சனி, 20 மார்ச், 2010

தமிழக அரசு அலுவலகங்களை இணையம் மூலம் இணைக்க ரூ. 22 கோடி



தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை அலுவலகங்கள், மாவட்ட அளவிலான அலுவலகங்கள், கோட்ட, வட்டார அளவிலான அலுவலகங்கள் ஆகியவற்றை இணையம் மூலம் இணைக்கும் தமிழ்நாடு பெரும்பரப்பு வலை இணைப்பு ரூ. 22 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்படும்.கோவையில் உருவாக்கப்பட்டு வரும் "டைடெல்' தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் வரும் மே மாதத்தில் நிறைவடையும். 2007-08-ல் மென்பொருள் ஏற்றுமதி ரூ.28,426 கோடியாக இருந்தது.2008-09-ல் இது ரூ. 36,680 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச கலர் டிவிக்கள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டு இதுவரை ஒரு கோடியே 8 லட்சம் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 44 லட்சத்து 80 ஆயிரம் கலர் டெலிவிஷன்கள் 2010 டிசம்பருக்குள் வழங்கப்படும். இதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.
கருத்துக்கள்

பாரட்ட வேண்டிய திட்டம். எனினும் இணையப் பதிவுகள் தொடக்கத்துடன் நின்று விடுகின்றன. அவ்வாறில்லாமல் அன்றன்றைக்குப்பதிவுகள புதுப்பிக்கப்பட்டுப் பொது மக்கள் இணையம் வழியாகத் தகவல் பெறவும் விண்ணப்பிக்கவும் ஆணைகள் பெறவும் வழிவகை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக