வெள்ளி, 23 ஏப்ரல், 2021
குவிகம் அளவளாவல் : தி.சானகிராமன் நினைவலைகள்: 25.04.2021
புதன், 21 ஏப்ரல், 2021
என்னூல் திறனரங்கம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
சித்திரை 12, 2052 / ஞாயிறு / 25.04.2021 காலை 10.00
இலக்குவனார் திருவள்ளுவன் நூல்கள் குறித்த
இணைய வழித் திறனாய்வரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: முனைவர் ஆதிரை முல்லை
தலைமை: மொழிபெயர்ப்பு அறிஞர் முனைவர் பாலசுப்பிரமணியன்
ஆய்வுரைஞர்கள்:
புலவர்மணி முது முனைவர் இரா.இளங்குமரன்
நாவரசு முனைவர் ஒளவை நடராசன்
முனைவர் பா.வளனரசு * பேராசிரியர் மரிய சோசப்பு சேவியர் * மருத்துவமாமணி செயப்பிரகாசு நாராயணன் * அறிஞர் தோழர் தியாகு * கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ * முனைவர் ந.தெய்வசுந்தரம் * சித்தர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப. நி) * கணிணி வல்லுநர் முனைவர் சந்திரபோசு * மருத்துவ வல்லுநர் ஒளவை மெய்கண்டான் * முனைவர் மு.முத்துவேலு * முனைவர் முகிலை இராசபாண்டியன் * பேரா.முனைவர் பாரதிபாலா * எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
சிறப்புரை : உயர்மிகு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர்
நிறைவுரை: பேரா.முனைவர் ப.மருதநாயகம்
நூலர் உரை: இலக்குவனார் திருவள்ளுவன்
திறனாய்விற்குரிய நூல்கள்
அறிவியல் சொற்கள் ஆயிரம் * அறிவியல் வகைமைச் சொற்கள் * கட்டுரை மணிகள் * சொல்லாக்கம் * கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடு * கனவல்ல தமிழீழம் * வெருளி அறிவியல் தொகுதிகள் 5
மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை 600 091
சனி, 17 ஏப்ரல், 2021
நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ? -இலக்குவனார் திருவள்ளுவன்
நகைச்சுவையில் மகிழ்வதற்காக நடிகர் விவேக்கை எமனுலகு அழைத்துக் கொண்டதோ?
விவேகானந்தன் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கார்த்திகை 04, 1992 / 19.11.1961 19 அன்று பிறந்தார். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 2009ஆம் ஆண்டு மத்திய அரசின் தாமரைத்திரு(பத்ம சிரீ) விருது அவருக்கு வழங்கப்பட்டது. நாட்டிற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதைப் பாராட்டி 2015ஆம் ஆண்டு மதிப்புநிலை முனைவர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது
இயக்குநர் கே.பாலசந்தரால் 1987ஆம் ஆண்டு ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் ‘விவேக்’(கு) என்னும் சுருக்கப் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் நடிப்புத் திறமையால் புதுப்புது அருத்தங்கள், உழைப்பாளி, நான் பேச நினைப்பதெல்லாம், கண்ணெதிரே தோன்றினாள், சாமி, வீரா, காதல் மன்னன், மின்னலே, பாளையத்து அம்மன், தூள், செல்லமே, பேரழகன், எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி, அந்நியன் போன்ற எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன் நகைச்சுவை நடிப்பாலும், நகைச்சுவைக் கருத்துகள் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைத் தெரிவித்து வந்ததாலும் ‘சின்ன கலைவாணர்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து அனைவரின் அன்பையும் பெற்று வளர்ந்தார்.
அபுதுல் கலாம் தூதராக மரக்கன்றுகளை நடுதல் போன்ற பல நற்செயல்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் இடம் பெற்றுள்ளார். இப்பொழுது மகுடைத் தொற்று(கொரானா நோய்)த் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வந்தார். தான் முன் எடுத்துக் காட்டாக இருக்க விரும்பித் தன் குழுவினருடன் நேற்று முதல் நாள் மகுடைத்தொற்று (‘கோவேக்சின்’) தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
மறுநாள் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று(17.04.21) வைகறை ஐந்து மணிக்குக் காலமானார்.
இவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்று மருத்துவமனையில் 800 பேருக்குத் தடுப்பூசி செலுத்தியும் வேறு யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனையிலும் இவரின் நலக்குறைவிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி இவர் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு படுத்தி யாரும் புரளியைக் கிளப்ப வேண்டா. ஒரு வேளை இவருடைய உடலில் ஏதும் நலக்கேடு இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சிலர் கருதலாம். எவ்வாறிருப்பினும் மருத்துவர்கள் தெரிவிக்காத எதையும் யாரும் பரப்ப வேண்டா.
அவரைப்பற்றிய சில நினைவுகள்: நடிகர் விவேக்கு தன் பள்ளிப் பருவத்தில் மதுரையில் திருநகரில் நாங்கள் குடியிருந்த தெருவில்தான் குடியிருந்தார். கணக்குப் பாடங்களுக்காகவும் பொது அறிவுச் செய்திகளை அறியவும் நாள்தோறும் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். நான் வேடிக்கைக் கணக்குகளும் போடுவேன். அவற்றிலும பெரிதும் ஆர்வம் காட்டுவார். பல் குரலிலும் பேசிக் காட்டுவார். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” ஆதலின் நல்ல எதிர்காலம் அவருக்கு உள்ளது எனக் கூறும் பொழுது அவர் அன்னைக்குப் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படும். பள்ளி முடிந்த பின்னரும் விடுமுறை நாள்களிலும் ஊர் சுற்றாமல் படிப்பு தொடர்பாக எங்கள் வீட்டிற்கு வருவதால் அவர் எதிர்காலம் குறித்துக் கவலை இல்லை என்பார் அவர் அன்னை.
நான் மதுரையில் மாவட்டக் கலைமன்றத்தின் உறுப்புச் செயலராக இருந்த பொழுது, கலைஇளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி, கலை உயர்மணி, கலைச்செம்மணி, கலை முதுமணி முதலான விருதுகளைக் கலைஞர்களுக்கு வழங்கினோம். மதுரை மாவட்டக் கலைஞர் என்ற முறையில் இவருக்கும் உயரிய விருது அளிக்க எண்ணினோம். ஆனால், அப்போது தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய பொழுது ஒரு நாள் அவரை எதிர்பாராத வகையாகச் சந்தித்து அளவளாவினேன்.
‘நான்தான் பாலா’ என்னும் அருமையான படத்தில் பிராமணப்பாத்திரத்தில் கதைநாயகனாக நடித்திருந்தார். நல்ல படம்தான். எனினும் அவ்வகுப்பாரின் ஆதரவு வேண்டும் எனக் கருதிச் சமசுகிருதத்திலிருந்து தமிழ் வந்தது என மொழியியல் அறிவு இன்றிக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கான கண்டனத்தை விளக்கத்துடன் அளித்தேன்.
அப்படத்தில்
“அம்மா ரொம்ப ரொம்ப நகை நான் கேட்கவில்லை
அப்பா மனசுக்குள் வருத்தம் வைக்க வேண்டாம்”
என்ற பாடல் இடம் பெற்றது. அவர் படித்த திருநகர் சோசப்பு பள்ளியில் (இப்பொழுது சவிதா பள்ளியாக உள்ளது) ஆண்டுவிழா ஒன்றில் இப்பொழுது மருத்துவராக இருக்கும் எங்கள் தங்கை செல்வமணி பாடி ஆடிய பாடல். தான் படித்த பள்ளிக்கூடத்தை நினைவுகூரும் வகையில் அப்பாடலைச் சேர்த்தது குறித்து மகிழ்ந்தும் பதிவிட்டுள்ளேன்.
அவர் செயலகப் பணியிலிருந்து விலகி முழு நேர நடிகராக மாறிய பின்னர் அவருடன் எத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அவரது நகைச்சுவைக்காட்சிகளைப் பார்க்கத் தவறுவதில்லை. சிரிப்பின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முன்னோர் வழியில் இவர் உணர்த்திய குமுகாயக் கருத்துகள் பல. மக்களுக்குத் தொண்டாற்றுவதில் முன்னணியா இருந்த அவர் மறைவு அனைவருக்குமே வருத்தத்தை அளிக்கிறது.
பூமியில் பலப்பகுதிகள் அவரது மரக்கன்றுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும். ஆழ்ந்த இரங்கல். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நடிகர் விவேக்கு புகழ் ஓங்குக!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
புதன், 14 ஏப்ரல், 2021
வெள்ளி, 9 ஏப்ரல், 2021
கவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021
கவிக்கோ நினைவுக்
குறும்பா(ஐக்கூ) விருது
2021
சிறந்த குறும்பா(ஐக்கூ) நூல்களுக்கு உரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது
தமிழில் முதன்முதலாகக் குறும்பா(ஐக்கூ) கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அபுதுல்ரகுமான். வரும் சூன் 2-ஆம் நாள் கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி, குறும்பா(ஐக்கூ) கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய தமிழ்க் குறும்பா நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.
2018, 2019, 2020 – ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 படிகளை வரும் மே-20-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
தேவைக்கேற்ப அச்சு(POD) எனப்படும் ஒளிப்படி நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டா.
ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
முதல் பரிசு உரூ. 10 ஆயிரம் – இரண்டாம் பரிசு உரூ. 5 ஆயிரம் – மூன்றாம் பரிசு உரூ. 3 ஆயிரம் – நான்கு நூல்களுக்கு ஆறுதல் பரிசு உ ரூ.1000 வீதம்.
ஆரணியில் வரும் சூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விசய்-யின் குறும்பா நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.
தமிழகத்தின் மூத்த குறும்பா கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்வர்.
கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606
குவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021
பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021
மாலை 6.30
குவிகம் இணையவழி அளவளாவல்: மகாகவி பாரதியின் குயில் பாட்டு
முனைவர் வ.வே.சு.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணைய
கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931
புகு சொல் / Passcode: kuvikam123
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
இணைப்பைப் பயன்படுத்தலாம்.
வியாழன், 8 ஏப்ரல், 2021
போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021
பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021/காலை 10.00
கூட்ட எண்: 864 136 8094
புகு எண்: 12345
தமிழ்க்காப்புக்கழகம்
சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 4
அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
உட் பொருள் : போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை!
வரவேற்புரை: கவிஞர் வேல் சுப்பராசு
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
உரையாளர்கள்:
எழுத்தாளர் அறிவுக்கரசு
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
ஒருங்கிணைப்பு, நிறைவுரை: தோழர் தியாகு
நன்றியுரை: கவிஞர் ஆற்காடு க.குமரன்
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம்
திங்கள், 5 ஏப்ரல், 2021
யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
யாவரும் வாக்களிப்பீர்!
தேர்தல் நாள்: பங்குனி 24, 2052 / ஏப்பிரல் 06, 2021
மக்களாட்சியில் நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆயுதம் வாக்குரிமை. இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆள்வதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் வாக்குரிமையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தவறு செய்தால் இந்த ஐந்தாண்டு மட்டுமல்ல, அதன் பாதிப்பு தொடர் ஆண்டுகளிலும் நமக்கு ஊறு செய்யும்.
எனவே, நாம் நாளை தவறாமல் வாக்குப்பதிவகங்களுக்குச் சென்று நமக்குரிய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௪ – 504)
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫கஎ – 517)
என்னும் திருக்குறள்களுக்கிணங்க நாம், நம் தொகுதிக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்ற போதிலும், எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும், யார் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறிப் பயனில்லை. ஏனெனில், வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதுமே முன் நிற்பார்கள். பிறர், அவர்களிலும் புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையர் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நாம் அறிவுரை கூறுவதற்கு இது நேரமுமில்லை. தேர்தல் விதிகளுக்கு மாறானதுமாகும். எனவே, தகுதியானவர்கள் எனக் கருதுபவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை தெரிவு தவறாக இருந்தாலும் பரவாயில்லை. வாக்குரிமையைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.
நாளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளாவிலும் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் சில கட்டவாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் அடுத்தக் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. பொதுத்தேர்தல் நடைபெறும் அனைத்துப் பகுதி வாக்காளர்களுக்கும் குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்போல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கும் நாம் விடுக்கும் வேண்டுகோள்
பயன்படுத்துவோம்! பயன்படுத்துவோம்!
வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல





