ஞாயிறு, 24 மார்ச், 2013

சாலை யின்மேடு, பள்ளத்தைக்கண்டறியும் உணரி







சாலை யின்மேடு, பள்ளத்தை க்கண்டறியும் உணரி("சென்சார்'): மதுரை மாணவர்கள் அசத்தல்


சாலை யின்மேடு, பள்ளங்களை கண்டறியும் "சென்சார்' கருவியை கண்டுபிடித்து உள்ளனர், மதுரை கே.எல்.என்., தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாலமாடசாமி, நிர்மல், யஷ்வந்த், பாண்டி, ராகுல் குமார், வெங்கடேஷ் பாபு.

கண்டுபிடிப்பு குறித்து, அவர்கள் கூறியதாவது: சாலை அமைப்பதற்கு முன் பள்ளம், மேட்டை "டம்பி லெவல்' "டெலஸ்கோப்' கருவி மூலம் அளவிட வேண்டும். இந்த அளவீடுகளை "கிராப்' வடிவில் கொண்டு வந்து, அதன்பின் பள்ளம், மேட்டை கணக்கிடுவது தான் தற்போதைய முறை. மேலும் குறிப்பிட்ட நீளத்திற்கு ஒருமுறை, மீட்டர் அளவில் பள்ளம், மேடு கணக்கிடப்படும். நாங்கள் கண்டுபிடித்த "சென்சார்' மூலம், ரோட்டின் மேடு, பள்ளங்களை தானாக அளவிட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும். "கிராப்' அமைத்துத் தருவதன் மூலம், மேடு, பள்ளங்களை மி.மீ., அளவு வித்தியாசத்தில் துல்லியமாக கண்டறியலாம். அதற்கேற்ப பள்ளமான இடத்தை சரிசெய்யலாம். புதிதாக ரோடு அமைப்பது மட்டுமின்றி, ஏற்கனவே அமைத்த ரோட்டில் பள்ளம் இருந்தாலும் கண்டறியலாம். நாங்கள் வடிவமைத்துள்ள "சென்சார்' கருவியை, காரின் அடியில் பொருத்தி, ரோட்டில் சீரான வேகத்தில் செல்லும் போது, அளவுகள் பதிவு செய்யப்படும். போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் பட்சத்தில், "ஹெலிகாப்டர் மூலம் அளவெடுக்கலாம். இதில் கேமராவையும் இணைக்கலாம். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு சரிபார்க்க, வயர்லெஸ் கருவி, கம்ப்யூட்டர் முறையிலும் "சென்சாரை' அமைக்கலாம்; நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும், என்றனர். தொடர்புக்கு: 77087 88363.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக