வெள்ளி, 19 மார்ச், 2010

இந்தியா சிறந்த நட்பு நாடு; ராஜபட்ச புகழாரம்



கோலாலம்பூர், மார்ச் 18: இந்தியா சிறந்த நட்பு நாடு என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறினார்.சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையின் வடக்குப் பகுதியில் இந்தியா பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ரயில் பாதை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதற்காக இலங்கையை இந்தியா தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்ததாக அர்த்தமாகிவிடாது. இந்தியா அண்டை நாடு. அமைதி காலத்திலும் சரி, யுத்த காலத்திலும் சரி இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.அம்பாந்தோட்டை துறைமுக வளர்ச்சிப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அங்கு சீனா கடற்படை தளம் அமைக்க விரும்புகிறதா என்று கேட்டபோது, சீனாவுக்கு அதுபோன்ற விருப்பம் இல்லை என்றார்.இலங்கையை ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு எதிராக பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அது சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இலங்கை மண்ணை தவறாக பயன்படுத்த அனுமதி இல்லை. நாங்கள் அணி சேரா நாடுகள் அமைப்பில் உள்ளோம் என்றார் ராஜபட்ச.இந்தியாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்முதல் செய்யுமா என்று கேட்டபோது இப்போதைக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.போருக்கு பின்னர் சீனாவிலிருந்து கப்பலில் ஆயுதங்கள் வந்தது. அது எனது நண்பர் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவின் வேலை. ஆனால் அவற்றை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். இனி அதிக அளவில் ஆயுதங்கள் தேவையில்லை என்றார் அவர்.
கருத்துக்கள்

பேரினப் படுகொலைகளில் இந்தியாவே வித்தாயும் விழுதாயும் ஊற்றாயும் நாற்றாயும் மூளையாயும் கையாயும் செயல்பட்டதால் நட்பு நாடு என்று பாராட்டத்தானே வேண்டும். ஆனால் சிங்கள மக்கள் மீதான அன்பினால் அவ்வாறு நடந்து கொண்டதாக எண்ணினால் அது தவறு. அவ்வாறாயின் திருவாட்டி பண்டாரநாயகா காலத்தில் சிங்கள இளைஞர்களைப் படை கொண்டு இந்தியா அழித்ததேன்? அதைச் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் இந்தியா தமிழினப் பகை நாடு என்பதும் உண்மைதான். ஆனால் இந்திய மக்கள் மனித உரிமையை நேசிப்பவர்கள். இனப்படுகொலைகளுக்குக் காரணமான அரசுகள் வீழ அவர்களே துணை நிற்பார்கள். அபபொழுது நட்பு நாடும் பகைநாடாகும். நண்பரும் பகைவராவர். போர் வணிகத்தில் நிலைத்த நட்பிற்கு இடமில்லை என்பதை இராசபக்சே புரிந்து கொண்டால் அவரது வீழ்ச்சியை அவர் தடுக்கலாம். இல்லையேல் வீழ்வது உறுதி! தமிழர் வென்று வாழ்வது உறுதி! என்றும் வெல்லட்டும் தமிழ் ஈழம்! மலரட்டும் புது உறவு! ஒழியட்டும் போர்க் கொலைகள்! வாழட்டும் மனித நேயம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 4:16:00 AM

mele theriyum manithan ponra uruvil iruppavanin nilal padathai thyavu seithu pitasutikkaatheerkal koodi punniyam ungkalukku undaakum paarkka sakikkavillai ilntha kayavanai.

By anbu
3/19/2010 1:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக