சனி, 21 நவம்பர், 2009

பாம்பன் மீனவர் குடிசைகளில் கருப்புக் கொடி



ராமேஸ்வரம், நவ.20- இலங்கை கடற்படைத் தாக்குதலை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாம்பன் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சுமார் 200 மீனவர் குடிசைகளில் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளன.

மேலும், 12 கடல் மைல் தாண்டி மீன் பிடிக்கும் படகுகளுக்கு 9 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி உலக மீனவர் தினமான நவ.21ம் தேதியை கருப்பு தினமாக பாம்பன் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கருத்துக்கள்

கடந்தமுறை தலைவர் உரைத்தது போன்று… எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். இந்த வரலாற்று சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்த கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாக குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாரளமான உதவிகளையும் வழங்கி தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். இந்த சந்தர்பத்திலே தேச விடுதலைபணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமூகத்திற்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியமான சுதந்திர தமிழீழத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக. தமிழரின் த

By Ellalan
11/21/2009 2:30:00 AM

இலங்கை சிறையில் உள்ள இந்திய கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது: எஸ். எம். கிருஸ்ணா [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:25.15 AM GMT +05:30 ] இலங்கை சிறைகளில் இருந்து சுமார் 40க்கும் அதிகமான இந்திய கைதிகளை மீட்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்திய கைதிகளை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என, தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எழுதியிருந்த கடிதத்திற்கு அவர் எழுதிய பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, இலங்கை இந்தியாவிற்கு இடையிலான கைதிகளை பரிமாற்றிக் கொள்ளும் உடன்படிக்கையின் கீழ் இரண்டு நாடுகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த விடயம் தொடர்பில் பேச்சுநடத்தும் பொருட்டு இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By Ellalan
11/21/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக