புதன், 17 மார்ச், 2010

தனி ஈழ கொள்கையை கைவிட்டது இலங்கை கட்சி



கொழும்பு,​​ மார்ச் 14:​ விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தனி ஈழ கொள்கையை கைவிட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த கட்சி,​​ இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் உறுதிபூண்டுள்ளது.பல ஆண்டுகளாக தனி ஈழத்தை ஆதரித்து வந்த தமிழ் தேசிய கூட்டணி தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ளது இலங்கை அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட பின் இலங்கையில் தனி ஈழத்துக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அடுத்த கட்ட பின்னடைவு இது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இலங்கையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.​ இதனை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டணி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.அதில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி இணைந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.​ 1987-ல் ​ ஏற்பட்ட இந்திய-​ இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் அப்பகுதிகளுக்கு பிராந்திய சுய ஆட்சி வழங்க வேண்டும்.இலங்கையில் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் கட்சி போராடும்.​ இது தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை பிரித்ததன் மூலம் இந்திய-​ இலங்கை ஒப்பந்தத்தை அரசு மீறிவிட்டது.​ இலங்கையில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுத்து வந்துள்ளன என்றும் தமிழர் தேசிய கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் பலமுறை கவலை தெரிவித்தும் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தவில்லை.​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறி தமிழர்களுக்கு எதிராக பலமுறை மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களும்-​ முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​ இதனிடையே,​​ "இலங்கையில் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அமைச்சர் திசா விதாரனே குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துக்கள்

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டோம்; ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன எனப் பேரறிஞர் அண்ணா தெரிவித்தது போன்று யாரும் அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாகத் தமிழ் ஈழக் கோரிக்கையை எழுப்பா விட்டாலும் அதற்கான கட்டாயத் தேவை உள்ளதை அவர்களும் அறிவார்கள்; எதிராளர்களும் உணர்வார்கள். ஆரிய இந்தியத்தை நம்பியுள்ள அரசியல்வாதிகள் அரைச் சிங்களர் போன்று சில பேசலாம். எனினும் உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று என்னும் தெய்வப்புலவரின் கணிப்புரை (குறள் 890) அறிந்தவர் அறிவர் தமிழ் ஈழமே தீர்வு என்பதை. வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ இந்திய நட்புறவு! மலர்க மனித நேயம்!

தமிழ் ஈழ வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/17/2010 3:41:00 AM

தினமணி ஏன் திரித்துக் கூறுகிறது? தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் தனி ஈழக் கொள்கையைக் கைவிடுவதாக பறைசாற்றவில்லை. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனி ஈழத்திற்கான போராட்டம் பற்றி எதுவும் முன்மொழியப்படவுமில்லை, அதே நேரத்தில் தனி ஈழக் கருத்து கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்படவில்லை.

By பாலா
3/16/2010 4:30:00 PM

தனி ஈழக்கொள்கையைக் கைவிட்டு சிங்கள அரசுடன் இணைவது தான் இலங்கையில் நிரந்தர அமைதியைக் கொண்டுவர வழிவகுக்கும். இது ஒரு நல்ல சகுனம். ஏனெனில் இரங்கையில் அமைதிக்கெடுத்ததும் கெடுப்பதும் இந்தியாதான். சிங்க அரசு இலங்கை மீது இந்தியாவின் மேலாதிக்கத்தை முறையாகக் கட்டுப்படுத்திவிட்டது. அத்துடன் சீனாவையும் இருத்தி தமிழரின் போராடும் குழுக்களையும் அழித்து இந்தியாவின் மேலாதிக்கத்திற்கான ஓட்டைகளை அடைத்துவிட்டது. தமிழர்கள் மேலும் இந்தியாவுடன் இணையாது சிங்கள அரசுடன் இணைந்து அமைதியான வாழ்க்கையை பிரணமிக்கவேண்டும். தமிழர்களுக்குச் சிங்களம் உரிமை கொடுக்காவிட்டாலும் சிங்களவனுடன் சேரந்து தமிழரை அழித்தவர்களுக்காவது பிரச்சனை கொடுத்து அவர்கள் அமைதியைக்குலைத்து விடலாம் அல்லவா? நல்லது நடக்கட்டும்

By Raj
3/16/2010 5:15:00 AM

Yenda abcd, donot blame India for every thing.You fools never change.Donot forget the food pockets from Indian Helicopter and sunami relief now for all handicapped srilankans artificial hands and legs. You all minority living in srilanka 10sq.Km.India such a big country always think about you and afteryou.We have lot of other things to do.Always your imaginations are wrong including your LTTE actions. If you have guts go to srilanka and protest against your leader Raja bakshey or helping China etc.,

By rammya
3/16/2010 1:19:00 AM

Hai srilankan tamilan, so muslims are not tamilans in your tamil ethnic stature. How can you expect the whole world will support the veena pona peelam. How many people you killed in thunukkai torture camps. Read in the SOODDRAM . COM. All the human right violations by the Attaikalakiya LTTE.

By Also Tamil
3/15/2010 9:44:00 PM

Where is "KUSUNTHAN" AND Scratching Monkey "OOPU". Most importantly VEENAPONA "NAAN VEEN". I think all went for Telugu new year ugadhi celebrations.

By Also Tamil
3/15/2010 9:40:00 PM

ithil கிழக்குவாசித்தமிழன் entru podavan unmayai srilankan tamilanai iruka maatan. avan oru muslim. en poi solurai?

By srilankan tamilan
3/15/2010 9:03:00 PM

Indian Bastered behind this statement. We want to ___________(dash ) India....If India Have Cuts directly should fight with LTTE.... Indian and Indian Military are Coy.....Every One Know that...

By abcd
3/15/2010 8:33:00 PM

ஈழம் என்பது வடக்கு மட்டும். கிழக்கில் பெரும்பான்மை முஸ்லிம்கள். இனி ஒருபோதும் கிழக்கு இணைப்புக்கு அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வடக்கில் படித்த படம் அப்படி!! புலிகள் அவர்களுக்கு செய்த துரோகம் அப்படி!! நீங்கள் நினைத்ததை செய்து கொள்ளுங்கள் ஆனால் கிழக்கை விட்டு விடுங்கள். கிழக்கு முஸ்லிம்களின் பூமி. அங்கே நாங்களும் அவர்களும் இணைந்து நிம்மதியாக வாழ்கிறோம்.பெரும்பான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை கலந்து ஆலோசிக்காது அரசுகள் எடுத்த எதேச்சதிகார முடிவு இந்த இணைப்பு ஆனால் முஸ்லிம்கள் இன்று படித்து விட்டார்கள். இன்னும் அவர்களை ஏமாற்ற முடியாது. பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கும் ஒரு முடிவு வாக்களிப்பில் தோற்றுப் போகும்.

By கிழக்குவாசித்தமிழன்.
3/15/2010 5:35:00 PM

அரசியல் வாதிகள் தங்களின் சுய லாபதிற்காக பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு எதிராகவே முடிவுகளை எடுக்கின்றனர். நமது ஈழத்து சகோதர சகோதரிகள் அமைதியுடனும், கண்ணியத்துடனும் பொருளதார மேன்மையுடனும் வாழ ஈழமே இறுதி தீர்வாகும்.

By தஞ்சை ராஜு
3/15/2010 3:55:00 PM

How this party can deside? Is that people desire? let the people to deside.

By Sha
3/15/2010 1:52:00 PM

Certain things cannot be spoken at certain times. and it is under stood. History will teache lessons to people who are trying to supress others and the dreams of those who sacrified their lives will come true. So nothing to worry

By shankar
3/15/2010 1:21:00 PM

It is a good statement by the tamil eelam political party. In present conditions saying that eelam has to be independant from being inside srilanka is against law and hence to protect themselves they have clearly stated N & E together as tamil land in lanka with power for self determination and self rule. Tamils outside have the power to still argue for independant eelam which is the real aspiration of all i=united world tamils.Valaga tamil. velka tamil eelam

By babu
3/15/2010 11:06:00 AM

Politcal parties can never subotage people aspiration, they may be forced to play down taking the situation into account. For the damage it has caused on the Tamil mindset sinhalese have to pay a heavy price that is dividing srilanka into two one for Ellam and other for sinhalese

By sakthi
3/15/2010 9:12:00 AM

STUPID AND NARROW MINDED INDIA IS BEHIND THIS! THAT IS FOR SURE.

By maran
3/15/2010 7:43:00 AM

We Tamils worldwide know who is behind all these drama and how Tamil alliance are being forced to give such statement. Tamil enemies still playing the bloody old tricks to avoid the freedom of Tamil Eelam...LET THEM PLAY!

By Karigalan-Malaysia
3/15/2010 7:33:00 AM

he...he...he... Prabhakarn is still alive.... He will coma back and lead the Eleam fight...... he...he...he...

By koopu
3/15/2010 5:44:00 AM

இனித் தமிழர்களாகிய எமது வாழ்வில் பிரிக்க வேண்டியது சிங்களமும் தமிழும், பிரிக்க முடியாதது தமிழரும் தமிழீழத் தாயகமும், அரச இராணுவ வெறியர்கள் உணர வேண்டியது, எமது போராளிகள் புதைக்கப்படவில்லை, விதைக்கப் பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் எமது இனிய உறவுகளையும், போராளிகளையும் இழந்ததை மனதிற் கொண்டு, தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவீர்!!! நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவோம்!!! புது யுகம் படைப்போம்!!!! சுதந்திர தமிழீழம் மலரும்!!! ஐ.நாவில் எமது தமிழீழக் கொடி பறக்கும்!!!!

By Next year in Tamil Eelam
3/15/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக