சனி, 7 ஏப்ரல், 2012

குறையைநிறையாக்கினேன்!

குறையைநிறையாக்கினேன்!


டேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனை அம்பிகா: என் சொந்த ஊர், நெய்வேலி. நடுத்தரக் குடும்பம் என்னுடையது. எங்க ஊரில், டேக்வாண்டோ விளையாட்டு, மிகவும் பிரபலம்.
ஆனாலும், பெண்களின் பங்களிப்பு இதில் அதிகம் இல்லை. அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பயிற்சியாளர் விஜயசங்கர், "டேக்வாண்டோ பெண்கள் அணி'யை உருவாக்குவதற்காக, மாணவியர் மத்தியில் பல சாகசங்களை செய்து காட்டி, ஆர்வத்தை ஏற்படுத்தினார். உற்சாகத்துடன் பயிற்சியில் சேர்ந்த மாணவியரில் நானும் ஒருத்தி.டேக்வாண்டோ விளையாட்டு, கராத்தே இல்லை.

கராத்தேவில், உடலின் எந்தப் பகுதியையும் தாக்கலாம். கை, கால் இரண்டையும் பயன்படுத்தலாம். ஆனால், இதில் இடுப்புப் பகுதிக்கு மேல் தான் தாக்க வேண்டும். கால்கள் மட்டும் தான் பயன்படுத்தணும். முகத்தில் காலால் அடித்தால், அதிகப் புள்ளி. ஒரு நிமிடத்திற்குள் அதிகபட்சம் பத்து புள்ளி வரை அடிக்கலாம்.இந்த விளயாட்டில் என் ஆர்வத்தைக் கவனித்த பயிற்சியாளர், என்னை உற்சாகப்படுத்தி, கூடுதல் பயிற்சியளித்தார். இதில் எனக்குத் தடையாக இருந்தது, என் உயரம். என் வேகமான விளையாட்டால், குறையை நிறையாக்கினேன்.

நான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்றேன்.
அதன் பின், பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றேன். கடைசி நிமிட பரபரப்பிற்கிடையே, நான் வெற்றி பெற்றேன்.
முதல் முறையாக, சொந்தமாக ஒரு டேக்வாண்டோ உடை வாங்கிக் கொடுத்து, போட்டிகளுக்கான பயணச் செலவையும், பயிற்சியாளர், விஜயசங்கர் ஏற்றுக் கொண்டு, என்னை உற்சாகப்படுத்தினார். இந்த விளையாட்டில், இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக