புதன், 4 ஏப்ரல், 2012

i was careful in my career: என் தொழிலில் கவனமாக இருந்தேன்!'

"என் தொழிலில் கவனமாக இருந்தேன்!'

பெண்களுக்கான நைட்டி தயாரிப்பில் ஈடு பட்டு, வெற்றி பெற்றுள்ள தங்கபாண்டியன்:
என் அப்பா சவுந்திரபாண்டியன், பாத்திரக் கடை வைத்திருந்தார்.வீட்டில் ஏழ்மையான சூழ்நிலை.ஒவ்வொரு நாளையும் தள்ளுவதே, பெரும்பாடாக இருந்தது. கஷ்டத்தை சமாளிக்க, அருகிலுள்ள துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.ஏழு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து, தொழில் நுணுக்கத்தை கற்றுக் கொண்டேன்.என் சகோதரி செய்த பண உதவியைக் கொண்டு, பெண்களுக்கான நைட்டிகளை வாங்கி, தோளில் சுமந்த படியே, வீடுவீடாக சென்று விற்பனை செய்தேன். தொழில் நேர்மையும், நாணயமும், வாடிக்கையாளர்களுக்கு பிடித்திருந்தது.ஒரு கட்டத்தில், "நைட்டிகளையும், உள்ளாடைகளையும், நாமே தயாரிக்கலாம்' என்ற எண்ணம் தோன்றியது."பெண்கள் நைட்டியை விற்கிறான்' என, சிலர் என்னை, கேலி பேசினர். ஆனால், நான் எதையும் கண்டு கொள்ளாமல், தொழிலில் கவனம் செலுத்தினேன். கடுமையாக உழைத்து, "பியூட்டி' என்ற பெயரில், சொந்த நிறுவனத்தை உருவாக்கினேன். நான்கு தையல் மிஷின்களுடன் ஆரம்பித்த தொழில், இன்று, 50 மிஷின்களுடன் பணி செய்யும் அளவு, விரிவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் எங்கள், "பியூட்டி' நைட்டி விற்பனை செய்யப்படுகிறது.என் நிறுவனத்தில், 720 பேர் வேலை பார்க்கின்றனர். பெண்களுக்கான நைட்டி மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என்பதால்,பெண்களுக்கே முன்னுரிமை.ஆமதாபாத் நகரிலிருந்து, தரமான துணிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்கிறோம். அந்த துணிகளை நன்கு வடிவமைத்து, ஆயத்த ஆடைகளை தயார் செய்கிறோம். அவற்றை, குறைந்த விலைக்கு விற்கிறோம்.தரமும், விலையும் சரியாக இருப்பதால், பெண்கள் மத்தியில் எங்கள் தயாரிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக