தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை
10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க
பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது
செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்
தலைமை.நி.செயலாளர் தமிழ் மகன், முதலானோரும்சென்னை மாவட்டம் புரட்சி நம்பி,
மலையன குணவழகன் முதலிய பலரும் காஞ்சி மாவட்டம் சார்பில் நடராசன்,
இலக்சுமண், சதீசு, விசிறி முதலான 30 க்கும் மேற்பட்ட தோழர்களும்
பங்கேற்றனர்.
இவற்றின் ஒளிப்படங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.தமிழ் மொழிக்கு எதிரான ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மதிமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக