வெள்ளி, 22 ஜூன், 2012

தமிழக மீனவர்கள் மீது இராசபட்ச அபாண்டப் புகார்

மீன்களைச் சேதப்படுத்துவதற்கும கொள்ளையடிப்பதற்கும 20  ஆண்டுத்தண்டனை எனில், பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றதற்கும் அழித்து வருதவற்கும் பக்சேக்களுக்கு எத்தனை ஆண்டுத்தண்டனை? எப்பொழுது கிடைக்கும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தமிழக மீனவர்கள் மீது இராசபட்ச அபாண்டப் புகார்

First Published : 22 Jun 2012 02:46:57 AM IST

Last Updated : 22 Jun 2012 03:54:45 AM IST

கொழும்பு, ஜூன் 21: தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல்செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அபாண்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் புதன்கிழமை பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் பெயரையோ தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் ""இலங்கைக்கு அருகில், வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்'' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். பிரச்னைக்குரிய பகுதி பாக் நீரிணை என்றும் சுட்டியிருக்கிறார்.20 ஆண்டுகள் சிறையில் தள்ள புதிய சதி? இப்படிச் செய்கிறவர்கள் மீது, சர்வதேச கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் வகையிலும் பேசியுள்ளார். அதாவது இலங்கைக் கடல்பரப்பில் மீன் பிடிப்பதாகத் தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குச் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. இந்திய மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும் மீன்பாடுகளைக் கொள்ளையடித்தும் மீன் வலைகளை அறுத்தும் நஷ்டம் ஏற்படுத்திவந்த இலங்கைக் கடற்படையினர் சமீபகாலமாக மீனவர்களைச் சுட்டும் கடலில் தள்ளியும் கூட அத்துமீறி நடக்கின்றனர். இனி மீனவர்களைக் கைது செய்தால் 20 ஆண்டுகள் வரை அவர்களைச் சிறையில் தள்ள இப்போதே சர்வதேச மாநாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் மகிந்த ராஜபட்ச என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக