளப் புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும் பெயர் வைத்தார். இந்த 7 குட்டிகளில் சித்ரா என்ற பெண் வெள்ளைப்புலிக்குட்டி கடந்த அக்டோபர் மாதம் இறந்துபோயிற்று.
    http://astrolagis.dinakaran.com/News_Detail.asp?Nid=43750
    இந்தப் பெயர்கள் எதுவும் தமிழில்லை. காவேரி என்பதும் வடசொல்தான். காவிரிதான் அதற்குரிய தூய தமிழ்ச் சொல்.
    புலிக்குட்டிகளுக்கு மட்டுமல்ல தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போதும் ஜெயசித்திரா, ஜெயகுமாரி, ஜெயவதனி என்ற வடமொழிப் பெயர்களைத்தான் ஜெயலலிதா வைக்கிறார்.
    ________________________________________


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோப்பிலிருந்து...
      முதல்வர் புலிக்குட்டிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டாமை
      http://thiru2050.blogspot.in/2013/03/blog-post_4121.html
      தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதே அழகு
      http://thiru2050.blogspot.in/2013/03/blog-post_5694.html
      http://m.dinamalar.in/news_detail.asp?id=667970

      நீக்கு