வெள்ளி, 8 அக்டோபர், 2010

இணையத் தளத்தில் எந்திரன்

இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்


சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஷங்கர் இயக்கத்தில், தொழில்நுட்ப ரீதியில் சாதனை படைத்துள்ள திரைப்படம் என்பதால் இந்தத் திரைப் படம் பல கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டது. ÷மிகப் பெரிய லாபத்துக்குப் படம் விற்கப்பட்டு தயாரிப்பாளர்களும் வரலாறு காணாத லாபத்தை ஈட்டியிருப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.÷இந்தப் படத்தின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற கனவில் தியேட்டர் அதிபர்கள் பல லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தி திரையிட்டனர்.÷சுமார் ரூ.160 கோடி முதலீட்டுடன் தயாரிக்கப்பட்ட "எந்திரன்' திரைப்படம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த 1-ம் தேதி பலத்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டது. ஆனால், திரைப்படம் வெளியான 3 நாளிலேயே சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து, கட்டணத்தையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.÷ஒரே ஊரில் மூன்று, நான்கு திரையரங்குகளில் வெளியான காரணத்தாலும் முதல் 3 நாள்களும் அதிகமான கட்டணத்துடன் நான்கு, ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டதாலும், 30 நாள் ஓடவேண்டிய படம் மூன்றே நாளில் வரவேற்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.÷தமிழகத்தில் இத் திரைப்படத்தின் திருட்டு விடியோ, டி.வி.டி. வெளியாகாத வகையில் காவல் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெறக் கூடாது என தமிழ் இணையதளம் ஒன்றுக்கு சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.÷ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் என்பதால் காவல் துறையும் திருட்டு விசிடி வெளியாகிவிடாமல் எல்லா வகையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. http://v.youku.com/v_show/id_XMjExOTgxMTMy.html  எனப்படும் வெளிநாட்டு இணையதளத்தில் இந்தப் படம் தெளிவாகவும், முழுமையாகவும் கிடைப்பதாகத் தெரிகிறது. 2 மணி 50 நிமிடங்கள் இத் திரைப்படம் இணையதளத்தில் ஓடுவதாக, இதைப் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் "தினமணி' அலுவலகத்துக்குத் தெரிவித்தனர்.÷அவர்களிடம் சைபர் கிரைம் துணை ஆணையாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.÷உள்நாட்டில் மிக அதிகமான தொகைக்கு விநியோக உரிமையை அளித்ததைப் போல வெளிநாட்டு நிறுவனத்துக்கும், இணையதள உரிமைக்கும் சேர்த்து யாரேனும் விற்றிருப்பார்களோ என்ற சந்தேகம் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் எழுந்துள்ளது.÷அப்படி இருந்தால் மட்டுமே இவ்வளவு தெளிவாக இணைய தளத்தில் "எந்திரன்' திரைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க முடியும்.÷இந்த இணையதளத்தில் எந்திரன் திரைப்படம் ஓடுவதைத் தடுப்பதற்கு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.÷சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் "எந்திரன்' திரைப்படம் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறுகிறது. ஆனால், வேலூர், பாண்டிச்சேரி, திருத்தணி, ஒசூர் போன்ற சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து விட்டதால் வெளியாகி ஒரு வாரம் ஆவதற்குள் பல திரையரங்குகளில் இருந்து "எந்திரன்' திரைப்படம் மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. இதற்கு இணைய தளத்தில் படம் வெளியானது கூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கருத்துக்கள்

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பதற்குத் தினமணியைத்தான் எடுத்துக் காட்டாகக் கூற வேண்டும். இணையதளத்தில் எந்திரன் படம் வருவதை நிறுவனத்தினர் சார்பாகக் குறைகூறிச் சுட்டிக்காட்டும் நோக்கில் செய்தியாக வெளியிட்டமாதிரியும் ஆகி விட்டது. வல்லாண்மை கொண்டு நாளொன்றுக்கு 8 முதல் 10 காட்சிகள் ஓட்டிப் பிற பட நிறுவனங்களின் வயிற்றெரிசலைக் கட்டிக் கொண்ட எந்திரன் படத்தைப் பிறர் பார்க்கவும் வழி செய்தாகி விட்டது. உண்மையில் 2.10.10 அன்றே (படம் வந்த மறுநாள்) இணையத்தில இப்படம் வந்து விட்டது. அது தெளிவில்லாமல் இருந்தது. மறுநாள் தெளிவாகப்படம் வந்தது. அதில் இரைச்சல் இருந்தது. தினமணி தெளிவாகவும் இரைச்சலின்றியும் பதிவிறக்கம் செய்வதற்குரிய வலைமுகவரியை வெளியிட்டு நற்றொண்டு ஆற்றியுள்ளது. பிற பட நிறுவனத்தினர் மகிழ்ச்சியடையுமாறு செய்தி வெளியிட்ட தினமணிக்கு நன்றி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2010 3:52:00 AM
I Never knew that Dinamani would go LOW to such an extent - Ashamed of you Dinamani
By Srini.M
10/8/2010 2:42:00 AM
சன் டிவி யில் ரஜினி கட் அவுட்டுக்குப் பால் ஊற்றிய தறுதலைகளைப் பார்த்து மனம் வெதும்பிப்போனேன். கேவலம், ஒரு திரைப்படத்திற்கு ஒரு மானில முதல்வர் முதல் கடைக்கோடி பாம்ரன் வரை பணத்தையும் பொன்னான நேரத்தையும் வீணடிப்பதை உலகத்திலேயே தமிழகத்தில் தான் பார்க்க முடியும். அடே ரஜினி ரசிகா, சிந்திக்க உனக்கு மூளை இல்லை - தெரிந்ததுதான் -இருந்தாலும் சொல்கிறேன் - படம் எடுத்தவன்,டைரக்ட் செய்தவன்,நடிகன், நடிகை, இசையமைத்தவன் எல்லோரும் கோடிகளுக்கு ஈஸ்வரன்கள். அவனவன் போட்ட பணத்துக்கு பல மடங்கு எடுத்துக் கொண்டு இமயமலைக்கும் வெளிநாட்டுக்கும் கும்மாளமடிக்கப் போய்விட்டான். நீ எண்டா உன் பொழைப்பைக்கெடுத்துக்கொண்டு அவன் படம் வெற்றி பெறணும்னு அலையறே?? உன்னை மாதிரி அடி முட்டாள் இருக்கும் வரை, கலாநிதி மாறனும் ரஜினியும் இன்னும் பலகோடிகளில் பலபடங்கள் எடுப்பானுகள். தவறு அவர்கள் மேல் இல்லை - மரமண்டை ரஜினி ரசிகர்களே உங்கள் மேல் தான் தவறு. படம் படுதோல்வியடைய என் மனமார்ந்த பிரார்த்தனைகள். மனம் வெதும்பும் தமிழன்.
By thamizhan
10/8/2010 2:34:00 AM
கருணானிதி குடும்பத்தில் பலரும் கொள்ளையில் ஈடுபடுவது தெரிந்தது தான் ஆனால் கலாநிதி மாறன் அப்படி எதுவும் செய்யவில்லை அரசு பொறுப்பிலும் இல்லை. பாங்கில் லோன் வாங்கி டிவி ஆரம்பித்து படிப்ப‌டியாக‌ முன்னேறிய‌வ‌ர். 1993ல் இவ‌ர் டீவி ஆர்ம்பித்த‌போது ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி தான். க‌ருணாநிதி குடும்ப‌த்தை சேர்ந்த‌வ‌ர் என்ப‌த்ற‌காக‌ ம‌ட்டும் இவ‌ரை குறை சொல்லுவ‌து ச‌ரியில்லை. இவ‌ர் டீவியை ம‌க்க‌ள் விரும்பி பார்க்கிறார்க‌ள் அத‌னால் முன்னேறிய‌வ‌ர்.க‌வ‌ர்மென்ட் கான்ட்ராக்ட் எடுத்து சொத்து சேர்த்த‌வ‌ர‌ல்ல‌.
By Kalanithi
10/8/2010 12:17:00 AM
1.சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார். பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த் "பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி" எனக் தெரிவித்துள்ளார். செய்தி ஆதாரம் பி.டி.ஐ. நியுஸ். ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
By net
10/7/2010 11:57:00 PM
con.இப்ப மேட்டருக்கு வருவோம், மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள். இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் இந்த பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.
By net
10/7/2010 11:56:00 PM
con.கடவுள் பால்தாக்ரேயின் கொள்கையான பாசிச ஹிந்த்துவாவை பக்த்தன் ரஜனியும் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது.பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த். நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம். நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் பாசிச ஹிந்த்துதுவா சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது.இனிமேலாவது திருந்துவார்களா இஸ்லாமிய சமூக இளைஞர்கள்.
By net
10/7/2010 11:55:00 PM
just now fully watched the movie through your link, quite useless movie, all junk songs.....climax is pur vittalacharyar movie......i regret to waste my time like this.........
By sam
10/7/2010 11:37:00 PM
எனக்கு பண்ணாத பால்அபிஸேகம் உனக்கா ? எனது கோபம் தான் இது...............................
By கடவுள்
10/7/2010 10:43:00 PM
ராகுகாலத்தில் படம் வந்ததால்அபசகுநமா நடக்குது
By கடவுள்
10/7/2010 10:37:00 PM
தினமணிக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!
By kaka
10/7/2010 10:29:00 PM
அது எப்படி........?லிங்க் யாருக்கும் தேரியாது தினமணிக்கு மட்டும் தேறியும் .................... ராங் .??????????????????????????????? புடிங்க m .r. கலாநிதிமாறன்
By ajini fans
10/7/2010 10:24:00 PM
இந்த செய்தியையும் வாசகர் கருத்துக்களையும் பார்த்தால் பரபப்புக்காக செய்தி வெளியிடும் வியாதி தினமணியும் பீடித்துள்ளது போலும்.
By anniyan
10/7/2010 10:19:00 PM
என்னா கொடும சரவணன்
By saravanan
10/7/2010 10:14:00 PM
Though it is not right and it is a violation of copy rights, there should be no pity for Rajini or Maran. They are greedy and wanted to exploit innocent Thamizhs to amass wealth. Poor people are the victims for their greediness. Do we need a 60-year old guy to act in movies like 25-year old young man? Is there any dearth of Thamizh speaking handsome young man, to don the role, in Thamizh Nadu and Ezham? Stop the hero worship folks. Maran's family income is 740 million / year. How much of it goes to the charity? Probably a very small fraction. Our people need to be educated to recognize the exploitation by Maran, Karuna and Jaya families.
By Raja
10/7/2010 10:08:00 PM
(By Satish Kumar 10/7/2010 6:25:00 PM) //Dear Sir, you have published the website in the newspaper and you let every one know that, its more worst thing you have done to the producers and theatre owners, you should have intimated secretly to cyber crime or to the producers.// ஏம்பா இப்படி எல்லாம் சண்டி டிவிக்கு நித்யானந்தா சாமியார் மேட்டரைப் போட்டு பெண்கள் குழந்தைகள்னும் பாக்காம எக்ஸ் படம் போட்டு காமிச்சானே... அப்ப சொல்லியிருக்கணும். சாமியார் தப்பு செய்யறார் அவரை அரெஸ்ட் பண்ணுங்கண்ணு சண்டி டிவிக்காரங்க போலீஸ்லயும் அவங்க கையில இருக்கற கவர்மெண்டுலயும் சொல்லியிருக்கணும். அப்போ நீ எங்கப்பா போனே!
By பாமரன்
10/7/2010 9:54:00 PM
Movies are just for an entertainment... I watched the movie and the quality of this movie is good and entertaining and it proves that we Indians also can make a film equivalent to Hollywood standard. but I don't know why so much hype from the media. The so called fans becomes so stupid doing nonsense activities and it is so sad that the medias especially Sun TV encouraging these kind of idiotic stuffs.
By Karthik
10/7/2010 9:32:00 PM
Shame shame dinamani shame shame This movies is not original: copy from Hollywood movie Robin Williams in Bicentennial Man (1999) Copycats like Shankar, Goutham Menon, Mani Rathnam, K.S.Ravi kumar, etc…… are earning Crores and Crores, by simply Copying a Hollywood or European Movie…….. Those director are cheating w/ tamil peoples நால்ல கலபுரிங்கயா பீதிய
By salvi
10/7/2010 9:31:00 PM
I AGREE MR.PARTHIBAN COMMENT
By K.D.SIVAPRAKASH
10/7/2010 8:23:00 PM
Print is good. Thanks for the link.
By sam
10/7/2010 8:21:00 PM
IN PARIS THE FLIM WAS DIFFUSED IN FREE CHANEL ON 2ND OCT. MOREOVER THE PRINT WAS ALSO GOOD. BUTTHE FLIM IS NOT BAD.
By Paris EJILAN
10/7/2010 7:56:00 PM
oru mosamaana padathukku ivvlavu gallaattavaa?
By sundar
10/7/2010 7:53:00 PM
Enthiran oru dappa padam. As a robotics engineer i am ashamed with this flim. there is no creativity. Its usual tamil film." ENTHIRAN NOTHING BUT COMMERCIAL GRAPHICAL TAMIL MASALA FILM".
By ram
10/7/2010 7:48:00 PM
All are thieves. Kalanithi got back his money with big profits. Shankar got his big money for direction. Rajini got big amount from Kalanithi Maran. He says Thackarey as his God. He should be kicked in his ass out of Tamilnadu immediately. He likes only Karnataka and Maharashtra. He has been fooling Tamilnadu people for 35 years. Our pity people worship only people from other States. Kerala Cinema people disrespescted Kamalhasan for his award by Government. But we pray Keralites. Funny world. All are fooling the fools who are fans all around the world. Enthiran picture is a Junk one.
By Enthiri
10/7/2010 7:36:00 PM
கோடிக்கணக்கில் தமிழனின் பணம் சுருட்டப்படும் சுரண்டல் லாட்டரிபோல்தான் எந்திரன் படமும், சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்து தமிழ்ரசிகனை சந்தோஷப்படுத்தமுடியாதா? எந்திரன் படம் பிளாப் ஆனால் இதுபோன்றவர்கள் திருந்த வாய்ப்புண்டு,500 / 1000 கொடுத்து படம் பார்க்கும் தமிழன் திருந்தவேண்டும்,இந்த 160 கோடிகள் தொழிலில் முதலீடு செய்யப்பட்டால் ,பலருக்கு வேலை வாய்ப்பும்,நுகர்வோருக்கு பலனும் ,முதலீட்டாளர்களுக்கு லாபமும் கிட்டும்,எனவே இதுப்போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தரக்கூடாது,இதுவே சன் குழும கடைசிபடமாகவும்,ரஜினிக்கு பாடமாகவும் இருக்கவேண்டும்,
By தமிழன்
10/7/2010 7:32:00 PM
Dinamani you going too low... if police taking any action againts piracy,first they need to book a case againts you for publishing the website... soon you will be face the anti-trust case. Im not the Rajini fan, but the film is already an international success... It will break all possible box office record for any Indian film. Read todays CNN article about Enthiran (5page article) on their CNNGo website.. you will come to know about its success.
By Agathiyan
10/7/2010 7:31:00 PM
ENDIRAN movie unable to match Vijay's SURA.
By juggy
10/7/2010 7:26:00 PM
Rajini endra maratiya thamilan!!nadittha endhiran nicchayam kuppaiyalla kuppai medu
By Oomaiyan
10/7/2010 7:19:00 PM
எந்திரன் விஷயத்தில் தனி ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்ற கருத்தில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகள் ரஜினி ரசிகர்களையும் சன் நிர்வாகத்தையும் கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் எந்திரனுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்த தினமணி, டெக்கான் குரோனிக்கல் நாளேடுகளுக்கு சன் நிர்வாகம் விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கும் மேற்படி கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் எச்சரித்திருக்கிறதாம்.
By Shankar
10/7/2010 6:59:00 PM
எந்திரன் கோஷ்டி தந்திரக் கோஷ்டி, அடுத்த முதல்வராக எந்திரன் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்று தாஸ்மாக்கில் பேசிக்கொள்கிறார்கள்.
By SAMY
10/7/2010 6:42:00 PM
முரணான செய்தி. இன்டர்நெட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள மக்கள் தான் பார்க்க முடியும். ஆனால், அங்கே "எந்திரன்' திரைப்படம் இப்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறுகிறது. ஆனால், வேலூர், பாண்டிச்சேரி, திருத்தணி, ஒசூர் போன்ற சிறு நகரங்களில் இன்டர்நெட்டில் பார்ப்பவர்கள் குறைவு, இருந்தபோதும் கூட்டம் குறைந்து விட்டது. வெளியாகி ஒரு வாரம் ஆவதற்குள் பல திரையரங்குகளில் இருந்து "எந்திரன்' திரைப்படம் மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. இதற்கு இணைய தளத்தில் படம் வெளியானது காரணமாக இருக்க முடியாது. Abdul Rahman - Dubai, மனிதன் ஆகியோர் கூறியது நியாயமாய்த் தோன்றுகிறது. அதற்க்கு பாமரன் பதிலும் சரியே. மேற்க் கண்ட இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்ய முடியாதா? ஹி..ஹி..ஹி.. முடியும். உபுண்டு லினக்ஸ் பயன்புதினால். temp என்னும் folder-ல் படம் சேமிக்கப் பட்டிருக்கும். படம் முழுதும் பார்த்த பிறகு இங்கு 10MB to 15MB அளவில் படம் பிட்டு பிட்டாக விடியோக்கள் இருக்கும். மொத்தமாக எடுத்து ஏதாவது மென்பொருளைப் பயன்படுத்தி இணைக்கலாம்!
By இடி அமீன், உகாண்டா.
10/7/2010 6:37:00 PM
Dinamani koduttha link mattumilla...... megaupload koduttha linkkum supperrrr. aana onnu yenna theriyumaaaa..... Padam Dappppppppppppaaaaaaaaaaa Sariyaana Buildup, Vittaalaachariya senje Jaganmohinikki munnale ithu onnumeillaeeee
By Mohan
10/7/2010 6:34:00 PM
நிறைய இருக்குது என்பதறகாக சந்தணத்தை எங்கேயோ பூசிக்கொள்வானாம். அது மாதிரி பணத்தை இறைக்க கலாநிதி இருக்கிறார் என்று டைரக்டர் சங்கர் ஹாலிவுட்டுக்கு சவால் விடுகிறேன் என்று அம்புலிமாமா கதை விட்டிருக்கிறார். இராம்.நாராயாணனிடம் கொடுத்து இருந்தால் கூட இதை விட பெட்டரான படம் கொடுத்து இருப்பார். டப்பா படம்.
By Karthi
10/7/2010 6:30:00 PM
Dear Sir, you have published the website in the newspaper and you let every one know that, its more worst thing you have done to the producers and theatre owners, you should have intimated secretly to cyber crime or to the producers.
By Satish Kumar
10/7/2010 6:25:00 PM
dammi padaththai websitela kuda yaru parpparkal irunthalum thinamanikku thanks kappi padam
By thiruKUMARAN.A
10/7/2010 6:22:00 PM
idhellaam oru padam, idhukku poi ivvlavu buildup. indha stunts konjam paarunga, endiran padathula ALEX MARTIN rajini mask pottu panni irrukkaaru. Padathula Rajini onnumae pannala. Vethuvaettu! ALEX MARTIN endiranla panna stunts paarkaradhukku, Youtube la poi paarunga, ungalukkae puriyum.
By raja
10/7/2010 6:06:00 PM
Thanks Dinamani. Have seen the entire movie without spending a single rupee.
By Kris
10/7/2010 6:03:00 PM
Thanks Dinamani. Have seen the entire movie without spending a single rupee.
By Kris
10/7/2010 6:03:00 PM
இப்படி இந்த படம் பல வெப்சைட் ல படம் துபாய் ல போட்ட அன்னிக்கே வந்துடுச்சி தினமணி கொடுததல்ல ஒன்னும் பெருசா இல்ல படம் டப்பா
By Dr PRM
10/7/2010 5:44:00 PM
Enthiran is amega hit movie
By sunram
10/7/2010 5:40:00 PM
எந்திரன் வெளியானது முதலாம் திகதிதான். அடுத்த தினமே யாழ்பாணத்திலிருந்து இனையம் மூலம் வெளியாகியது. அதன் ஒலி,ஒளிதரம் குறைவாகவும் இருந்த‌தால். மூண்றாம் திகதி நல்ல தெளிவான வெளியாகியது. தமிழ்த் திரைப்படங்களை பெருமளவில் வெளியிடும் இனையத்தளங்கள் ஐரோப்பாவில் இருந்தே செயல் படுகிறது. இது தமிழ் சினிமாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஏனென்றால் தமிழ் படங்களுக்கு அதிகளவில் வசூலைக் குவிப்பதும் இந்த ஐரோப்பாதான்!
By Raja
10/7/2010 5:34:00 PM
மிக்க நன்றி.... தினமணி... i love u செல்லம்... :-) :-) firefox... addon - video download toolbar... YOU CAN DOWNLOAD THE STREAMING VIDEO... Enjoy :-) :-)
By sethupathy
10/7/2010 5:28:00 PM
YES THEATER KANA PINANU RATE EVAN POI PAPEN CHEIF MINISTER SOLLIUM KURAIKALA KANDIPA PADAM ODAMA IRUNTHA THAN INIMEL VARA POGUM PADAM INTHA MATIRI RATE SOLLA MATANGA MINIMUM TICKET RS.10 IRUKU RULES LA INAIKU ENTHA THEATERLA RS.10KU TICKET KETAIKUTHU INAIKU MINIMUM RATE RS.150 THAN ORU KUDUMME PAKUNUMUNA KALAIGER FAMILY MATIRI IRUNTHA RS10,000/ VENUM. ITHU KALAIGARKU THERIYATHA ENA APARAM ENA KASELAN PADAM KATHI THAN ENTHIRENUKUM
By santhosh
10/7/2010 5:07:00 PM
தியேட்டர்களில் கடணத்தை உயர்த்திக் கொள்ளை அடிப்பதைவிட, இணையதளத்தில் வெளியிடுவதில் தவறு இல்லை. முகவரியை வெளிட்ட ‘தினமணிக்கு’ நன்றி.
By Kumaran
10/7/2010 4:56:00 PM
Neengal Migavum sariayathoru kaariyathai seidhu ulleergal..Mikka Magilchi...
By Krish
10/7/2010 4:48:00 PM
Anyway ENDIRAN is a WASTE MOVIE. Its NOT WORTH in even watching this movie in website or DVD. Spend your time usefully, instead of wasting time for this Idiotic movie.
By Lakshman
10/7/2010 4:41:00 PM
மொக்க படத்துக்கு என்னா பில்டப்பு. காந்தாராவ் நடித்த விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போலவே இருக்குது. காதுல பூ சுத்துவாய்ங்கனு சொல்வாங்க, ஆனா நம்ம நவீன விட்டலாச்சார்யா ஷங்கரு எந்திரன் இரண்டாவது பாதியில் பூந்தோட்டத்தையே சுத்திவிட்டுட்டாரு. TERMINATOR, MISSION IMPOSSIBLE, I ROBOT, போன்ற படங்களில் இருந்து பல காட்சிகளை சுட்டுபோட்டு, THE BICENTENNIEAL படத்தைலிருந்து பெரும்பகுதியை அப்பட்டமாக‌ காப்பியடித்து விட்டிருக்கிறார் இந்த ஜெராக்ஸ் மன்னர் ஷங்கரு. பாவம் நல்ல மனிதர் ரஜினி, அவரை டம்மி பீஸாக்கிவிட்டாரு இந்த ஷ‌ங்கரு. ஐஸ்வர்யா ராய் எதோ துணை நடிகை ரேஞ்சுக்கு வந்து போகுது. மொத்தத்தில் படம் குப்பை, டப்பா. மூன்று மணி நேரம் வேஸ்ட்டு.
By Arvind Rengarajan, Trichy
10/7/2010 4:38:00 PM
நண்பர் Abdul Rahman அவர்களே எப்படி உள்ளீர்கள்?? எந்திரன் பார்த்து விட்டீர்களா?? நான் இப்பொழுது தான் பார்க்க போகிறேன்.. தினமணிக்கு நன்றி......:)
By Anniyan
10/7/2010 4:10:00 PM
... I don't know why there is no such a hype for the film acted y an od mn and old lady. I just happened to listen to a Melodious song in " Madarasa Patnam " . the song ,tune ad the lyric are excellent. Rahman's music contains ' high sonunding words with noisy music signifying nothing " and in no way an impartial observor ca find melodious.
By R.Krishnmrthy
10/7/2010 3:40:00 PM
K.CHINNIAH comments differently அவுங்க குடும்பத்தில் குமிபிடி சண்டை இருக்கு, அவுங்ககூட செய்துருக்கலம் என டீக்கடைல் பேச்சு . MATHI YOJIGIRANGALE - KUMBA KALAGAM YERPADUTHUMAI
By veeram
10/7/2010 3:23:00 PM
தினமணி கொடுத்துள்ள லிங்கைக் கொடுத்துப் பாத்தேன். நல்ல ஐடியா செய்திருக்கிறார்கள். அதை வெறுமனே பார்க்கத்தான் முடியும். டவுண்லோட் செய்ய முடியாது. அந்த வகையில் நல்லது. இது வெறும் தகவல் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தினமணி குறிப்பிட்டதுபோல் பிரிண்ட் தெளிவாக இருக்கிறது. எனவே யாராவது உள்ளடி வேலை செய்திருக்க வேண்டும். படத்தை வெளியிட்ட வெப்சைட் சீன வெப் சைட் போல் உள்ளது. கடந்த வாரம்தான் நம் துணை முதல்வர் சீன பயணம் செய்து திரும்பியிருக்கிறார். இரு நாட்டு உறவுகல் மேம்பட ஏற்பாடு செய்து நம் நாட்டுக்குத் திரும்புவதற்குள் இப்படி ஒரு வேலையை சீன வெப்சைட் செய்திருக்கிறது. பாகிஸ்தான் சீனான்னாலே இப்படித்தான்!
By பாமரன்
10/7/2010 3:10:00 PM
oorukkellam aaapu vaichieenga... ungaluku aaapu antha aandavana pathu vaichathu... linkkukku nandri dinamani... ippa than padam parthu mudicheen... thella theliva irukku....
By kaipulla
10/7/2010 3:07:00 PM
லிங்க் கொடுத்த தினமணிக்கு நன்றி..
By பாலா
10/7/2010 2:54:00 PM
hello dinamani.... unga escape avenue la neenga kollai adikiratha mudhala nirudhunga... appuram aduthavana pathi pesunga... whatever it may to give a link like this is showing ur vayitherisal... u r going to pay for it for sure...
By dinamani
10/7/2010 2:53:00 PM
It is true the link given by dinamani is correct. Any way I am not interested in watching it even if it is free. Now Rajni has now put Robot also to act with him - defacto actor. Hence it is better to watch cartoon - Tom and cherry. I do not understand why people are just paying hard earned money by paying high price ticket charges to watch it, when people have tendency to bargain price for a rupee or less - at veg venodrs who bring a load of vegitables and leaves on their heads /cart at our door step.
By veeram
10/7/2010 2:51:00 PM
Thanks, Dinamani, for providing us the link to watch Enthiran on internet,,,You have indeed done a great service to tamil film fraternity who have been done grave injustice by Sun TV, due to its highly paritioned and monopolized attitude in promoting its own and their relatives' films,,,Thanks once again,,,
By Innocent Citizen
10/7/2010 2:34:00 PM
A grandfather nearing 60 if not crossed 60 should not have acted and should have gracefully retired from the films and pursue a religious path. But unfortunately for the sake of money, he has paid a dear price. Secondly the sun pictures who have produced the movie have invested their ill gotten wealth into this venture anticipating a bonanza, but god had willed otherwise. It is time the cinema industry learn their lessons.
By S.Vasudevan
10/7/2010 2:34:00 PM
ninga ticket rate 200,300,500nu vitha netva pakkama theatrela poya parkmudiyamada venaingala
By raja
10/7/2010 2:29:00 PM
ok valiyanthu problam than athatkarha neega parkakudeya linkaum thanthal appade sir
By sameer
10/7/2010 2:17:00 PM
Dinamani is encouraging viewers to watch the movie online by giving the link is so cheap ...
By Pavithrq
10/7/2010 2:15:00 PM
வாசகர் பாமரன் மிக அழகாக சொல்லியுள்ளார் >> "ஒரு சாமியாரின் அந்தரங்கத்தை அம்பலப் படுத்துகிறோம் என்ற பெயரில் வீட்டின் குழந்தைகள் மனதைக் கூட கெடுத்தார்களே! அது பத்திரிகை தர்மம் என்றால் இதுவும் பத்திரிகை தர்மம்தான்" - VERY NICE... நித்யானந்தா விசயத்தில் சன் டிவி நடந்து கொண்ட விதம் வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது என்னவோ முற்றிலும் உண்மை. தன் கையில் பணமும், பதவியும், அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அகம்பாவத்தை அகற்ற வேண்டும். எந்த நிலையிலும் நிதானம் தவறுவது தவறு. By Abdul Rahman - Dubai very good comment
By indian
10/7/2010 2:01:00 PM
sabash sariyana adi ethu eppadi eruku.
By venkatesh
10/7/2010 1:50:00 PM
நேற்ற்று ரஜினி பால்தாக்கரேவை சந்தித்து ' பால்தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி' என்று சொன்னதால் தான் தமிழர்கள் கோபம் அடைந்துள்ளனர். ஏனென்றால் பால்தாக்கரே பல தமிழர்களை பாம்பேஇலிருந்து அடித்து விரட்டியவன். ரஜினி ஒரு சுத்த மராட்டியன் என்பதை நிருபித்து விட்டார்
By m.tamil babu
10/7/2010 1:44:00 PM
நன்றி தினமணி... படம் வரலனு இருந்த உங்க வாசகர்க்கு வெப்சைட் முகவரியிய குடிதிடீங்க ..... முட்ட பயன்களா.... தமிழன் வாழந்த புடிக்காத ???
By elumalai
10/7/2010 1:37:00 PM
Enthiran rajinikanth filim 100 natgal runaga veandum theater onar panathai eaduga veandum athanal kalangar avargal udan paathugappu thara veandum enthiran filim gu valga india valaruga tamilagam By.rajinipaulraj,
By rajinipaulraj
10/7/2010 1:24:00 PM
சிங்கப்பூரில் இந்திரன் படம் போட்ட திரை அரங்குகளில் கூட்டம் இல்லை . இந்த படத்தின் ஹீரோ ரஜினி இல்லை . ரோபோ தான் . Dubbing செய்த இங்கிலீஷ் படம் போல உள்ளது.
By Ravi
10/7/2010 1:23:00 PM
வாசகர் பாமரன் மிக அழகாக சொல்லியுள்ளார் >> "ஒரு சாமியாரின் அந்தரங்கத்தை அம்பலப் படுத்துகிறோம் என்ற பெயரில் வீட்டின் குழந்தைகள் மனதைக் கூட கெடுத்தார்களே! அது பத்திரிகை தர்மம் என்றால் இதுவும் பத்திரிகை தர்மம்தான்" - VERY NICE... நித்யானந்தா விசயத்தில் சன் டிவி நடந்து கொண்ட விதம் வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது என்னவோ முற்றிலும் உண்மை. தன் கையில் பணமும், பதவியும், அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அகம்பாவத்தை அகற்ற வேண்டும். எந்த நிலையிலும் நிதானம் தவறுவது தவறு.
By Abdul Rahman - Dubai
10/7/2010 12:47:00 PM
makkalai ematra ninikum sun tv ku ethu thevai than.
By Rajan
10/7/2010 12:33:00 PM
தியேட்டர் கட்டணம் கொள்ளையோ கொள்ளை சுத்தமில்லை சுகாதாரமில்லை, நாட்டில் லஞ்சம் ஊழல் குறுக்கு வழி கலாச்சாரம், சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற பேராசை, அநியாயம் அயோக்கியத்தனம் இதில் பெரும்பங்கு ஆளுங்கட்சி பேர்வழிகளால் இத்தனைக்கும் நடுவில் உங்கள் எந்திரன் படம் மட்டும் ஒழுங்காக தியேட்டரில் மட்டும் ஓடவேண்டும் என்பது எந்தவித்ததில் நியாயம்??? இதில் அதிர்ச்சி வேறயா உங்களுக்கு?! தினமணி எங்கே போய்க்கொண்டிருக்கிறது! இப்படிப்பட்ட செய்திக்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் தேவையா.
By Ravi
10/7/2010 12:33:00 PM
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பத்திரிகை தர்மத்தை எது மீறியிருக்கிறது? எல்லா பத்திரிகைகளும்தான் இப்படி செய்திகளைப் போடுகிறார்கள். கேட்டால் பத்திரிகை சுதந்திரம் என்கிறார்கள். எந்திரனைத் தயாரித்தவர்கள் டி.வி. ரேடியோ, பத்திரிகை என்று திரும்பும் பக்கம் எல்லாம் எரிச்சலைக் கிளப்புகிறார்கள். அந்தப் பத்திரிகையிலும் டி.வியிலும் ஒரு சாமியாரின் அந்தரங்கத்தை அமபலப் படுத்துகிறோம் என்ற பெயரில் வீட்டின் குழந்தைகள் மனதைக் கூட கெடுத்தார்களே! அது பத்திரிகை தர்மம் என்றால் இதுவும் பத்திரிகை தர்மம்தான்! வாழ்க பத்திரிகைகளின் தொண்டு.
By paamaran
10/7/2010 12:32:00 PM
please avoid to watch this link.
By Puratchirajan
10/7/2010 12:30:00 PM
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்படும்போது, அதை பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டு, அவர்களின் முகவரியையும் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த முகவரியை நாடிச் செல்ல படிப்பவர்களை அது தூண்டாதா? பத்திரிகைகளின் இச்செயல் பாலியல் தொழிலை மேலும் ஊக்கப்படுத்துவதுபோல் அமைந்து விடுகிறது. இந்த விஷயத்தில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்வது நியாயமென்றால் தினமணி இப்போது செய்திருப்பதும் நியாயம்தான்...
By மனிதன்
10/7/2010 12:29:00 PM
சன் டிவிக்காரனுங்க இவ்வளவு ஆட்டம் போட்டபோதே நான் நெனெச்சேன், இப்படி எதாவது ஒண்ணு ஏடா கூடமாப் போகத்தான் போவுதுன்னு. அது சயியாகிடுச்சு. அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணினான்கள் - இப்போ எவனோ நச்சின்னு ஆப்பு வச்சிட்டான். இது எவனோ உள் வீட்டு திருடனாத்தான் இருக்கும்.
By மின்னல்
10/7/2010 12:28:00 PM
தினமணி அநியாயம் செய்கிறதே
By kumaran
10/7/2010 12:26:00 PM
தினமணி நிதானம் தவறி தினமணி நிதானம் தவறி விட்டது.விட்டது.தினமணி நிதாதினமணி நிதானம் தவறி விட்டது.னம் தவறி விட்டது.தினமணி நிதானம் தவறி விட்டது.தினமணி நிதானம் தவதினமணி நிதானம் தவறி விட்டது.றி விட்டது.VERY BAD, VERY BAD, VERY BAD IN YOUR PART, AND YOU ARE GOING TO PAY FOR IT.
By rajani's fan
10/7/2010 12:22:00 PM
Who told the theatre owners to pay such exorbitant amount when they know very well this movie will be released in so many theatres. The business model is in favour of the producer and is not a win-win formula. No point complaining now. When you are in business particularly cinema business in India you must not take decision based on Rajini or other emotional basis. It should be based on cold facts and figures. In that basis Maran, Shankar and Rajini are winners. All others are.....????
By True_Patriot
10/7/2010 12:15:00 PM
தினமணி நிதானம் தவறி விட்டது. இப்படி இணைய முகவரியைக் கொடுத்திருப்பது முற்றிலும் தவறு. திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல் ஆகி விட்டது. உடனடியாக இணைய முகவரியை நீக்காவும்.
By Abdul Rahman - Dubai
10/7/2010 11:58:00 AM
அவுங்க குடும்பத்தில் குமிபிடி சண்டை இருக்கு, அவுங்ககூட செய்துருக்கலம் என டீக்கடைல் பேச்சு .
By K.CHINNIAH
10/7/2010 11:56:00 AM
DINAMANI HAVE SHOWED THE BLACK FACE........................... VERY, VERY BAD IN YOUR SIDE............
By pugazhendhi
10/7/2010 11:53:00 AM
THIS IS GOD'S HAND TO SAVE PEOPLE FROM THE CINEMA CRAZY THAT SPOILS THE GENERATION CAUSING POVERTY IN THE POOR FAMILIES
By Ebenezer
10/7/2010 11:45:00 AM
thanks for the link, thorattum ungal makkal sevai
By babu
10/7/2010 11:19:00 AM
thank you dinamani for the link
By mannan
10/7/2010 11:15:00 AM
thanks to dinamani super film karthi ka, mel malayanur
By karthi k
10/7/2010 11:05:00 AM
Manjal thundai thalaiyilum podalam.!
By Parasuraman
10/7/2010 10:40:00 AM
தினமணி உங்கள் நிலைமை புரிகிறது .கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது .ரஜினி உங்க ஆள் அதனால் அவர் படமும் ஓடவேண்டும். கருணாநிதி யும் அவர் குடும்பமும் வகையாக மாட்டவும் வேண்டும், நீங்கள் உங்கள் வகையறாக்களும் எல்லா சாணக்கிய தந்திரங்களும் செய்து பார்கிறீர்கள் .ஒன்னும் நடக்க மாட்டேன்றது. எல்லாம் அவாளுக்கே சாதகமாக முடிந்து விடுகிறது .கருணாநிதி உங்களை விட அதிகம் சிந்திக்கிறார் . வர முட்டாளாக இருந்தால் இன் நேரம் சட்னி பண்ணி இருபேள். அவர் பேரனும் அவரை விட புத்திசாலியாக இருகிறான் என்ன பண்றது .வயித்திலையும் வாயிலயும் அடிசுகிறதை தவிர வேற வழியிலை.இதெல்லாம் நாம கையிலையா இருகிறது . எல்லாம் பகவான் கையில் இருக்கிறது. திறமை சாலியை எதனை கை கொண்டு மறைதாலும் யாரும் மறைக்க முடியாது.
By parthiban
10/7/2010 10:36:00 AM
தினமணி உங்கள் நிலைமை புரிகிறது .கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கிறது .ரஜினி உங்க ஆள் அதனால் அவர் படமும் ஓடவேண்டும். கருணாநிதி யும் அவர் குடும்பமும் வகையாக மாட்டவும் வேண்டும், நீங்கள் உங்கள் வகையறாக்களும் எல்லா சாணக்கிய தந்திரங்களும் செய்து பார்கிறீர்கள் .ஒன்னும் நடக்க மாட்டேன்றது. எல்லாம் அவாளுக்கே சாதகமாக முடிந்து விடுகிறது .கருணாநிதி உங்களை விட அதிகம் சிந்திக்கிறார் . வர முட்டாளாக இருந்தால் இன் நேரம் சட்னி பண்ணி இருபேள். அவர் பேரனும் அவரை விட புத்திசாலியாக இருகிறான் என்ன பண்றது .வதிளையும் விளையும் அடிசுகிறதை தவிர வேற வழியிலை.இதெல்லாம் நாம கையிலையா இருகிறது . எல்லாம் பகவான் கையில் இருக்கிறது. திறமை சாலியை எதனை கை கொண்டு மறைதாலும் யாரும் மறைக்க முடியாது.
By parthiban
10/7/2010 10:33:00 AM
எல்லா படங்களையும் டவுன்லோடு செய்ய www.torrentz.com இதை பெரும்பாலும் செய்வது வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் தான். ஏனெனில் வெளிநாட்டில் தமிழ்படங்ளை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
By K. S. Jayakumar
10/7/2010 10:31:00 AM
news about Enthiran was seen by us. really we s shocked toread the news. pity for theatre owners. ulaga and friends
By vkthirunavukkarasu
10/7/2010 10:30:00 AM
ellaam sari, link illaama news pottirukkalaam. Neengale linkai kodutthu, vilambaram koduthirukkeenga. Neenga ozhungaa police-kkoo, padakuzhuvinarukkoo anuppi irukkalaam.... thevaiillaama link-ku ad kodukireenga.
By kani
10/7/2010 10:21:00 AM
dinamani always giving news against rajinikant and enthiran.. i dont know wat actually they expecting...even todays cartoon by mathi also some wat irritating..if some one take film like avathar for ten year means you people appreciating.. but if shankar our indian make the film like that means you peoples are expecting it have run away... this is indians... we rocks with our jeolous...
By Arun
10/7/2010 10:14:00 AM
லிங்க் ​கொடுத்த தினமணிக்கு நன்றி.
By Anand
10/7/2010 10:14:00 AM
தியேட்டர்களில் கடணத்தை உயர்த்திக் கொள்ளை அடிப்பதைவிட, இணையதளத்தில் வெளியிடுவதில் தவறு இல்லை. முகவரியை வெளிட்ட ‘தினமணிக்கு’ நன்றி.
By மாவீரன்
10/7/2010 10:14:00 AM
stupid news all movies are available in net within 2-3 days there is nothing to surprise ???
By ragunath
10/7/2010 9:46:00 AM
people ! you have other work to do
By ram
10/7/2010 9:41:00 AM
போட்ட முதலை குறுகிய காலத்தில் எடுத்தாக வேண்டிய கட்டாயம் பல தியோட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. அது ஒரு சந்தை உத்தியே தயாரிப்பாளர் எதிர்பார்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது தெளிவான சரி இந்த முகவரி அணைவரும் சென்று பார்க்க வசதியாக இருக்கும். தினமணிக வணிக்க.
By Unmai
10/7/2010 9:35:00 AM
thanks dinamani. i never intended to pay for karuna dog family. but still wanted to watch enthiran for rajini. thanks for the link
By senthil
10/7/2010 9:30:00 AM
neengale linkai kodukkireengala
By kani
10/7/2010 9:22:00 AM
ஒரே ஊரில் பல தியேட்டர்களில் வெளியிட்டால் எப்படி ஓடும்? அது மட்டுமிட்ரி தியேட்டர் கட்டணங்களும் அநியாயம்.
By Solomon
10/7/2010 9:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக