வியாழன், 21 ஜூன், 2012

தோற்கட்டும் பிரணாப்!

ஈழத்தமிழர் படுகொலைச்சதிகளுக்கு மட்டும் வழி மொழிந்தால் போதாது. தொடர்புடைய அனைத்திற்கும் வழி மொழிந்தால்தானே  வழி  பிறக்கும்.  மாநில உணர்வுகளுக்கு எதிரானவரை வழி மொழிபவர்கள் மாநிலத் தன்னாட்சி ப்றறிப் பேசலாமா?  பேசலாம். கேட்பதற்குத்தான் கொத்தடிமைகள் உள்ளனரே!  தோற்கட்டும் பிரணாப்!  உண்மையை  உணரட்டும் சதியாளர்கள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பிரணாப்பை வழிமொழிந்து கருணாநிதி கையெழுத்து


சென்னை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை வழிமொழிந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, வருகிற 28ம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதற்காக, நான்கு பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதில், பிரணாபை வழிமொழிந்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர்.மேலும், 46 எம்.பி.,கள் அவரை வழிமொழிந்து உள்ளனர். வேட்பு மனுக்களின் பிரதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் மற்றும் ஆதரவு கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திடுமாறு, பிரணாப் முகர்ஜியின் தேர்தல் பிரசார குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக