வெள்ளி, 20 மார்ச், 2015
போலி எண் தகட்டுடன் உலாவரும் ஈருருளிகள்!
போலி எண் தகட்டுடன் உலா வரும் இருசக்கர வாகனங்கள் – மோதலில் காயமடைந்தவர்கள் இழப்பீடு பெற முடியாமல் தவிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில் போலி எண் தகட்டுகளுடன் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் உலாவருகின்றன.
தேவதானப்பட்டிப் பகுதியில் இருந்து அண்டை
மாநிலங்களான கேரளா, கருநாடாகா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நிதித் தொழில்,
கட்டடம் கட்டும் தொழில், தோட்ட வேலைகள், முறுக்குத்தொழிற்சாலை போன்ற
பணிகளுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் அப்பகுதியில் நிதியுதவி
பெற்று வாகனங்களை வாங்கி இரண்டு தவணை அல்லது மூன்று தவணை கட்டிவிட்டு
இரவோடு இரவாக வானகத்துடன் தேவதானப்பட்டிப் பகுதிக்கு வந்துவிடுகின்றனர்.
ஒரு சிலர் அண்டை மாநிலத்தில் உள்ள இரண்டு சக்கர வானங்களைத்
திருடிவந்துவிடுகின்றனர்.
நல்ல நிலையில் உள்ள வண்டிகளில்
காலக்கெடுமுடிந்த வண்டி எண்களின் தகட்டுகளைப் பொருத்திவிடுகின்றனர்.
இவ்வாறான வண்டிகளைப் பால்விற்பனை செய்பவர்கள், நிதிநிறுவனம்நடத்துவோர்,
மரம் வெட்டும் தொழிலில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட
வாகனங்களால் ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ அவையே விபத்திற்குள்ளானாலோ
காவல்துறையில் புகார் பதிவு செய்யும் போது அதில் காப்பீடு, வாகன
உரிமையாளர்கள் விவரம் போன்றவை முன்னுக்குப் பின் முரணாக இருக்கும். அதன்
பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்து தப்பித்துவிடுகின்றனர்.
ஒரு சிலர் வாகனத்தை மோதிவிட்டுத்
தலைமறைவாகின்றனர். காவல்நிலையங்களில் புகார் கொடுத்தால் மோதி விட்டுச்
சென்ற வாகனம் அல்லது அடையாளம் தெரியாத வாகனம் என வழக்கு பதிவு செய்து
விடுகின்றனர். எனவே வட்டாரப்போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும்
போக்குவரத்துக் காவலர்கள் அடிக்கடி ஊர்திச்சோதனையில் ஈடுபட்டுப் போலி
எண்தகட்டுகளுடன் வலம் வரும் ஊர்திகளைப் பறிமுதல் செய்யவேண்டும் என
எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
‘மீண்டும் வருவோம்’ – குறும்படம் திரையிடல்
தாயக-தமிழகக் கலைஞர்களின் கூட்டு
முயற்சியில் தமிழீழ மண்ணில் இக்காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக
நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட
‘மீண்டும் வருவோம்’ குறும்படம் சென்னையில் சிறப்பாக வெளியிடப்பட்டுத்
திரையிடப் பட்டுள்ளது.
பாசறைப் பட்டறை
வழங்கிய ‘மீண்டும் வருவோம்’ என்ற இக் குறும்படம் மாசி 24, 2046 /
08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் நாளன்று மாலை 6 மணிக்கு
வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் வெளியிடப்
பட்டது.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
வெளியிட்டு வைக்க மறவன் புலவு சச்சிதானந்தன், பாபு, யாழினி அரசேந்திரன்,
கவிஞர் சிநேகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
ஆவல் கணேசன் நிகழ்ச்சினைத் தொகுத்து
வழங்க இலாரன்சு பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்; காசி ஆனந்தன் தலைமை
உரையாற்றினார்; வெளியீட்டு உரையினை மறவன்புலவு சச்சிதானந்தன்
நிகழ்த்தினார்,
மதிப்புரையினை யாழினி அரசேந்திரனும், சிநேகனும், ஏற்புரையினைத் தேவர் அண்ணாவும் நன்றி உரையினை தமிழ் பிரபாவும் நிகழ்த்தினர் .
நிகழ்ச்சி இறுதியில்.குறும்படம் மக்களுக்குத் திரையிட்டு காண்பிக்கப்பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)