சனி, 1 ஜனவரி, 2011

english new year:Officeal met C.M.: ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வருடன் பேரவைத் தலைவர், அதிகாரிகள் சந்திப்பு

ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வருடன் பேரவைத் தலைவர், அதிகாரிகள் சந்திப்பு
First Published : 01 Jan 2011 12:33:26 PM IST

சென்னை, ஜன. 1: பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துப் பெற்றனர்.பனைவாரியத் தலைவர் குமரி அனந்தன், தமிழக டிஜிபி லத்திகா சரண், புறநகர காவல்துறை ஆணையர் ஜாங்கிட், செனனை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், பல்வேறு துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல்வர் தாம் எண்ணுவதுபோல் தமிழ்ப்புத்தாண்டிற்கு முதன்மை வரவேண்டும் எனில் ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்துப் பரிமாறும் சடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/1/2011 7:04:00 PM

new year greettings from Thamizh Eezha govt.: ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் ஈழ அரசிற்கு வாழ்த்துகள். ஆக்கமுறையிலான பணிகளால் உலக மக்களின் உள்ளங்களை வென்றெடுத்து விரைவில் தமிழ் ஈழக் குடியரசை அமைக்க  ௨௦௧௧ ஆம் ஆண்டுப் பிறப்பில் வாழ்த்துகிறேன். தமிழ்ஈழம் அமைந்தது. தமிழரெல்லாம் மகிழ்ந்தனர். தரணியெங்கும் வாழ்த்தினர். பாரெங்கும் தமிழ் ஈழக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்னும் செய்தி விரைவில் வரட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து

First Published : 01 Jan 2011 04:10:41 PM IST


கொழும்பு, ஜன.1- நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய ஆண்டு மலரும் இத் தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப் புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம். நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும். தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது. இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது. புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

no new year under rajapakshe regime: இராசபட்ச ஆட்சியில் இலங்கைக்குப் புத்தாண்டே கிடையாது: பொன்சேகா

இராசபக்சே ஆட்சியில் இருக்கும் வரை  இலங்கையில் புத்தாண்டே கிடையாது என்பதுபோல் சிங்களரின் ஆட்சியில்  இருக்கும் வரை இலங்கைத் தமிழர்களுக்கும் புத்தாண்டே கிடையாது. தமிழ் ஈழம் மலரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டாகும். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்



ராஜபட்ச ஆட்சியில் இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது: பொன்சேகா

First Published : 01 Jan 2011 04:44:36 PM IST

Last Updated : 01 Jan 2011 04:50:55 PM IST

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் இருந்து அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published : 01 Jan 2011 04:44:36 PM IST

Last Updated : 01 Jan 2011 04:50:55 PM IST

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் இருந்து அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top 5 readers views 01.01.11 a.n. :முதன்மை 5 வாசகர் கருத்துகள்

2011 greettings by dinamalar: தினமலரின் 2011 புத்தாண்டுச் செய்தி

Tomorrow will be a good day: naalai nalla naale: dinamani editoriyal:தலையங்கம்: நாளை நல்ல நாளே...

நாளை நாளை என்று கனவு கண்டு நாளைக் கடத்த வேண்டா.  இன்று நல்ல நாளாக அமையட்டும்! தினமணி ஆசிரியர் குழுவினருக்கும் பிற பணியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்னாள் அமையட்டும்! பொன்னாள் மலரட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: நாளை நல்ல நாளே...


முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு.இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? விடுதலைபெற்ற பின்னர் பெரும்பாலான ஆண்டுகளை ஊழல் ஆண்டு என்று அறிவித்துவிடலாம் என்றாலும், 2010 போன்று உலக வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாக, ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளதால், இதை வேறுவகையில் பெயரிட்டு அழைக்க முடியாது என்பதால் ஊழல் ஆண்டு என்பது பொருத்தமானதே!ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; இன்னும் பல ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்ட ஆண்டு 2010 என்றால் மிகையல்ல. ஐ.பி.எல். கொச்சி அணியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மீதான குற்றச்சாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பல கோடி ரூபாய் முறைகேடு, மகாராஷ்டிரத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு, கர்நாடகத்தில் முதலமைச்சரின் தனியாணை மூலம் குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல நூறு மடங்கு விலையில் வேறுநபர்களுக்கு விற்கப்பட்ட ஊழல் எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்டுக்கொண்டே இருந்தன. 2010-ம் ஆண்டில் யாருக்காவது நாம் நன்றி சொல்ல வேண்டுமானால், அது நீதித் துறைக்கும், தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கும் மட்டுமே! லஞ்சஒழிப்புத் துறைக்குத்  தலைவராக, குற்றச்சாட்டில் உள்ள தாமஸ் நீடிக்கலாமா என்று நீதிமன்றம் கேட்டாலும், பதவிவிலக மாட்டேன் என்று சொல்லும் மோசமான நிலைமைக்கு இடையிலும்கூட, தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகள் எதையும் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்தைத் தெளிவாகப் பதிவுசெய்து, தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.இந்தத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மட்டும், இவ்வளவு துணிச்சலாக, நேர்மையாக, இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், முன்னுரிமை அளிக்கப்பட்ட விதத்தில் பாரபட்சம் இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்காவிட்டால், இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளும் பிரச்னையின் கௌரவத்தைப் புரிந்துகொண்டு வீறுகொண்டு எழுந்திருக்கவோ அதனால் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கவோ வாய்ப்பில்லை. நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பில்லை, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகியிருக்க வாய்ப்பில்லை. நீரா ராடியா டேப் விவகாரம் வெளியே வந்திருக்காது. எல்லாமும் புதையுண்டு மறைந்து போயிருக்கும். எல்லா ஆண்டிலும் நடைபெற்றுவரும் பல ஊழல்களைப்போல இதுவும் வாடிக்கையான ஓர் ஊழலாக முடிந்து போயிருக்கும்.தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகளின் அறிக்கை காட்டிய நேர்மையின் வெளிச்சத்தை நீதி கையில் எடுத்துக்கொண்டு, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஊழலில் சம்பந்தபட்டவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் நிச்சயமாக இருக்கும். ஆனால் இந்த நேர்மையான பதிவுகளை அறிக்கையில் எழுதிவைத்த தலைமைக் கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரிகளின் பெயர், நாளைய இந்தியர்களுக்கு, ஏன் இன்றைய இந்தியர்களுக்கேயும்கூடத் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் தலைவணங்கி, நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுட்டிக்காட்டியதைச் சட்டப்படியாக நிலைநாட்ட முயன்ற நீதிமன்றத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அமைச்சர், பதவி விலகி, அதிகாரத்தின் பற்கள் பிடுங்கப்பட்ட பின்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்று நிபந்தனைகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தைரியமான அதிகாரிகளும் இருக்கும் இந்த நாட்டில்தான் இத்தகைய அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்பதன் உட்பொருள் தெளிவாகிறது.போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் அதன் தலைவர் ஆண்டர்சன் தண்டிக்கப்படாமல், அதிகாரிகள் குறைந்தபட்சமாகத் தண்டனை பெறும் விதத்தில் அரசு வழக்குத் தொடுத்திருந்த மத்திய அரசை கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கிய பின்னர், இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவும் நீதித்துறையால் ஏற்பட்ட நன்மை!நீதியும் நேர்மையும் செத்துவிட்டதோ என்று கலங்கிக் கிடந்த இந்தியர்கள் நெஞ்சில், "உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை கொள்வான்' என்னும் நம்பிக்கையை விதைத்துள்ள ஆண்டும் 2010-தான்."எல்லாமே மோசம். இதிலிருந்து விமோசனமே கிடையாது. திருத்தவே முடியாது' என்று எதிர்மறைச் சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது நமது நாடு. அரசும், ஆட்சியும், அதிகாரமும் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பவை. அதில் தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதைத் திருத்தி, தவறுகளைத் தடுத்து, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. எனென்றால். நமது நல்வாழ்வும் அதனுடன் இரண்டறப் பிணைந்து கிடக்கிறது. தன்னம்பிக்கையுடன் எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கி எறிந்துவிட்டு தவறுகளுக்கு எதிராகக் குரலெழுப்பத் தயாராகுங்கள்.  நம்பிக்கை ஸ்திரப்படும் ஆண்டாக, 2011-ல் இந்த ஊழல்களில் தொடர்புடையவர்கள் தண்டனைபெற வேண்டும். அமைச்சர் என்றாலும், பெருந்தொழிலதிபர் என்றாலும் தண்டனை தரப்பட வேண்டும். இதில் பாரபட்சம் இருக்காது என்பதைப் புரியவைக்கும்  ஆண்டாக 2011 அமைய வேண்டும். இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் வெற்றிபெற்றதற்கான அடையாளம் அதுவாகத்தான் இருக்கும்.2010 ஊழல் ஆண்டு என்றால்...2011 தண்டனை ஆண்டு என்று பெயர் பெறட்டும்! நம்பிக்கையூட்டும் ஆண்டாக மலரட்டும். "தினமணி' வாசகர்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்!

thamizharkku thesiyam thamizhe: reply to karthi chidambaram

தமிழர்களின் தேசிய மொழியும் தேசிய  இனமும் தமிழே! பிற மொழியினருக்கும் அவரவர் மொழியும்  இனமுமே தேசிய மொழியும் தேசிய  இனமும் ஆகும்.  வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறான  இறைக் கொள்கையைச்  சரியாகச் சுட்டிக்காட்டியுள்ள கார்த்தி, இந்தியா தேசிய  இனங்களின் கூட்டரசாகத் திகழ்ந்து வலிவும் பொலிவும் பெறப் பாடுபடவேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

"மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள் அதிகம்': கார்த்தி சிதம்பரம்

First Published : 31 Dec 2010 02:39:25 AM IST


முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் ரா.அ.பத்மநாபனை கெüரவிக்கிறார் கார்த்தி ப.சிதம்ப
சென்னை, டிச. 30: மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள்தான் இங்கு அதிகம் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் சென்னையில் "பாரதியைப் போற்றுவோம்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:பாரதியார் தமிழோடு தேசியத்தையும் வலியுறுத்தினார். அவரது கவிதைகளில் தேசியம்தான் மிளிர்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழைப் பற்றி பேசுபவர்கள் தேசியத்தை வலியுறுத்துவதில்லை.அதுமட்டுமல்ல, தேசியம் பற்றிய பேசினால் தமிழுக்கு விரோதி என்பது போல சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் தேசியக் கொடியேற்றி யாராவது பார்த்தது உண்டா? தமிழ், ஈழம் இந்த இரண்டையும் பற்றி பேசினால்தான் தமிழ் உணர்வாளர் என்பது போன்ற தோற்றம் இங்கே ஏற்பட்டுள்ளது.தமிழ் உணர்வு பற்றி பேசுபவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.தமிழையும், ஆன்மிகத்தையும் யாரும் பிரிக்க முடியாது. கடவுளை கேலி செய்வது தமிழகத்தில் நாகரிகமாகிவிட்டது. ஆனால், மேடையில் நாத்திகம், வீட்டில் ஆத்திகம் என வாழ்பவர்கள்தான் இங்கு அதிகம்.மக்கள் சரியாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் சரியாக இருப்பார்கள். விலை மதிக்க முடியாத வாக்குரிமையை விற்கும் மக்கள் இருக்கும் நாடு எப்படி வளரும்?ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் எதிர்காலத்தில் ஜாதி கட்சிகள் பெருகும். ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு கேட்பார்கள். இதனால் மிகப்பெரிய அரசியல், சமுதாயப் பிரச்னைகளை இந்தியா சந்திக்கப் போகிறது.நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்காக கட்சி எடுóக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்க முடியாது.தமிழகம் இன்று சினிமா மாயையில் சிக்கித் தவிக்கிறது. சினிமாவில் வரும் டாக்டரிடம் நாம் சிகிச்சை பெறுவதில்லை. சினிமாவில் வரும் வழக்கறிஞர்களை வாதாட அழைப்பதில்லை.ஆனால், திரையில் வரும் நாயகர்களை நாடாள அழைக்கிறோம். சினிமாவுக்கு அப்பாற்பட்ட தலைமையே இன்றைய தமிழகத்துக்குத் தேவை என்றார் கார்த்தி சிதம்பரம்.தேர்தலில் போட்டியில்லை: அரசியல் வளையத்துக்கு வெளியே சென்று எந்தக் கருத்தையும் தமிழகத்தில் சொல்ல முடியவில்லை.ஒரு கருத்தைச் சொன்னால் கூட்டணிக் கட்சியினர் கோபித்துக் கொள்வார்களோ, எங்கள் கட்சியிலேயே மற்ற கோஷ்டியினர் காலை வாரிவிட்டு விடுவார்களோ என்று பயப்படும் நிலை உள்ளது. எனக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றார் கார்த்தி சிதம்பரம்.முற்போக்கு சிந்தனையாளர் பேரவைத் தலைவர் தாம்பரம் நாராயணன், டி.கே.எஸ். கலைவாணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக விழாவில் தமிழறிஞர்கள் ரா.அ. பத்மநாபன், சீனி. விஸ்வநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துகள்

எல்லாம் சரிதான். வாரிசு அரசியலும்தான் மக்களாகிய எங்களுக்கு பிடிக்கவில்லை என்ன செய்வது!
By Solomon
12/31/2010 9:50:00 AM
கார்த்திக்சிதம்பரம்பேசிய மேடையில் நாத்திகம்,வீட்டில் ஆத்திகம் தி.மு.க கட்சியினருக்கு மிக பொருத்தம்.இவரது பேச்சு புதிய கூட்டணி தேவை என்பதை சொல்லாமல் சொல்கிறது.
By பி.டி.முருகன் திருச்சி
12/31/2010 7:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

new year greetings by leaders.:தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

தலைவர்களின் தன்நலக் கனவுகள் சிதையவும் நாட்டு மக்களின் நன்னலக் கனவுகள் ஈடேறவும் தினமணி நேயர்கள் சார்பில் வாழ்த்துகள். இனியேனும் விழிக்கட்டும் இந்தியம். இனிதாக மலரட்டும் தமிழ் ஈழம். இனிய வாழ்வைத் தரும் இனிதான ஆட்சிகள் அமையட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

First Published : 01 Jan 2011 12:14:00 AM IST


சென்னை,டிச.31: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தையும், வளமையையும் போற்றிப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.முதல்வர் கருணாநிதி: பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது இந்த அரசு. இந்த அடிப்படையில் இந்த புத்தாண்டிலும் தமிழர் நலம் காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகளை குவித்திடுவோம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா: மலர்கின்ற புத்தாண்டில் அராஜகம், அத்துமீறல், வன்முறை ஆகியவை ஒழிந்து, அமைதியும், ஆனந்தமும் பிறக்கட்டும். 2011-ல் உண்மையான மக்களாட்சி மலர நாம் அனைவரும் புத்தாண்டில் உறுதி ஏற்க வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு: இந்தப் புத்தாண்டில் ஜாதி, மத, மொழி, இன பேதங்களைத் தாண்டி தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காப்போம்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: கடந்த புத்தாண்டில் மனதில் மேற்கொண்ட தீர்மானங்களை எண்ணிப் பார்த்து, அவற்றில் முடிக்க முடியாத தீர்மானங்களை இந்த ஆண்டில் நிறைவேற்ற சபதமேற்போம்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நலிவுகளில் இருந்து நாட்டை மீட்க, வரும் பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வோம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உயர்வு தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் அமைய வேண்டும். 2011-ல் அமைதியும், முன்னேற்றமும் ஏற்படும் வகையில் நல்லாட்சி மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்: சமத்துவ உலகை நோக்கி அழைத்துச் செல்லும் சோசலிசப் பாதையை அமைப்பதற்கான போராட்டத்தை வேகப்படுத்தும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன்:    தமிழர் பண்பாட்டைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை மீட்க வேண்டிய கடமைகள் நம் முன் நிற்கின்றன. புத்தாண்டில் இவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய மாற்றத்துக்காகப் பாடுபட உறுதியேற்போம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: கடந்த ஆண்டு எவ்வாறு கடந்து போனது என்பதை எண்ணிப் பார்க்கும் அதே வேளையில் புத்தாண்டு எவ்வாறு அமைய வேண்டும் என்பது நமது தொலைநோக்குப் பார்வையிலும், திட்டமிடுவதிலும் அடங்கியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர்,  கொங்குநாடு முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

new year greetings by P.M.: தலைமை யமைச்சரின் புத்தாண்டு வாழ்த்து

விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு,எளிய மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் இப்போது எதிர்மறைச் செயலபாடுகள் அல்லவா உள்ளன! இதை  இரட்டிப்பாக்கப் போகிறாரா!  ௨௦௧௧ ஆம் ஆண்டிலாவது மனித நேயம் கொண்டு நம் நாட்டு மக்களையும் நம் அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களில் எஞ்சியவர்களையும்  வாழவிடும் ஆட்சியைத் தரட்டும்! நல் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

First Published : 01 Jan 2011 12:00:46 AM IST


புது தில்லி, டிச. 31: நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நம்பிக்கையற்ற, மனச்சோர்வு நிலையை நீக்கி இந்த ஆண்டில் புதிதாகத் தொடங்குவோம். விலைவாசி உயர்வு, ஆட்சியதிகாரத்தில் தூய்மை, தேசியப் பாதுகாப்பு, சாதாரண மக்களுக்கு பாடுபடுதல் ஆகியவற்றில் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

top 5 readers opinion: dinamani: 01.01.11: முதன்மை 5 வாசகர் கருத்துகள்