swiss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
swiss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

Swiss, South Africa reconciliation attempt in Sri Lanka ‘ill-conceived’, says ICG

Swiss, South Africa reconciliation attempt in Sri Lanka ‘ill-conceived’, says ICG

[TamilNet, Saturday, 16 February 2013, 00:59 GMT]
Switzerland's backing of a South African post-Apartheid reconciliation initiative to bring adversarial parties in Sri Lanka to the negotiating table, is ill-conceived and has little chance of yielding any positive results, Alan Keenan, an ICG [International Crisis Group] Sri Lanka expert commented. Keenan "accused the Sri Lankan government of having no interest in fair negotiations with Tamil political parties, no intention to devolve meaningful power to the Tamil-majority northern province or the Tamil-speaking majority eastern province, and of going back on its many promises." The Swiss government funding and the South African brokering were behind the GTF convened and Burghof Foundation facilitated Berlin conference, informed circles say.

The ICG's open criticism on the move is quite significant in understanding the competition among the Establishments of powers and their privatised ‘peace facilitation’ corporates, political observers commented.

While the pliant Tamil National Alliance (TNA), with its propensity for expressing willingness to compromise on long-standing core demands of Tamils on nationhood and the right to self determination, sent a delegation to South Africa to strengthen contacts earlier this month, and officials from Sri Lanka and South Africa have been visited each other several times in the last few years, ICG warned in a report last November that “[g]overnments concerned with sustainable peace in Sri Lanka also need to be careful that their desire for constructive engagement does not end up facilitating Colombo’s intransigence and delaying tactics.”

"Current policies towards Tamils, especially in the northern province, were undermining their rights and damaging the prospects of a lasting political settlement," Keenan said, adding, “It is very important that both the Swiss government and the South African government make this lack of progress clear to the world and not allow the Sri Lankan government to mislead the world on this point. Both the Swiss and the South African governments should support a strong resolution at next month's session of the UN Human Rights Council in Geneva,” said Keenan.

While an Amnesty International report at the end of last year described a “climate of fear”, crackdowns on dissent and continued reports of torture, resultant deaths in custody, enforced disappearances and extrajudicial executions, Amnesty's expert on Sri Lanka, Yolanda Foster, told the Swiss media that carried the story that “[t]he real issue is a continued culture of impunity and on-going violations. This is not just about the past," Foster said.

Chronology:


Related Articles:
07.02.13   Civil Society insists on pre-constitutional recognition of T..
25.01.13   Soul searching in India, Obama wipes out tears
02.11.12   Sri Lanka demands ‘time and space’ to complete genocide
09.10.12   Genocide needs investigation but separation contextually unw..
26.03.12   LLRC centered resolution, an albatross around Tamils neck


External Links:
SwissInfo: Swiss push reconciliation plan for Sri Lanka


திங்கள், 25 ஜூன், 2012

கொடுமையிலும் கொடு்மை ! 2 ஆயிரம் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புகிறது சுவிட்சர்லாந்து

  புகலிடம் மறுப்பவர்கள் சில காலம் ஈழத்தில் இருந்து  இன்னல்களைப் புரிந்து கொள்ளட்டும்!
2 ஆயிரம் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புகிறது சுவிட்சர்லாந்து



தஞ்சம் கேட்ட சுமார் 2 ஆயிரம் தமிழர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சுவிட்சர்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது.ஒவ்வொரு மாதமும் 100-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் புகலிடம் கேட்டு சுவிட்சர்லாந்து வருகின்றனர். எனினும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கோரிக்கைக்கு வலுவான காரணங்களை காட்டுவதில்லை என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.புகலிடம் கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பும் சுவிட்சர்லாந்து அரசின் முடிவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் தமிழ் அமைப்புகள் நடத்தின.
கருத்துகள்

தனகளை அகதிகள் என்று சொல்லிகொண்டு பணக்கார நாடுகளில் குடி ஏறுவது ஏன் தவறு என்று தோன்றினால் மன்னிக்கவும்
By sa
6/25/2012 6:46:00 PM
ஒவ்வொரு நாடுகளிலும் அகதிகளாக வருபவர்களை அன் நாடு அனுமதிக்கவேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்நாடு செய்யவேண்டும் என்பது உலக நியதி இதை கடந்த ஒரு வாரங்களுக்கு முன் ஐகிய நாடுகள் தலைமை செயலர் பான் கி மூன் தெரிவித்தார் .எனவே இது வன்மையாக கண்ண்டிக்கதகது .
By mahendran
6/25/2012 5:17:00 PM

சனி, 8 அக்டோபர், 2011

Tasmilian voice in Swiss parliament? : வரலாற்றில் முதல் முறையாக சுவிசு பாராளுமன்றில் தமிழன் குரல்.


லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்றுவோம்.
அந்த அட்டைகளை எப்படி நிரப்புவது என்பதில் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தயக்கம் இல்லாமல் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கு தொலை பேசி ஊடாகவோ அல்லது நேரிலோ வந்து உதவிட தமிழர் தேர்தல் ஆணையகம் உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள்,வாக்கு அட்டைகளை தொலைத்து விட்டீர்களா கவலை வேண்டாம் , நீங்கள் வாக்களிக்க என்னுமொரு சந்தர்ப்பம் உள்ளதென்பதையும் அது சார்ந்த உங்கள் கேள்விகளுக்கும் எங்களை நாடுங்கள் , வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த செய்தியை லுசர்ன் (LUZERN) மாநிலத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை வாக்களிக்க உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.லதன் சுந்தரலிங்கம் அவர்கள் பல்லின மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதினால் வேற்று மொழி இன மக்களையும் லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு வாக்களிக்க நீங்கள் உங்களால் இயன்ற பிரச்சார வேலைகளை செய்யுமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
நன்றி
தெய்வேந்திரன்
தலைவர் ( தமிழர் தேர்தல் ஆணையகம் )
தொடர்புகளுக்கு:
078 685 87 66
078 744 59 60

வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு யூலை நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்-பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக- 28.07.2011

கறுப்பு யூலை நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்-பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக- 28.07.2011


சுவிஸ் ஈழத்தமிழரவை ஊடக அறிக்கை
பேர்ன்;, 19 யூன் 2011
அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையின் புரட்சிகரமான விடுதலை வணக்கங்கள்
எமது தமிழீழ தேசம் சிறீலங்கா பயங்கரவாத இனவெறியரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொடிய இன அழிப்பால் பல மனித அவலங்களைச் சந்தித்திருக்கின்ற போதும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் முகம்கொடுத்த கூட்டுப்படுகொலைக்களமானது தமிழீழ மக்கள் அனைவரதும் உள்ளங்களிலும் அழியாத வடுவாக பதிந்துள்ள நினைவுகளாகும். சிங்களம் தனது கொடிய இனவெறி கோரத்தாண்டவத்தை தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட கொடிய நாட்களாகும். துமிழர்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாடு அவசியமே என்று திண்ணமாகக் கூறிய நாட்களாகும்.
அன்று மட்டுமா? இத் தொடர் தமிழின அழிப்பு வரலாற்றில் முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலைக்களமும் இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்;கிறது. சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளானது பல சர்வதேச நாடுகளின் கவனத்தையும் தமிழர்கள் மீது ஈர்த்துவருகிறது. ஆனால் நாம் வாழும் சுவிஸ் நாடு இவை சார்ந்த தனது எவ்வித நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டாது மௌனம் சாதித்து வருகிறது. சமபொழுதில் போர் காரணமாகவும் அரச பயங்கரவாதத்தாலும் புலம்பெயர்ந்து அகதித் தஞ்சம் கோரி நிற்கும் எமது உறவுகளை மனிதபண்பற்று கொலைக்கள நாடாம் சிறீலங்காவிற்கு திரப்பியனுப்பிவருகிறது. சுவிஸ் நாட்டின் இப் பாராமுகத்தைக் கண்டித்து எதிர்வரும் 28-07-2011 வியாழக்கிழமை 14 மணிக்கு பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்ப ஒன்றுகூடலும் கறுப்பு யூலை நினைவு கூரலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமான ஓர் காலகட்டத்தின் அவசியமான இக் கவனயீர்பில் அணி அணியாக ஒன்றுதிரளுமாறு சுவிஸ் ஈழத்தமிழரவையினராகிய நாம் உரிமையுடன் அழைக்கிறோம்.
தமிழீழமே தாகமென எம்முறவுகள் மானச்சாவேந்தி வீழ்ந்த நாளில் வீச்சுடன் எம் விடுதலைக்காய் எழுவோம் வாரீர்.
தொடர்புகளுக்கு: 079 705 63 35
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் ஈழத்தமிழரவை

புதன், 28 ஜூலை, 2010

சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள் இணைந்து வழக்கு தாக்கல் !
27 July, 2010 by admin
ஜேர்மன் நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக போர்க்குற்றம் இழைத்த ஒரு சிறிலங்கா இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் டயஸ் என்பவரை, அவர் குற்றமிழைத்து 4 மாதங்களே கழிந்த நிலையில் சிறிலங்கா அரசு நியமித்ததை ஜேர்மனி ஏற்றுக்கொண்டிருப்பதற்கு எதிராக வழக்கு தாக்கலாவதாக சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் சட்ட விவகாரக்குழுவின் இணைப்பாளரான செல்வி நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார். சுவிற்சர்லாந்து, நோர்வே ஆகிய இரண்டு நாடுகளிலும் வதியும் சுமார் 60,000 புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக இவ்விரு நாடுகளிலும் ஜனநாயக ரீதியில் ஈழத்தமிழர்களால் தெரிவான நாடு தழுவிய மக்கள் அவைகளான சுவிஸ் ஈழத்தமிழர் அவை (SCET), நோர்வே ஈழத்தமிழர் அவை (NCET) ஆகியவை அமெரிக்காவைச் சேர்ந்த இனவழிப்புக்கெதிரான தமிழர் (TAG) என்ற அமைப்போடு சேர்ந்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்கின்றன.

மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்களுக்கான பாதுகாப்புக்கான சாசனம் என்ற ஐரோப்பிய மனித உரிமைச் சாசனத்தை நோர்வே 1952 இலும் சுவிற்சர்லாந்து 1974 இலும் கைச்சாத்திட்டு அங்கீகரித்திருக்கின்றன. இந்தச் சாசனத்தின் பிரிவு 34 அனுமதிக்கின்ற வழக்குத்தாக்கல் செய்யும் உரிமைக்கு இசைவாக அச்சாசனத்தின் பிரிவுகளான 3, 8, 11(2), 12 ஆகியவை மீறப்படுகின்ற அடிப்படையிலேயே குறித்த வழக்குத் தொடுக்கப்படுகிறது. இவ்வழக்கிற்கான ஆதாரங்களில் ஜனவரி 2009 இல் இருந்து மே 2009 வரை வெளியான 182 வீடியோ பதிவுகளை ஆராய்ந்திருப்பதாகவும் அவற்றோடு சிறிலங்கா இராணுவத்தளபதி ஜகத் டயஸின் வன்னிமீதான படைநகர்வுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து தமது ஆதாரங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிடுகின்ற வழக்காளர்கள் 6 வீடியோ பிரதிகளையும், இரண்டு படங்களையும் நான்கு வரைபடங்களையும் பகிரங்கமாகவும் வெளியிட்டுள்ளனர்.

தம்மிடம் இருக்கக்கூடிய ஆவணங்கள் மாத்திரம் 10,740 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் 12,442 பேர் படுகாயப்படுத்தப்பட்டதையும் ஆதாரப்படுத்துவதாக சுவிஸ் மக்களவையின் பிரதிநிதி தெரிவிக்கின்றார்.
நாட்டு எல்லைகள் தாண்டிய நிலையில் குடும்ப ரீதியான உறவுகளைப் பேணி வாழுகின்ற ஒரு சமூகமான ஈழத்தமிழர் ஒரு நாட்டில் நடாத்தப்படுகின்ற ஓர் அரசியல் நியமனத்தின் ஊடாக, அதுவும் குறிப்பாகப் போர்க்குற்றம் புரிந்தவராகக் கருதப்படும் ஒருவரால், அச்சுறுத்தலுக்குள்ளாவது தொடர்பான சட்டவியற் கரிசனைகளின் அடிப்படைகளைக் கொண்டதாக குற்றப்பத்திரிகை அமைகிறது.

குறித்த நாடான சிறிலங்கா சட்டரீதியான விசாரணைகளை மறுதலித்து இன ஒடுக்குமுறையைக் கையாளும் நிலையில் விசாரணைக்கான தார்மீக அடிப்படைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதாக வழக்கைத் தாக்கல் செய்வோர் குறிப்பிடுவதோடு, ஐ.நா. சபையின் விசாரணை நடந்து முடிந்திருக்காத தறுவாயில் குறித்த சாசனத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்தாகவேண்டிய நிலையைத் தாம் எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

ஓர் ஐரோப்பிய யூனியன் நாடானது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இன்னொரு நாட்டின் இராணுவத் தளபதியை தனது நாட்டிற்கான தூதராக ஏற்றுக்கொள்வது எந்த வகையில் ஐரோப்பிய சமூகத்திற்கு ஏற்புடையது என்ற கேள்வியை இவ்வழக்கு ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றிடம் கோருகிறது. ஒரு நாட்டின் தூதராக செல்பவருக்கு அந்நாட்டின் சட்டங்களிலிருந்து அரசியற் கேள்விக் கோட்பாட்டிற்கிணங்க விலக்கு வழங்கப்படுவதால் உள் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடருவதென்பது இயலாதது. இந்நிலையில் ஐரோப்பிய மட்டத்தில் குறித்த விவகாரத்தை அணுகுவதாக சுவிஸ், நோர்வே மக்களவைகளின் சட்டக் குழு தெரிவிக்கிறது.

குறித்த சட்ட நகர்வை மேற்கொள்ளும் அதேவேளை சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள், ஈழத்தமிழரின் அவலங்கள் தொடர்பான கவன ஈர்ப்பு முன்னெடுப்பாக சுவிஸ் ஈழத்தமிழர் அவை ஆறு அஞ்சல் முத்திரைகளையும் வெளியிட்டுள்ளது. இம் முத்திரைகளைப் பயன்படுத்தி தமது கருத்துக்களை உரிய வட்டாரங்களுக்குத் தெரியப்படுத்துமாறு ஈழத்தமிழரவை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நோர்வே, சுவிஸ்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் ஜனநாயக ரீதியாகத் தெரிவான நாடளாவிய தமிழர் அவைகள் அண்மையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் இன அழிப்புக்கெதிரான தமிழர் எனும் அமைப்போடு சட்ட ரீதியான முன்னெடுப்புக் குறித்து ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டுள்ளன. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கெதிரான முதலாவது சட்டநடவடிக்கையாக ஜகத் டயஸைத் தூதுவராக ஏற்றிருக்கு ஜேர்மனிக்கு எதிராக தொடுத்திருக்கும் இவ்வழக்கு அமைகிறது.

இதேவேளை, இதர நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் இவ் வேலைத்திட்டத்தில் இணைவது தொடர்பாக தம்மோடு கலந்துரையாடி வருகின்றன என்று சுவிஸ் ஈழத்தமிழரவையின் நிதிலா தெய்வேந்திரன் தெரிவிக்கிறார்.

சுவிஸ் ஈழத்தமிழர் அவை (SCET)

நோர்வே ஈழத்தமிழர் அவை (NCET)

இனவழிப்புக்கெதிரான தமிழர் (TAG)

தொடர்புக்கு:

ராஜீவ் சிறீதரன் –

அருள்நிதிலா தேய்வெந்திரன் -