செவ்வாய், 3 ஏப்ரல், 2012

சொல்கிறார்கள்                                                                                                                        

புற்றுநோய் துயரங்களின்சக்ரவர்த்தி!

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சித்தார்த்:
டில்லியில், மத்தியதர வங்காள குடும்பத்தில் பிறந்தேன். ஒழுக்கக் கட்டுப்பாடு அதிகமுள்ள கத்தோலிக்கப் பள்ளியில் படித்தேன். பின், உயிரியல் முதுகலை படிக்க, அமெரிக்கா வந்த மிகச் சிலருக்கே கிடைக்கக்கூடிய, ரோடஸ் ஸ்காலர்ஷிப் பெற்றேன்.ஆக்ஸ்போர்டில் நோய்த் தடுப்பில், பி.எச்.டி., முடித்தபின், ஹாவர்ட் பல்கலையில் மருத்துவப் பட்டம் பெற்று, ஆராய்ச்சியாளனாகப் பணியைத் தொடங்கினேன். "துயரங்களின் சக்ரவர்த்தியான புற்றுநோயின் வரலாறு' என்ற நூலை எழுத உதவியர், என் மனைவி தான்.இந்தப் புத்தகம் எழுத முக்கிய காரணம், என்னிடம் வரும் நோயாளிகள் தான். வாழத் துடிக்கும் அவர்களின் ஆசையும், நோயுடன் போராடும் அவர்களின் கஷ்டமும் தான். கேன்சர் என்பது ஒரு வியாதி அல்ல. அது, பல வியாதிகளைத் தன்னுள் அடக்கியது. அதனால் தான் அதை, "எல்லா துயரங்களின் சக்ரவர்த்தி' என குறிப்பிடுகிறேன்.நம் அனைவரின் உடலிலும், செல்களின் சிதை மாற்றம் நிகழ்கிறது. ஆனால், ஒரே ஒரு செல் மட்டும் அழியாமல், பூதாகரமாக அசுர வேகத்தில் வளர்வது தான் பிரச்னை.கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெர்ஷிய நாட்டின் அரசியை, ஒரு கிரேக்க அடிமை கொடூரமான முறையில் கத்தியால் அறுத்ததில் துவங்கி, தொடர்ந்து வந்தவர்கள், நெருப்பினால் பொசுக்கிய முறையைத்தான் இன்றைய மருத்துவ உலகமும் சகல விதமான தொழில் நுட்பங்களுடன் செய்து கொண்டிருக்கிறது.குளிர்ந்த கத்தி அல்லது அதிக வெப்பமான கதிர்கள் என்பதைத் தவிர, புற்றுநோயைக் குணப்படுத்த வேறு வழியில்லை. ஆனால், நோயின் பல வகைகள், கட்டங்கள் அறியப்பட்டு தடுக்கும் முயற்சியில், பெரும் வெற்றி கண்டிருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், விரைவில் குணப்படுத்தி விடலாம்.புற்றுநோயில் என் ஆராய்ச்சியானது, "லுக்குமியா' எனும் ரத்தப் புற்றுநோய் பற்றியது தான். இது, குழந்தைகளுக்கு அதிக அளவில் வருவதன் காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்; விரைவில் கண்டுபிடித்து விடுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக