damage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
damage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2012

உ.வே.சா., வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம் U.Ve.Saa. House damage



தமிழை க்காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., 
வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம்
சென்னை:மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"தமிழ்த் தாத்தா' என, போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.

சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும்.

"தியாகராச விலாசம்': சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், அவர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.

அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார்.அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதால், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கி, தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டது.உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தாகூர் வந்த இல்லம் அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகா கவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலை நகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: இன்றைய முதல்வர் தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும். இவ்வாறு தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.

 

திங்கள், 9 ஜனவரி, 2012

frequence test will damage the dam- warning: அடிக்கடி ஆய்வு செய்தால் அணை பலவீனமாகிவிடும்




கோவை:""பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது,'' என, முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றிய பொதுப்பணித் துறை இன்ஜினியர் (ஓய்வு) விஜயகுமார் கூறினார்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்கம், கோவை கிளை சார்பில், "முல்லைப் பெரியாறு அணை - உண்மை நிலை' என்ற தலைப்பில் கருத்தரங்கு, கோவையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு பின், தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த இன்ஜினியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜயகுமார்(ஓய்வு) கூறியதாவது:பலமாக இருக்கும் அணைப் பகுதியை பல முறை தொடர்ந்து ஆய்வு செய்தால், தானாகவே அணை பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அணை குறித்து, "டேம் பிரேக் அனாலிசஸ்' செய்துள்ளேன். இதன்படி அணை உடைந்து தண்ணீர் வெளியேறினால், நிலத்தின் கீழ்மட்டத்தை நோக்கித்தான் பாயும். நிலத்தில் மேல்மட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

அகில இந்திய தமிழர்கள் மற்றும் மலையாளிகள் நல அமைப்பு தலைவர் அனுப் ஆண்டனி, பொதுச் செயலர் வினோத், பொருளாளர் அஜீத்குமார் ஆகியோர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. எங்கள் அமைப்பு சார்பில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். பொங்கல் பண்டிகை முடிந்ததும், கோவையிலுள்ள பல்வேறு மலையாளிகள் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்று, கேரள முதல்வரிடம் மீண்டும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில் குறும்படம் திரையிடப்பட்டது.

சனி, 15 அக்டோபர், 2011

great wall of china is in damaging condition: சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 
சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 பெய்ஜிங், அக். 15-
 
உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.
 
அதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும். மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.
 
இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டு தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.