திங்கள், 6 மே, 2013

தொழில் பயிற்சி இலவசம்!

தன் தொழில் பயிற்சி இலவசம்!

சுயதொழில் முனைவோரை மேம்படுத்த, இலவச ப் பயிற்சிகளை த் தரும் கல்லூரி முதல்வர், காசிநாத பாண்டி: நான், சென்னையில் உள்ள, தாகூர் பொறியியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றுகிறேன். தமிழகத்தில், கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பட்டதாரிகளின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி இருக்கிறது. ஆனால், சுயமாக தொழில் செய்ய முயல்வோரின் எண்ணிக்கை, குறைவாகவே உள்ளது.எனவே, சுயமாக தொழில் செய்ய முனைவோரது எண்ணிக்கையை அதிகரிக்க, ஏ.ஐ.சி.டி.இ., எனும், "அகில இந்திய தொழில்நுட்பக் கழக' உதவியோடு, இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை, எங்கள் கல்லூரி வளாகத்திலேயே நடத்துகிறோம். இந்த இலவச பயிற்சி வகுப்புகளுக்கு, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டுமே சேர வேண்டும் என்ற, எந்தவித கட்டாயமும் இல்லை.சுயமாக தொழில் துவங்க நினைப்பவர்களும், சுற்றுப்புறத்தில் உள்ள பெண்களும் கூட, இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயன் பெற்று வருகின்றனர். இதற்காகவே எங்கள் கல்லூரியின் சார்பில், "தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக, பெண்கள் எளிதில் சுயதொழில் துவங்க ஏதுவாக உள்ள, அழகு கலை, தையல் என, பலவித பயிற்சிகளை கற்றுத் தந்து, அதற்கான சான்றிதழ்களையும் வழங்குகிறோம்.அரசு, சுயமாக தொழில் துவங்குபவர்களுக்கு, பல திட்டங்களின் கீழ், மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கி வருகிறது. நம் நாட்டில், உற்பத்தி சார்ந்த தொழில்களை விட, சேவை சார்ந்த தொழில்களில், பெண்கள் ஈடுபடும் போது தான், உடனடி வருமானம் கிடைக்கிறது.பெண்கள், தையல் மற்றும் அழகு கலை யை கற்பதன் மூலம், இதற்கென தனியாக கடைகளை வாடகைக்கு எடுக்காமல், தங்கள் வீட்டிலேயே அமைக்கும் வசதி, இது போன்ற தொழில்களில் மட்டுமே உள்ளது. குறிப்பாக, வீட்டு வேலைகள் முடிந்த பின், கிடைக்கும் ஓய்வு நேரங்களில், இதை ஒரு பகுதி நேர தொழிலாக செய்து, வீட்டின் மாத வருமானத்தை அதிகரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக