வியாழன், 10 செப்டம்பர், 2009

விவசாயத் துறை பின்னடைவுக்கு
பசுமைப் புரட்சியே காரணம்:
நம்மாழ்வார் குற்றச்சாட்டு



சென்னை, செப்.9: இந்தியாவில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவுக்கு பசுமைப் புரட்சி ஏற்படுத்திய விளைவுகளே காரணம் என இந்திய இயற்கை உழவர் இயக்க நிறுவனர் கோ. நம்மாழ்வார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற "தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம்' பற்றிய கருத்தரங்கில் நம்மாழ்வார் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு வேலி நிலத்தில் 1000 கலம் நெல் மகசூல் எடுத்த பெருமைக்குரியவர்கள் நம் விவசாயிகள். இதனை கல்லணையில் உள்ள கரிகாலன் சிலை அருகில் உள்ள பாடல் வரிகள் மூலம் நாம் அறியலாம்.

ஆனால் பசுமைப் புரட்சியின் மூலம்தான் விவசாய உற்பத்தி அதிகரித்து என தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

பசுமைப் புரட்சி என்பது சந்தைக்கான உற்பத்தியை நோக்கமாகக் கொண்டது. தேவையற்ற இடுபொருட்களைப் பயன்படுத்த விவசாயிகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வயல்களில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நம் மண் மட்டுமின்றி உணவும் நஞ்சாகி விட்டது. இதனை உண்ணும் மனிதர்களுக்கும், மாடுகளுக்கும் பல்வேறு வியாதிகள் வருகின்றன.

இன்றைய விவசாயத் துறையின் நெருக்கடிகளுக்கு இந்த பசுமைப் புரட்சியின் விளைவுகளே காரணம் என்றார் நம்மாழ்வார்.


கருத்துக்கள்

Dinamani, it's great that you are dare to publish such kind of Good News.

By ssd
9/9/2009 9:31:00 PM

Ayya, Ninga intha mannukku saithuvarum uthavikku kodanakodi Nanri Dhinakaran

By DHINAKARAN
9/9/2009 8:21:00 PM

நம்மாழ்வார் அய்யா அவர்களே! உலகம் முழுக்க நீங்களும், உங்கள் உலக நண்பர்களும் செய்துவரும் இந்த தன்னலமற்ற விழிப்புணர்வுப் பணி என்றும் தொடரட்டும். பூச்சிக்கொல்லி மருந்து, மற்றும் உரக் கம்பெனி முதலாளிகளுக்காக மட்டுமே செயல்பட்டு வரும் நம் அரசாங்கம், வந்திருக்கும் ஆபத்தை இப்போதாவது உணரட்டும். தற்சார்புடன், தன்னிறைவோடு வாழ்ந்த விவசாயிகளை, தற்குறி முதலாளிகளிடம் அடகு வைத்த பசுமைப் புரட்சி ஒழியட்டும். பதினைந்து வருடங்களுக்கு முன், உங்களொடு பேசிய போதுதான் நான் உண்மை மனிதனானேன். இதைப் போன்ற செய்திகளையும் வெளியிடும் தினமணிக்கு நம் வாழ்த்துக்கள்!

By Murugadoss K
9/9/2009 7:46:00 PM

Why our govt is not considering the facts and the suggestions provided by Namalvazar. He is a graduate from Agri university.

By kuku
9/9/2009 7:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக