மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளை
உள்ளடக்கிய “உலகத் தமிழர் பேரமைப்பு ” சார்பாக மும்பை தாராவி இல் உள்ள
காமராசர் ஆங்கிலப் பள்ளியில் வரும் சூன் 15ஆம் நாள் மாலை 6 மணி முதல்
நூல் வெளியீட்டு விழாவும் ஆவணப்படம் திரையிடலும் நடக்க இருக்கிறது.
இந் நிகழ்ச்சியில், பவா சமுத்துவன் எழுதிய
“மேதகு பிரபாகரன்- வாழ்வும் இயக்கமும்” , தோழர் பொழிலன் எழுதிய
“தமிழ்த்தேசம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழாவும் ,செய்தியாளர் மகா
தமிழ் பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது “
என்னும் போருக்குப் பிந்திய இலங்கை பற்றிய ஆவணப்படம் திரையிடுதலும்
நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சியில் ‘தமிழ் காப்போம்’ திரு மிக்கேல் அந்தோணி வரவேற்புரையாற்றுகிறார்;
உலகத் தமிழ்ப் பேரமைப்பின் திரு மு .மாரியப்பன் தலைமை தாங்குகிறார்,
தமிழர் நட்புக் கழகத் தலைவர் மா கதிரவன் தொகுப்புரையற்றுகிறார்.
”மேதகு பிரபாகரன் – வாழ்வும் இயக்கமும்” என்ற நூலை திரு ஏ .பி . சுரேசு அவர்கள் வெளியிட, திரு கென்னடி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
“தமிழ்த்தேசம்” நூலை, மும்பை மாநரகாட்சி
உறுப்பினர் நாயகர்(கேப்டன்) தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியிட திரு சங்கர்
சாமி அவர்கள் பெற்றுகொள்கிறார்.
பிறகு செய்தியாளர் மகா தமிழ்
பிரபாகரன் இயக்கிய “இந்த நிலம் இராணவத்துக்குச் சொந்தமானது” - என்னும்
போருக்குப் பிந்திய இலங்கை பற்றிய ஆவணப்படம் திரையிடப்படும்.
நிகழ்ச்சியில் தாய்த் தமிழகத்தில் இருந்து
சிறப்பு சொற்பொழிவு ஆற்ற திரு பொழிலன், இயக்குநர் கௌதமன், எழுத்தாளர் பவா
சமத்துவன், சென்னை வழக்கறிஞர் திரு அகரன், செய்தியாளர் மகா தமிழ்
பிரபாகரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
அதோடு சென்னை திரு முத்தமிழ்மணி அவர்கள் பெருஞ்சித்திரனார் நினைவுஉரை நிகழ்த்துகிறார்.
பெருஞ்சித்திரனார் படத்தை மும்பை திருவள்ளுவர் மன்றத்தைச் சேர்ந்த வி தேவதாசன் அவர்கள் திறந்து வைக்கிறார்.
சிறப்பு அழைப்பாளராக மும்பையைச் சேர்ந்த
தமிழ் உணர்வாளர்கள் காமராசர் பள்ளியைச் சேர்ந்த திருஇராமராசா , ஆதி
திராவிடப் பள்ளியைச் சேர்ந்த திரு கே வி அசோக்குமார், மும்பை திராவிடர்
கழகத்தைச் சேர்ந்த திரு. பெ .கணேசன், விலேபார்லே வி.இராசா, சித்தா முகாம்
தென்மொழியன், தமிழர் நலப் பேரியக்கம் திரு கிருட்டிணா காமாட்சி, நவி மும்பை
தமிழ்ச் சங்கம் திரு இராசகோபால், ஆரே தமிழ் மக்கள் பேரவை திரு சிவராமன்,
நாம் தமிழர் கட்சி நெருல் இரவி, ரே ரோடு ஆறுமுகம், அந்தேரி தமிழ்ச் சங்க சே
.குமார், மும்பையில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொள்ள
உள்ளார்கள.
இறுதில் திரு நாடோடித் தமிழன் நன்றியுரை ஆற்றுகிறார் ,
இனிதே நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்
மேலும் விவரங்களுக்கும் நன்கோடை அளிக்கவும் தொடர்பு கொள்ளுங்கள்:
மா. கதிரவன்
+ 91 9321454425
மின்வரி: khathiravan@gmail.com
பேசி +91-9321454425
Twitter :khathiravan
http://khathiravan.wordpress.com
“செயல்” : அதுவே சிறந்த சொல் – எச். எம். குபா
- அகரமுதல இதழ் 29
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக