national anthem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
national anthem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

இரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்: தேசிய கீதத்தை 1இலட்சம் பேர் பாடிச் சாதனை

இந்தியா வந்த இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றதே பெரும் இழுக்கு. அடிமை நாட்டில் அடிமை பாடிய பாடலை 100,00 பேர்  சேர்ந்து பாடியது அதை விடப் பெரும் இழுக்கு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ரவீந்திரநாத் தாகூர் நினைவு நாள்: 
தேசிய கீதத்தை 1 லட்சம் பேர் பாடி சாதனை
திருப்பதி, ஆக. 8-
 
இந்திய தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் சொந்த மாநிலம் ஆந்திரா ஆகும். இவரது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பதியில் 1 லட்சம் பேர் பங்கேற்று தேசிய கீதத்தை பாடும் நிகழ்ச்சியை திருப்பதி சிட்டி சேம்பர் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது.
 
திருப்பதி மகதி, ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கையில் தேசிய கொடி ஏந்தி இருந்தனர். 1 லட்சம் பேரும் ஒன்றாக இணைந்து தேசிய கீதத்தை 20 முறை பாடினார்கள்.
 
நிகழ்ச்சியில் ஆந்திர கனிம வளதுறை மந்திரி கல்லா அருணாகுமார், சித்தூர் எம்.பி. சிவப்பிரகாசம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தேசிய கீதத்தை பாடினர். இது ஒரு கின்னஸ் சாதனை என பதிவு செய்யப்பட்டது.
 
நிகழ்ச்சியில் மந்திரி கல்லா அருணாகுமார் பேசும் போது, தேசிய கீதம் இருக்கும் வரை ரவீந்திர நாத் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவரை யாரும் மறக்க முடியாது என்றார்.
<a href='http://ads.reach360ads.com/www/ads/click.php?n=a9a7d93e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ads.reach360ads.com/www/ads/ad_view.php?zoneid=1189&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a9a7d93e&ct0=INSERT_CLICKURL_HERE' border='0' alt='' /></a> 
 
கருத்து
 
Tuesday, August 09,2011 06:28 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
இரவீந்திநாத்து தாகூர் இன்றைய மே.வங்காளத்தில் உள்ள கல்கத்தாவி்ல் பிறந்த வங்காளி. சொந்த மாநிலம் ஆந்திரா எனத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Tuesday, August 09,2011 06:19 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
இந்தியா வந்த இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றதே பெரும் இழுக்கு. அடிமை நாட்டில் அடிமை பாடிய பாடலை 100,00 பேர் சேர்ந்து பாடியது அதை விடப் பெரும் இழுக்கு.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Tuesday, August 09,2011 02:00 AM, முல்லை இஸ்லாமி சொறி மைந்தன் said:
ஜனங்களில் மனங்களில் பசிபட்டினி துன்பம் பாருங்கள் இதுதான் இந்தியா, பஞ்சா.....பசிக்குது போடு பரோட்டா தாளிச்ச தக்காளி குருமா...... வெங்காய வடையாம் ஊத்தப்பம் கொடையா.... எல்லாம் வைத்தெரிச்சல் எங்க பரதேசி பான்னாடை மனுசங்களுக்கே... இட்டலி.... சட்டினி..... ராத்திரிக்கி........ பட்டினி.......... சுட சுட சுட சுட காப்பி.........!
Monday, August 08,2011 12:52 PM, மாயாண்டி said:
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத மராத்தா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ சுப நாமே ஜாகே, தவ சுப ஆஷிஷ மாகே, ஜாஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
On Monday, August 08,2011 02:25 PM, ஆனந்த் said :
சூப்பர் மாயாண்டி
On Monday, August 08,2011 04:25 PM, raga said :
நான் இதை இரண்டு முறை படித்தேன். சூப்பர். பக்கா.வெரி குட் maayandi
 

Suit against national anthem : தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை எதிர்த்து மனு

அடிமை ஆட்சியின் பொழுது இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய பாடலை நாட்டு வாழ்த்தாக வைத்திருப்பது நாட்டிற்கு இழுக்கு. எனவே,இப்பாடலையே  எடுத்து விட்டு  அனைத்துத் தேசிய  இனங்களையும் எதிரொலிக்கும் வகையில் வேறு பாடலை நாட்டுப்பாடலாக அறிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை 
எதிர்த்து மனு

First Published : 09 Aug 2011 12:12:46 PM IST


மும்பை, ஆக.9: தேசியகீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்ட் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.சிந்த் என்ற வார்த்தை 1950-ம் ஆண்டில் சிந்து என அரசால் மாற்றப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சிந்து என மாற்றப்பட்டாலும், தேசிய கீதத்தில் சிந்த் என்றுதான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.சிந்த் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும், சிந்து நதி இந்தியாவிலும் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 26 ஜனவரி, 2011

Century celebrations of national anthem: தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம்

தாகூர் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால், இந்தப்பாடல் ஆங்கிலேய அரசரை வாழ்த்திப் பாடுமாறு கேட்டதற்கு இணங்க எழுதப்பட்டது. இந்தியா ஒட்டு மொத்தமாக ஆங்கிலேய அரசரைப் போற்றுவதாகத்தான் பாடல் அமைந்துள்ளது. இந்தியாவை வாழ்த்தி அல்ல. விடுதலை நாட்டில்  இன்னும் அடிமையாக நம்மை ஆக்கும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக - தேசிய கீதமாக- வைத்திருப்பதே இழுக்கு. இதில் வேறு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் என்பது பெரும் அவமானச் செயல்.  செம்மறியாடுகள் போல் மக்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது இப்பாடலைப் போற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஓர் அடிமை இந்தியத்தாயே தன் ஆட்சியாளனனைப் போற்றுவதாக எழுதிய பாடலை  நாட்டை வாழ்த்துவதாகக் கருதும் அறியாமைக்கு முடிவு எப்பொழுது பிறக்கும்? தேசிய  இனங்களின் கூட்டரசாக நம்நாடு அமையும் பொழுது பிறக்குமோ? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம் பிரசார திட்டம்

First Published : 26 Jan 2011 06:25:17 AM IST


சென்னை, ஜன. 25: தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாடப்பட்டதன் நூற்றாண்டை முன்னிட்டு வெண்மை பாரதம் என்ற பிரசார இயக்கத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கியுள்ளது என அந்த நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் கே.ஆர். நாகராஜன் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:இன்றைய நவீன சமுதாயத்தில், நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் முழுமையானவர்களாக உருவெடுப்பதுடன், அடுத்த தலைமுறையின் முன்னேற்ற பாதைக்கு வழிகாட்ட முடியும்.இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நாளைய தலைமுறையை வெண்மையாக மாற்றுவதும் மட்டுமே 2011-ம் ஆண்டின் குறிக்கோள். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் முதன் முதலில் பாடப்பட்டது.இந்த பாடல் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த தேசியகீதம் முதன் முதலில் பாடப்பட்டதன் நூறாவது ஆண்டு 2011-ம் ஆண்டாகும். இதனை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் வெண்மை பாரதம் என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள் முன்வந்தன. இருப்பினும், சுதந்திரம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு காட்சியை உருவாக்கி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரசாரம் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதே சமயத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக நடிகர் அர்ஜுன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார் நாகராஜன்.இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறியது: நாட்டுபற்றை உணர்த்தும் வகையில் செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்படுவது பெருமை அளிப்பதாக உள்ளது. தேசிய கீதம் பாடப்பட்டதன் நூற்றாண்டு விழாவை நாட்டிற்கு உணர்த்தும் வகையில் இந்த நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள வெண்மை பாரதம் திட்டம் அனைவரின் பாராட்டுக்குரியது என்றார் அர்ஜுன்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

national anthem in singhalam only : சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்

நாமும் தமிழில் நாட்டுப்பண் பாட வேண்டினோம். ஆனால் உணர்வு மழுங்கிவிட்டதால் கைகூடவில்லை. இலங்கையில் தமிழில் நாட்டுப்பண் பாடும்  உரிமை  இருந்தது. இல்லாத உரிமையைக் கேட்பது வேறு. இந்தியத்தால் இருக்கின்ற உரிமையைப் பறிப்பது வேறு. வேறுபாட்டைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும். சிங்களம் அவர்களுக்குரிய நாடல்ல என்னும் பொழுது நாட்டுப்பண் தேவையில்லை. ஆனால், சிங்களத்தில் பாட வேண்டும் என்ற கட்டாயம் வரும பொழுது  அதனை  வழக்கம்போல் தமிழில் பாட இசைவதுதான் சரியான செயலாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தல்

First Published : 27 Dec 2010 04:33:59 AM IST

Last Updated : 27 Dec 2010 05:33:52 AM IST

கொழும்பு, டிச. 26: இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாட வேண்டுமென தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டது.÷இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணத்தில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அங்குள்ள தமிழ் வழிக்கல்வி கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாட அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாட வேண்டுமென நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் கடுமையாக வலியுறுத்தினர். இதற்கு மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.÷இதனால் நிகழ்ச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மாணவிகளுக்கு சிங்கள மொழி சரியாகத் தெரியாததால் மிகுந்த சிரமப்பட்டு பாடலைப் பாடினர். இலங்கையில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் 1952 முதல் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர் ராஜபட்ச இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டுமென சமீபத்தில் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.ட
கருத்துகள்

இந்தியன் தமிழன் 100 % correct , தினமணி news பேப்பர் should not publish this kind of dirty news U do not have rights to sing ur தேசிய கீதம் in தமிழ் (India ) . why u expect other country has sing in tamil - this is called Hypocrite . If u wants தமிழ் try first from u . - ஸ்ரீ லங்கன் தமிழ்
By இர்ஷாத் -
12/27/2010 11:49:00 AM
let them accept and keep going -resistance won't help rather acceptance enhance the spirits of tamil -rightly said we accepted bengali as our nation anthem why not shrilankan tamil singala as thier national anthem
By pugal
12/27/2010 10:30:00 AM
ஸ்ரீ லங்கா அரசு ஈழத் தமிழர்களின் இன, மத, மொழி, கலை, கலாச்சார விழுமியங்களையும்,அவர்களின் பூர்வீக தாயகத்தையும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை தற்போது முடுக்கிவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா அரசு இந்த அளவிற்கு செல்வதற்கான பூரண உதவி, ஒத்தாசை, ஆலோசனை என்பவைகளை அதற்கு வழங்கி அதனை உற்சாகப்படுத்தியது இந்தியாவே. இராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் கனவுகண்ட இந்தியா இதுதானா? சீ! வெட்கம்!! -ஊர்க்குருவி-
By ramprasath
12/27/2010 8:23:00 AM
நாம் மட்டும் தமிழிலா தேசியகீதம் படுகிறோம்? இந்திய தமிழன்
By இந்திய தமிழன்
12/27/2010 5:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 13 டிசம்பர், 2010

national anthem in singha only : சிங்கள மொழியில் மட்டுமே இலங்கையின் தேசிய கீதம்?

மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே  நாட்டுப்பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டுப்பாடல் இருக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சிங்கள மொழியில் மட்டுமே
இலங்கையின் தேசிய கீதம்?


கொழும்பு, டிச.12- இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை தமிழிலும் பாடப்பட்டுவந்த அந்நாட்டு தேசிய கீதம் இனி அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படாது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதிபர் ராஜபட்சவின் அறிவுரையின் பேரில் இலங்கை அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

தமிழீழ விடுதலை இயக்கம் 30 வருடங்களின் முன் தோன்றியது இது போன்ற செயல்களினால் தான் என்பதை இன்றைய தலைமுரைனர் தெரிந்துகொள்வீராக , யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைத்தோம், ஆனால் இவர்களே முடிய விடமாடார்கள் போலிருக்கிறது. இவர்கள் தமிழன்களையும் அரவணைத்து நியாயமாக நடத்தாவிட்டால் இந்த அமைதி நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
By ராஜேஷ்
12/12/2010 9:11:00 PM
கனடாவில் தேசிய கீதம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.
By kumar
12/12/2010 8:45:00 PM
ஒரு நாட்டின் தேசிய கீதம் பல மொழிகளில் புழங்குவது தான் அதின் சிறப்புத்தன்மை. சமூகங்களை தொடர்ந்தும் பாதிக்கும் சாத்தியத்தின் அடக்குமுறை வடிவங்கள் தொடர்கின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இதய சுத்தியுடன் செயல்பட்டால் நாடு சுபீட்சமடையும்.
By வசந்தகுமார்.
12/12/2010 8:00:00 PM
நன்றி கெட்டவர்கள்! இட்டாலியன் மொழியில் பாட மாட்டார்களா! இதற்குத் தானா இத்தனை இலட்சம் தமிழர்களை வன்முறையில் கோரக் கொலை செய்தது! இதற்குத் தானா தமிழையும், தமிழனையும், தமிழகத்தையும் விற்று தன்னிகரற்ற கோடீஸ்வரத் தமிழினத் தலைவராக பவனி வந்தவரையே, தமிழினத் துரோகியாக்கினர்! ... ... நன்றி கெட்டவர்கள்!!
By அண்ணாத்தம்பி
12/12/2010 7:30:00 PM
இதில் என்ன தப்பு? அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியில் இருப்பது தவறொன்றும் இல்லையே.
By ரமணன்
12/12/2010 5:21:00 PM
இதில் என்ன தப்பு? அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியில் இருப்பது தவறொன்றும் இல்லையே.
By ரமணன்
12/12/2010 5:21:00 PM
இங்க மட்டும் தேசிய கீதம் எதுல பாடுறோம்? சிந்திக்கலாமா? வேண்டாமா ? தேசிய குற்றம் ஆயிடுமோ!
By Rav
12/12/2010 4:19:00 PM
இந்தியாவின் தேசிய கீதம் என்ன தமிழிலா இருக்கிறது?
By Inbaa
12/12/2010 3:24:00 PM
ஒரு நாட்டின் தேசிய கீதம் ஒரு மொழியில் இருந்து வருவது தான் வழக்கம். இது வரை தமிழிலும் இருந்து வந்தது தனிச் சிறப்பு. ஏனோ அதுவும் மாறப் போகிறது . நல்லது. எல்லைகளற்ற ஈழம் தனக்கென ஒரு தேசிய கீதத்தை உருவாக்கிக் கொள்ளட்டும்
By பூபதி
12/12/2010 3:20:00 PM
இலங்கை தமிழர்களின் நாடு இல்லை என்பதற்கு இதுவே சான்று தமிழர்கள் தனிநாடு கேட்பதில் தப்பில்லை .விரைவில் தனிநாடு கிடைக்க வாழ்த்துக்கள்
By சே.ரே.பட்டணம்.mani
12/12/2010 3:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 23 ஜனவரி, 2010

அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்..



நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால்,சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல். இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும். பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும். அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன. பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது. ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா? சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.
கருத்துக்கள்

சனகனமன பாடல் இந்தியாவை வாழ்த்தும் பாடல் அலல. இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேய அரசரை வாழ்ததி வரவேற்ற பாடல். அரசமைப்பு அளவில் இந்தியா விடுதலை பெற்றாலும் தொடர்ந்து ஆங்கிலேயரின அடிமையாகவே இருக்கிறோம் என்பதை இதன் மூலம் நாம் உணர்த்துகிறோம். எனவே வங்கக்கவிஞரின் இப்பாடல் பாடப்பட்ட சூழலை உணர்ந்து வேறொரு நாட்டுப்பண்ணை இந்திய அரசு அறிமுகப்படுதத வேண்டும. ஒரே மெட்டில் அவரவர் தாய்மொழியில் பாடும் வண்ணம் நாட்டுப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *