ஞாயிறு, 15 நவம்பர், 2009

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அம்பலம் ஆகிவிட்டது: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு



சென்னை, நவ.14: மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தபோது, அங்குள்ள தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று தமிழக மக்கள் ஒன்றுபட்டு வலியுறுத்தியபோது, "இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட முடியாது' என்று பிரதமர் மறுத்தார்.
இந்த நிலையில், ""இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறும் மத்திய அரசுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த அக்டோபர் 15-ம் தேதி இந்தியப் படை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது'' என்று இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா இப்போது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டபோதும் ராணுவ ரீதியாக தலையிட மறுத்த மத்திய அரசு, ராஜபட்சயை காப்பாற்ற ராணுவத்தை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
மேலும், இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் மத்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க் கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக மக்கள் இனியாவது மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

பண்டாரநாயகா காலத்தில் சிஙக்ளர்களைக் கொல்ல இந்தியப்படைசென்றது. பின்னர் இந்திய அமைதி கொல்லும் படை மூலம் தமிழர்களைக் கொன்றது. இருந்தும் இந்தியத்தை நம்பிய ஈழத் தமிழர்களின் தமிழ் ஈழ இறையாண்மையை ஒழிக்க இந்தியப் படை சென்று வருகிறது. சிங்களர்களுக்கும் அறிவு இல்லை. ஈழத்தமிழர்களுக்கும் அறிவு இல்லை. தங்களைக் கொல்வதற்காக ஆயுதம் ஏந்தினாலும் காப்பதற்காக ஏந்துவதாகக் கருதி உயிர் இழக்கிறார்கள். இலங்கை முழுவதும் தமிழர்களுக்கே உரிய நிலமாக இருந்தது என்பதைச் சிங்களர்கள் உணர்ந்து இனியேனும் திருந்துக !தமிழர்களைக் கொல்லும் போரில் திறமையான சிங்கள இளைஞர்களும் உயிர் இழக்கிறார்கள் என்பதை உணர்க! உயிரிழந்த உறுப்பு இழந்த துணை இழந்த குடும்பத் தலைமையைஇழந்த உங்கள் இனத்தவரை எண்ணிப் பாருங்கள்! இலங்கைக் குடியரசு, ஈழக் குடியரசு, இணைந்த ஈழ- இலஙகைக் கூட்டமைப்பு மூலம் உலகில் வலிமை வாய்ந்த நல்லரசாக மாறுங்கள். வெல்க தமிழ் ஈழம்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2009 3:17:00 AM

Dear Sivanesan, If India is the power in the SE Asia then why P Chidambaram asked US help to extradite the suspects involved in Bombay attack from Pakistan? Why can’t India do itself? Why India can’t recapture territory invaded by China? Even Srilankan government won’t listen you. Have you got any friends around your country? India is the power in the SE Asia is a big joke :)

By Baskar
11/15/2009 3:07:00 AM

Eelam supporters should understand that india is the power in the south east asia. What way it is going to help the eelam tamils by opposing India? Even if you want to achieve a independent nation for eelam tamils, you need the support of India. You people trust the coward prabakaran too much...Now unable to digest his absence........

By B Sivanesan
11/15/2009 2:25:00 AM

We all know about the double standard of our indian govt. Any one stands of truth will be ashamed of indian attitude. As always, the "first victim of war is truth".

By kirukkan
11/15/2009 2:01:00 AM

Mr.Nedumaran, You people not worhty to live in India.You interprate every statement against Indias Unity. You people should bearrested and put inside or you can go to Srilanka and help your EELM Tamils to reconstruct their life. Atleast work for the money you got it from LTTE. We still njot forget Kallathonis. First let the Foreign living refugees should understand because of their wish to extend their stay makes the innocent people in srilanka worst. Donot suppoer still LTTE in the name of Tamil which is a terror organisation doing Drug dealings,Smuggling,Kidnapping for getting Arms. India & Indian people help lot of refugees in Tamilnadu and srilanka in a properway. Keepquiet or get out from India

By indiana
11/15/2009 1:40:00 AM

உலகமே சேர்ந்து அடித்தது கூட பரவாயில்லை எங்கள் தலைவர் சமாளித்து இருப்பார்.ஐ.நா குறைந்த பட்சம் போர் விதிமுறைகளை கொஞ்சம் கவனித்திருந்தலே போதும்( இந்த இந்திய அரசிக்கு இருக்கு ஆப்பு தமிழர்களை கொன்றொழிக்க சிங்களவருக்கு உதவியதன் மூலம், இந்தியா தனக்கு தானே குழி தோன்றியுள்ளது. ஈழ தமிழர் இனிவரும் காலங்களில் வேடிக்கை பாப்போம். .உசாந்தன்

By usanthan
11/15/2009 12:44:00 AM

உலகமே சேர்ந்து அடித்தது கூட பரவாயில்லை எங்கள் தலைவர் சமாளித்து இருப்பார்.ஐ.நா குறைந்த பட்சம் போர் விதிமுறைகளை கொஞ்சம் கவனித்திருந்தலே போதும்( இந்த இந்திய அரசிக்கு இருக்கு தமிழர்களை கொன்றொழிக்க சிங்களவருக்கு உதவியதன் மூலம், இந்தியா தனக்கு தானே குழி தோன்றியுள்ளது. ஈழ தமிழர் இனிவரும் காலங்களில் வேடிக்கை பாப்போம்.

By usanthan
11/15/2009 12:39:00 AM

மத்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க் கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மக்கள் இனியாவது மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. There is only rational for this is that Sonia and Chithambaram must have got bribe from Rajapakse

By Ram Chetty
11/15/2009 12:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக