திங்கள், 5 ஜனவரி, 2015

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்




60omni-bus01

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும்

தனியார் பேருந்துகள்

நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

  தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.
  மேலும் இப்பகுதியில் விளையும், மல்லி, புதினா, தக்காளி, திராட்சை முதலான வேளாண் பொருட்களும், சில பேருந்துகளில் சிப்பஅனுப்புகைப் பணிகளும் இயங்குகிறது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் முதல் நாள் இரவு சென்னையில் புறப்பட்டால் மறுநாள் காலையில் தேனிப்பகுதியை வந்தடையும். அதன்பின்னர் பேருந்தை நிறுத்திவிட்டு வண்டியில் ஏற்பட்ட பழுதுகள், வட்டை, நிறுத்தி போன்றவற்றைச் சரிசெய்து அன்று மாலைதான் சென்னைக்கு மீண்டும் திரும்பும். திருவிழாக் காலங்களில் சென்னையிலிருந்து புறப்படும் பேரூந்துகள் தேனிப் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு மறுபடியும் உடனே சென்னைக்குக் கிளம்புகின்றன. இவ்வாறு இரவு, பகலாக கண்விழித்து ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிவருகிறார்கள். இதனால் பண்டிகைக் காலங்களில் ஏராளமான நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. எனவே வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பேருந்துகளையும், ஓட்டுநர்களையும் ஆய்வு மேற்கொண்டு பேருந்துகளை இயக்க இசைவளிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  இவ்வாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வதன் மூலம் நேர்ச்சிகளைத் தவிர்க்கலாம் எனவும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
உயிர்ப்பலிகளையும் உடைமை இழப்புகளையும் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
60vaigai-aneesu




நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

60brownplanthopperinfection 60pukaiyan-noay
  தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.
  தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன.
 இதனால் நெற்பயிரில் பூச்சிநோய் தாக்கும் கண்டம்(அபாயம்) ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நெற்பயிரில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் சென்றால் அங்கு அதிகாரிகள் இருப்பதில்லை.
தேவதானப்பட்டி முதலான பகுதிகளில் வேளாண்மைத்துறை அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதன் தொடர்பாகப் பெரியகுளம், வடுகப்பட்டி; அலுவலகத்தில் சென்று தங்கள் குறைகளை முறையிடலாம் எனச் சென்றால் “அதிகாரிகள் முகாம் சென்றுள்ளார்கள்” என்ற மறுமொழியே வருகிறது. இதனால்உழவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

நெற்பயிர்களை நோய்களிலிருந்து காத்து உழவர்பெருமக்களை அரசு காப்பாற்றுமா?
60vaigai-aneesu




ஞாயிறு, 4 ஜனவரி, 2015

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்




thathevi05

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு

சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று

சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்:

thathevi04
      1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
      2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
     3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின்  புதிய தலைமைக் குழு.
     4) தமிழ்த் தேசம் இதழின் ஆசிரியராகத் தோழர் தியாகு தொடர்வார்.  தோழர் ஆதவன், தோழர் குருநாதன் ஆகியோர்  இதழின்ஆசிரியர்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுஇணைத்துக்கொள்ளப்படுகின்றனர். ஆசிரியர்குழு  இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இதழ் குறித்துத் திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.
     5) இப்போதுள்ள உறுப்பினர்களைக் கிளைகளாகப் பிரித்து அமைத்துத் தொடர்ந்து இயங்கச் செய்வது தலைமைக் குழுவின் பொறுப்பாகும்.
     6) இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மாதப் பங்களிப்புச் செலுத்துவது, தமிழ்த் தேசம் இதழைப் பரப்புவது, இயக்கத்திற்கு நன்கொடையாளர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஆகியவை  இன்றியமையாக் கடமைகளாகும். இக்கடமைகளைச் செய்து அதைக் கிளைகளின் மூலம் தலைமைக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்கவேண்டும்.
    7) தீ வளி (மீத்தேன்) எதிர்ப்பு இயக்கம், அணுஉலை எதிர்ப்பு இயக்கம், தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம், இந்தி-சமற்கிருத-ஆங்கிலத் திணிப்பு எதிர்ப்பு இயக்கம், மோதி அரசின் பார்ப்பனீயப் பண்பாட்டு எதிர்ப்பு இயக்கம், காவிரி-முல்லைப் பெரியாறு மீட்பு இயக்கம், தமிழீழ மக்களுக்கான ஈடுசெய் நீதிப் போராட்டம் ஆகியவற்றில் தற்சார்பாகவும் கூட்டாகவும் முனைப்புடன் இயக்கம் செயல்பட வேண்டும்.