புதன், 30 மே, 2012

யேர்மனியில் ஈழத்தமிழர் ஆதரவுக்காக உருவாக்கும் முயற்சி!

யேர்மனியில் ஈழத்தமிழர் ஆதரவுக்காக அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு உருவாக்கும் முயற்சி!

Germany 6
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரமாக யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் ஈழத்தமிழர்களின் சுயவுரிமைக்காக ஓர் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவை உருவாக்கும் முயற்சியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை முழு முயற்சியை எடுத்துவருகின்றது . அந்த வகையில் கடந்த மாதங்களாக அவர்களுடனான பல சந்திப்புகள் மேற்க்கொள்ளப்பட்டது .
இதன் வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை 25 .05 .2012 இந்திய தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் செயலாளர் சி. மகேந்திரன் அவர்களின் யேர்மன் வருகையை முன்னிட்டு பல்வேறு கட்சியுடனான(SPD Linke மற்றும் Bündnis 90/Die Grünen )சந்திப்புக்கள் மேற்க்கொள்ளப்பட்டது .
இச் சந்திப்பில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் செயலாளர் சி. மகேந்திரன் சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் தலைவர் விராஜ் மென்டிஸ் கனடியத்தமிழர் தேசிய அவையின் தமிழ் ஊடக பேச்சாளர் தேவா சபாபதி மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் ஜெயசங்கர் அவர்களும் கலந்துகொண்டனர் .
இவ் கலந்துரையாடலில் ஈழத்தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட யேர்மன் அரசாங்கத்தின் முக்கியத்தை வலியுறுத்தி கருத்துக்கள் முன்வைக்கப்பட்து . அத்தோடு சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர் மீது தொடரும் இனவழிப்பை ஆழமாக சுட்டிக்காட்டியதோடு அந்த மக்களின் விருப்பை மற்றும் தம்மை தாமே ஆளும் அரசியல் பேரவாவை அதற்கான இறுதித் தீர்வு தமிழீழமே எனும் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்து .சிறப்பாக சி . மகேந்திரன் அவர்கள் பேசுகையில் ஈழத்தமிழர்கள் தமது உரிமையை நிலைநாட்ட அவர்களின் விருப்பை உறுதிப்படுத்தும் முறையில் அதற்கான அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முறையில் சர்வதேச கண்காணிப்பில் ஓர் பொதுஜன கருத்துக்கணிப்பு நடாத்துவத்தின் அவசியத்தையும் தெரிவித்தார் .
சந்தித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈழத்தமிழர்களுக்கான தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர் .
அதே நாள் மாலை நேரம் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் செயலாளர் சி. மகேந்திரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பும் நடாத்தப்பட்டது . இச் சந்திப்பில் மகேந்திரன் அவர்கள் இந்திய மத்திய அரசின் ஈழம்சார்ந்த நிலைப்பாடு தமிழ் நாட்டு தலைவர்களின் உறவுகளின் நிலைப்பாடு செயற்பாடு சம்மந்தமாக கலதுரையாடினார் . அதே நேரத்தில் விராஜ் மென்டிஸ் அவர்கள் தமிழீழம் அமைப்பதற்கு எக்காலத்தை விடவும் இன்றைய காலமே அதின் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்பதனை விளக்கினார் .
இவ் நிகழ்வில் கனடியத்தமிழர் தேசிய அவையின் தமிழ் ஊடக பேச்சாளர் தேவா சபாபதி மற்றும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தலைவர் செபஸ்தியான் அவர்களும் கலந்துகொண்டனர் . இவ் நிகழ்வில் சி. மகேந்திரன் அவர்கள் முள்ளிவாய்கால் அவலத்தின் துயரங்களையும் வேதனைகளையும் வார்த்தைகளில் வடித்து கண்களில் கண்ணீரை வரவழைத்து . நெஞ்சங்களை துடிக்க வைக்கும் வகையில் அவர் எழுதிய ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’என்ற நூல் வெளியீடும் நடைபெற்றது . அத்தோடு
கனடியத்தமிழர் தேசிய அவையின் தமிழ் ஊடக பேச்சாளர் தேவா சபாபதி அவர்களின் தயாரிப்பில் முள்ளிவாய்க்கால் வலியை தாங்கி சிறந்த ஆவணப்படமாக மிக விரைவில் தோன்ற இருக்கும் ‘களம்’ திரைப்படத்தின் இசை இறுவெட்டு வெளியீடும் நடைபெற்றது .
தகவல் :ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக