சனி, 20 மார்ச், 2010

22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை: தமிழக அரசு



சென்னை, மார்ச் 19: ""தமிழகத்தில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2010-2011-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற பின், 87 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இதற்காக, அவர்களின் மரபு உரிமையர்க்கு ரூ.5.7 கோடி பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவுள்ளன. பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அ.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் எஸ்.எம்.கமால், ப.ராமசாமி, பேராசிரியர் ர.சீனிவாசன், வ.சு.செங்கல்வராய பிள்ளை, கவிஞர் வெள்ளியங்காட்டான், நெ.து.சுந்தரவடிவேலு, டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், மயிலை சிவமுத்து, காழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, கே.பி.நீலமணி, கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியன், அ.திருமலைமுத்துசாமி, நவ்ராஜ் செல்லையா, திருகூடசுந்தரம், பேராசிரியர் சுந்தர சண்முகனார், தஞ்சை ராமையாதாஸ், கவிஞர் தாராபாரதி, அருதனக்குட்டி அடிகளார், சரோஜா ராமமூர்த்தி, அ.சீனிவாசன் ஆகியோரின் படைப்புகள் என மொத்தம் 22 சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.
கருத்துக்கள்

பாராட்டுகள். இருப்பினும் இதுவரை நாடடுடைமையாக்கப்பட்ட நூல்களை அரசே குறைந்த விலைக்குக் கிடைக்கும் வகையில் அச்சிட்டுப் பரப்பினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக