las student லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
las student லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 செப்டம்பர், 2011

னது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் எனக் கூறிய மாணவன்

எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் எனக் கூறிய மாணவன்

பதிவு செய்த நாள் : September 21, 2011


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது  புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேசுவரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு.
வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது முந்தைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் முல்லைத்தீவில் மிகவும் கடின சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்’ என கூறினான்.
இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளசு தேவானந்தா, வட மாகாண ஆளுநர். சீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags: 


வாசகர் கருத்துகள் (1)
  1. தம் இனத்தை வஞ்சகமாகக் கொன்று குவித்ததுடன் தொடர்ந்து அழிப்புப்பணியில் ஈடுபட்டு வரும் கொடுங்கோல் அரசின் அமைச்சரின் காலில் வீழா இச்சிறுவனின் தன்மானம் பாராட்டத்தக்கது.பரமேசுவரன் சேதுராகவன் பாரில் புகழ் பெற்றுச் சிறந்து விளங்குக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வியாழன், 2 செப்டம்பர், 2010

சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 7 போலீஸôர் இடைநீக்கம்

சென்னை, செப். 1: திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தக் காவல் நிலையத்தின் 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீஸôர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி லத்திகா சரண் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:  கடந்த மாதம் 17-ம் தேதி தனியார் பேருந்து நடத்துனர் வாசுதேவன் மற்றும் சிலர், ஒரு தகராறு தொடர்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசினர் சட்டக்கல்லூரி மாணவர் அசோக் குமாரை திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.  இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அசோக்குமாரை கைது செய்து காவல் நிலைய பிணையில் அனுப்பினர்.  ஆனால், அசோக்குமார் அன்று மாலையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில் இருந்த போலீஸôர் தன்னை தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்குச் சேர்ந்தார்.  அசோக்குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தல் வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டு தீவிரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.  பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.  இந்நிலையில், அசோக்குமாரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, திருக்கழுக்குன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, தலைமைக் காவலர்கள் குப்புசாமி, ராஜேந்திரன், முதல் நிலை காவலர்கள் செüந்தரராஜன், பார்த்திபன், நடராஜன் ஆகியோர் புதன்கிழமை தேதி தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளும் முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸôர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஜிபி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

காவலராகச் செயல்படாமல் அடக்காளராக வதைக்கும் காவல்துறையினரையும் அதற்குக் காரணமானவர்களையும் தண்டித்தால் இனிக் காவல் துறையினர் ஏவல் துறையினராகச் செயல்படமாட்டார்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *