dinamani news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dinamani news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 அக்டோபர், 2010

சென்னை சென்ட்ரல்- மதுரை வாராந்திர சிறப்பு ரயில்


சென்னை, அக். 8: சென்னை சென்ட்ரல்- எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எழும்பூர் வழி) சேவை இயக்கப்பட உள்ளது.  இந்த ரயில் (0653) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 9.50-க்கு புறப்பட்டு, மறு நாள் காலை 8.50 மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.  மறுமார்க்கத்தில் இந்த வாராந்திர சிறப்பு ரயில் (0654) மதுரையில் இருந்து அக்டோபர் 12, 19, 26 மற்றும் நவம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) மதுரையில் இருந்து இரவு 9.10-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.  இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.  இன்று முன்பதிவு:  இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது.
கருத்துக்கள்

செய்தியைச் சரியாக வெளியிடவும். தலைப்பையும் முதல் வரியையும் படித்தாலே தவறு புரியும். செண்டிரலில் இருந்து புறப்பட்டு நேரடியாக எழும்பூர் வரவும் வாய்ப்பு உள்ளதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 5:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
19-வது தங்கம் சுட்டது இந்தியா

தில்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளி்ல் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனிதா தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இந்தியா இதுவரை 19 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.இன்று நடந்த மகளிர் வில்வித்தைக் குழுப் போட்டியில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த நிலையில், 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ககன் நரங், இம்ரான் ஹசன் இணை மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தக் குழு முந்தைய காமன்வெல்த் சாதனையையும் முறியடித்தது.இன்று, 25 மீட்டர் அதிவிரைவு கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.மேலும், மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அல்கா தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
கருத்துக்கள்

வீரர்களுக்குப் பாராட்டுகள். தினமணி சுட்டது என்றெல்லாம் தமிழ் மரபிற்கு மீறித்தலைப்பு போடுவதை நிறுத்தி வென்றது என்றே போடலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 5:02:00 AM
Australia 40 over gold medals....
By kk
10/8/2010 6:10:00 PM
very nice carry on.
By bala
10/8/2010 1:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 8 அக்டோபர், 2010

தினமணி செய்தி வழக்கானது


மதுரை,அக்.7: ​பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் விபத்துகள் ஏற்பட்டது தொடர்பாக தினமணியில் வெளியான செய்திகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக ​வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.​ இதுகுறித்த வழக்கு விவரம்:​ ராமநாதபுரத்தில் பஸ் பாஸ் எடுத்துவராத மாணவி ஒருவர்,​​ நடத்துனரால் அவமதிக்கப்பட்டு பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார்.​ இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார்.​ பட்டுக்கோட்டை அருகே பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.​ இது தொடர்பான செய்திகளையடுத்து ​நீதிபதிகள் டி.முருகேசன்,​​ எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட்டது.​ அதில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச்செல்ல வேண்டும்.​ இலவச பஸ் பாஸ் எடுத்துவராதவர்களிடம் கடுமையாக ​ நடந்துகொள்ளக் கூடாது.​ பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் சென்றால் போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் புகார் செய்யுமாறு கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.​ இதுகுறித்து தினமணியில் எது இலவசம் என்ற தலைப்பில் 18.9.2010-ல் தலையங்கம் வெளியானது.​ இந்நிலையில் செப்டம்பர் 22-ம் தேதி மதுரை தல்லாகுளம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றபோது,​​ அதில் ஏற முயன்ற ஒரு மாணவரின் கால்கள் நசுங்கிச் சேதமடைந்தது.​ இதுதொடர்பாக தினமணி விரிவான செய்தி ​ வெளியிட்டது.​ இந்தச் செய்திகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.முருகேசன்,​​ டி.ராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.​ இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.​ அப்போது மதுரை,​​ திண்டுக்கல்,​​ நாகர்கோவில் உள்ளிட்ட தென்மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக பொது ​மேலாளர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.​ நீதிபதிகள்:​​ நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்,​​ ஓட்டுநர்,​​ நடத்துனர்கள் அரசின் கொள்கையை உணராமல் செயல்பட்டு வருகின்றனர்.​ கிராமப்புற மாணவர்களை ​பள்ளிகளுக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும்நிலை உள்ளது என்றனர்.அரசு வழக்கறிஞர்:​​ நடத்துனர்,​​ ஓட்டுநருக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளித்து விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம் என்றார்.நீதிபதிகள்:​​ உயர் நீதிமன்றம் முன்புற நிறுத்தத்திலேயே பஸ்கள் நிற்காமல் செல்வது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.​ மாணவர்கள் அதிகம் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் பஸ் நின்றுசெல்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள்,​​ இதுகுறித்து விரிவான பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

நீதிபதிகளுக்குப் பாராட்டுகள். தினமணியின் கடமை தொடரட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2010 1:51:00 PM
சிண்டு முடியும் செய்திகளைத் தவிர்த்து இப்படி உருப்படியான மக்களுக்கு பயன்படும் செய்திகளை வெளியிட்டால் அதுவே மக்களுக்கு செய்யும் பெரிய தொண்டு. தொடரட்டும் தினமணியின் இத்தகையப் பணி.
By நிரஞ்சன்
10/8/2010 11:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்