வியாழன், 21 ஜூன், 2012

அகதி நிலை கோருபவர்களுக்கு உரியபாதுகாப்பு வழங்க வேண்டும்!

Jun
20  http://www.thedipaar.com/news/news.php?id=47816  newsattamilsource
Wednesday  20  June  2012  06:49:27 AM | படித்தவர்கள்: 40



வேறு எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கை அகதி நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றுக்கூறி தடுத்து வைத்துள்ளமையானது, நீதியற்ற செயல் என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாம் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டமையை எதிர்த்து, இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலியா புலனாய்வுத்துறையினருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது வேறு எந்த நாடுகளும் குறித்த அகதியை ஏற்றுக்கொள்ளாதநிலையில் அவரை தடுத்து வைத்துள்ளமை நீதியற்ற செயல் என்று மேல்நீதிமன்றம் குறிப்பிட்டது
ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ள நிலையில், குறித்த அகதியை ஏற்றுக்கொள்ளும் நாடு குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக அரச சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த அகதியை நாடு கடத்துவது தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளதக்க செயலல்ல. அகதியாக வந்தவர்களை மூன்றாம் நாடு ஒன்றுக்கு அகற்றுவது சட்டத்தின்படி முடியாது என்று அகதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும், குறித்த அகதி இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியமை தொடர்பில் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அரச சட்டத்தரணி, அதன் மொழியாக்கம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தநிலையில் நாளை இடம்பெறவுள்ள விசாரணையின் போது இந்த வழக்கில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு நலன்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ka.

Related News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக