வியாழன், 15 ஜனவரி, 2026

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்

 







    கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.

   அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல அஃது அனைவருக்கும்  பொதுவான நூல் என்கிற பொருளில் மேற்கண்ட கருத்தினைச் சொல்லியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன்

. பகவத்து கீதையை மையப்படுத்தி அவர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் தமிழறிஞர்கள் மத்தியில் பேசுபொருளானதுடன் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும் வல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான இலக்குவனார் திருவள்ளுவன், ‘பகவத்து கீதை மதநூலே அல்ல’ என்று விவாதித்து வருகிறார்.

   இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது,

“மதம் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். மதம் என்பதன் ஆங்கிலச் சொல் ரிலீசியன்(religion). இந்தச் சொல் relegare என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் இணை, பிணை என்பனவாகும். அந்த வகையில்  மதம் என்பது ஒருவரை ஒருவர் இணைக்க வேண்டும்; மக்களைப் பிணைக்க வேண்டும். அதனால் இந்த இலக்கணத்திற்கிணங்க பகவத்துகீதை இருக்கிறதா எனப் பார்ப்போம்.

   மதநூல் என்பது மக்களை இணைக்க வேண்டும். அவர்களிடையே பிணைப்பை உருவாக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி ஒருவரைத் தாழ்த்தி இருக்கக் கூடாது. யாரையும் இழித்தும் பழித்தும் கற்பித்தல் கூடாது. அப்படி இருந்தால்தான் அது மதநூல். அந்த அடிப்படையில் பகதவ்துகீதையை ஆராய்ந்தால், ‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவப் பிறப்புறுப்பிலிருந்து(யோனியிலிருந்து) பிறந்தவர்கள்” என்று அத்தியாயம் 9, சுலோகம் 32 இல் கீதை கூறுகிறது. பெண்களையும் பிராமணர் அல்லாதவரையும்  இழிவாகக் கூறுகிற கீதை அனைத்து மக்களையும் எப்படி  இணைக்க முடியும்? அதனால் கீதை எங்ஙனம் மத நூலாக இருக்க முடியும்?

“எப்போது அதருமம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வருணக் குழப்பம் உண்டாகிறது.” (1.41) என்கிறது பகவத்து கீதை ஆண்கள் கெட்டுப் போகலாம். ஆனால், அப்போது அதருமம் சூழாதாம். ஆனால், பெண்கள் கெட்டுப்போனால் மட்டுமே அதருமம் சூழ்கிறதாம். இப்படிக் கூறும் பகவத்து கீதை எப்படி மதநூலாகும்?

    மேலும், பெண்கள் கெட்டுப் போகும்போது வருணக் குழப்பம் உண்டாகிறது என்கிறது கீதை. அப்படியென்றால் என்ன பொருள்?

   பெண்கள் பிற வருணத்தாருடன் சாதியினருடன்) உறவு கொள்வதால் வருணக் குழப்பம் உருவாகிறது என்பதே இதன் பொருள்.. அஃதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிராகக் கற்பிக்கப்படுகிறது. இதற்காகவே வருணவகைகளை வலியுறுத்துகிறது கீதை  இப்படிப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளை விதைக்கும் பகவத்து கீதையை எப்படி மத நூலாக ஏற்க முடியும்?

நான்கு வருணத்தைக் கூறி மக்களிடையே உயர்வு தாழ்வை வலியுறுத்துவதே பகவத்து கீதையின் அடிப்படை. கீதையின் விளக்க நூல்களைப் பார்த்தாலே இது நன்றாகப் புரியும். மக்களிடையே வேறுபாடுகளை உண்டாக்கி அதற்கேற்ப குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குச் சாதகமாக எழுதப்பட்ட நூல் எங்ஙனம் மதநூலாகும்?

இன்னும் சொல்லப்போனால், ஒரு மதநூலானது மக்களிடையே ஆணவத்தை, அகம்பாவத்தைக் கற்பித்தல் கூடாது. அடக்கத்தை உணர்த்த வேண்டும்; அன்பை வலியுறுத்த வேண்டும். ஆனால், பகவத்து கீதை அப்படியில்லை.  தானே எல்லாம் என்பதாகக் கிருட்டிணன் கூறுவது கீதையில் உள்ளது. குறிப்பாக “நான் சடங்கு, நான் வேள்வி, நான் முன்னோர்களுக்கான உணவு, நான் மருந்து, நான் மந்திரம், நான் நிச்சயமாக நெய், நான் நெருப்பு, நான் அவி(பலி உணவு), நானே நான்” என்று கீதையில் கூறுகிறான் கிருட்டிணன்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவர், நான்(உடம்பு),எனது(பொருள், உடைமை, சொத்து) என்று கருதும் ஆணவத்தையும் அகங்காரத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பவனே இறைவனை அடைந்து உயர்ந்த உலகை அடைவான்(குறள் 346) என்று கூறுகிறார். இததகைய தமிழ்நெறியே தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நானே எல்லாம்எனக் கூறுகிற கீதை எங்ஙனம் மதநூலாகும்?

    உலக மாந்தரின் நல்வாழ்விற்காக எந்நாளும் ஏற்றவழி கூற வேண்டிய கீதை, சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வகுப்பினரின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுகிறது. ஒரு வகுப்பாரைப் போற்றியும்  ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியும் பேசுகிறது கீதை. பிற மத மக்களை நேசிக்கக் கற்றுத் தராவிடடாலும பரவாயில்லை. ஆனால், சொந்த மக்களையே நேசிக்கக் கற்றுத் தரவில்லையே! அவ்வாறிருக்க  இந்து மத நூல் என்று கீதையை எப்படிக் கூற முடியும்?

மதநூல் என்பதையும் கடந்து அது பொதுவான நூல்  என்றும் சிலர் பரப்பி வருகின்றனர். மதம் என்கின்ற ஒன்று இருக்கிறதா? என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. மதம் இருப்பதாக வைத்துக் கொண்டால் மதத்தின் இலக்கணத்தின்படி இல்லாத பகவத்து கீதை மத நூல் அல்ல; அனைவருக்கும் பொதுவான நூலும் அல்ல” என்கிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்.

புதன், 14 ஜனவரி, 2026

தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

மார்கழி > தை  2056 >2057

2026

திங்கள், 12 ஜனவரி, 2026

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

      12 January 2026      அகரமுதல



49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம்.

வரிசை எண்நூலின் பெயர்
 1.அறிவியல் சொற்கள் ஆயிரம்     
 2.அறிவியல் வகைமைச் சொற்கள் 3000   
 3.அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம்
 4.இலக்குவனார் இதழுரைகள் 
 5.இலக்குவனார் நூறு
 6.கட்டுரை மணிகள்
 7.கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடும் கலைச்சொற்களும்
 8.கருவிகள் 1600
 9.சனாதனம் பொய்யும் மெய்யும்
 10.செம்மொழிக்கனவுகள்
 11.சொல்லாக்கம் நெறிமுறையும் வழி முறையும்
 12.தமிழாட்சிக் கனவு
 13.தமிழ் ஆய்வின் விடிவெள்ளி ப.மருதநாயகம்
 14.தமிழ்ச்சிமிழ் – தொல்காப்பியம்
 15.தமிழ்வளர்ச்சிக் கனவு
 16.தனித்தமிழ்க் காவலர்  இலக்குவனார்
 17.தொல்காப்பியமும் பாணினியமும்
 18.நாடுநலம பெற   
 19.படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார்
 20.பேரா.சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்)
 21.பேரா.சி.இலக்குவனாரின் பழந்தமிழ்
 22.வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
 23.வெருளி அறிவியல் 5 தொகுதிகள்
 24.வேண்டவே வேண்டா இந்தி
 25.பேரா.சி.இலக்குவனாரின் தமிழ்க் கற்பிக்கும் முறை
 26.பேரா.சி.இலக்குவனாரின் Tamil Language

இந்நூல்களை வாங்கும் ஒவ்வொருவருக்கும்  உரூ.35/- மதிப்புள்ள பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பெறும்.

வியாழன், 8 ஜனவரி, 2026

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057

 




சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

    உழந்தும் உழவே தலை.   (திருவள்ளுவர், திருக்குறள்,௲௩௰௧ – 1031)

தமிழே விழி!                                                       தமிழா விழி!

“பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே!

திராவிடரும் கொண்டாடலாம்! பிற யாவரும் கொண்டாடலாம்!

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

கவிஞர்கள்

நூலாய்வு

பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் நூல்

இணைய உரை 3, தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி






திங்கள், 5 ஜனவரி, 2026

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: இலக்குவனார் திருவள்ளுவன்



 இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே! தலைமை வகிக்கும் பாவலர் காசி வீரசேகரன் அவர்களே! முன்னிலை வகிக்கும் தலைமையாசிரியர் க.முருகேசன் அவர்களே! தமிழ்த்தேனீ மா.செ.பாலசுப்பிரமணியம் அவர்களே! வரவேற்புரையாற்றிய கிடாரங்கொண்டான் மு.செ.பாண்டியன் அவர்களே! நன்றியுரையாற்றும் த.க.தமிழ்ப்பாரதன் அவர்களே! விழாவினைத் தொகுத்து வழங்கிக் கொண்டுள்ள தலைமையாசிரியர் திருவாட்டி செயந்தி அவர்களே! திருவாரூர் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் கவிமாமணி நீதிதாசன் அவர்களே! ஆர்வமுடன் கூடியுள்ள அவையோரே! அனைவருக்கும் என் வணக்கங்கள்.

  எங்கள் தந்தை தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   புலவர் பட்டம் பெற்ற பிறகு முதலில் பணியாற்றிய ஊர் இத்திருவாரூர். அவரது தமிழ்ப்பணி என்பது படிக்கும் பொழுதே தொடங்கப்பட்டிருப்பினும் முறையான ஆசிரியப்பணி தொடங்கிய ஊர் திருவாரூர். தொடக்கத்திலேயே வீறார்ந்த தமிழ்ப்புலமையுடன் தமிழ்மானத்தையும் பகுத்தறிவையும் தமிழ் மணத்துடன் கலந்து பயிற்றுவித்தவர் என அவரிடம் இங்கு பயின்ற முன்னாள் முதல்வர் கலைஞர் முதலான பலரும் தெரிவித்துள்ளனர்.

 அவர் பேச்சும் மூச்சும் கலந்திருந்த காற்று தவழும் திருவாரூரில் நானும் மேடையேற வாய்ப்பு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றி.

 என்னைப் பேச அழைத்த பொழுது நான், “தமிழன் என்பதில் என்ன பெருமை இருக்கின்றது?” என்னும் பொருளில் பேசுவதாகத் தெரிவித்தேன். உடனே நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்கள், “இலக்கிய-இலக்கணத் தொடராக நிகழ்த்தி வருகிறோம். எனினும் இத்தலைப்பிலேயே பேசுங்கள்” என்றார். பொதுவான உணர்வுடன் பேசுவது இலக்கிய இலக்கணத் தொடரைத் தொடர்ந்து கேட்பதற்கு ஊக்கமாக இருக்கும் என்றார். எனினும் நான் பேச விரும்பிய பொருண்மையில் மாற்றம் செய்து இலக்கித்துடன்தொடர்பு படுத்தி என் எண்ணங்களை வெளிப்படுத்த முயல்கிறேன். எனவே, இவ்வாறு பேச இசைவளித்த எண்கண்ணாருக்கு என் நன்றி. இங்கு ஆற்றுப்படுத்திய மனிதநேயர் கவிமாமணி நீதிதாசனுக்கும் நன்றி!

“வைய கத்தில் இணையி லாத

             வாழ்வு கண்ட தமிழ் மொழி

       வான கத்தை நானி லத்தில்

             வரவ ழைக்கும் தமிழ்மொழி”

என்கின்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார். தமிழின் சிறப்பைக் கூறும் அவரே, தமிழரின் சிறப்பை,

“தமிழன் என்றோர் இனமுண்டு;

       தனியே அவற்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனுடை வழியாகும்;

       அன்பே அவனுடை மொழியாகும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;

       மற்றவர்க் காகத் துயர்படுவான்”

என்கின்றார்.

  ‘தமிழர் என்பதில் என்ன பெருமை இருக்கிறது’ எனக் கேட்டால், இவ்வாறு தமிழின் பெருமையையும் தமிழரின் பெருமையையும் எண்ணிலடங்கா வண்ணம் நாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், நம் பெருமையை உணராமல் உணர்ந்தவர்களும் வாயளவில் வெற்றுரையுடன் நிறுத்திக் கொண்டு சிறுமைப்பட்டு வாழும் ‘நமக்குத் தமிழர் எனப் பெருமைப்பட என்ன தகுதி இருக்கிறது?

இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 51

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர்