cong. soniya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cong. soniya லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 டிசம்பர், 2010

dinamani editoriyals about sonia speech of corruption: தலையங்கம்: உதட்டளவு ஆதங்கம்!

இவ்வளவு தெளிவாகத்தலையங்கம் எழுதிவிட்டு உதட்ளவு நடிப்பை    உதட்டளவு ஆதங்கம் எனத் தவறாகக் குறிக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: உதட்டளவு ஆதங்கம்!

First Published : 23 Dec 2010 02:12:00 AM IST

Last Updated : 23 Dec 2010 04:28:35 AM IST

ஜேப்படித் திருடர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் திருடிவிட்டு, "அதோ திருடன், அதோ திருடன்' என்று கூக்குரலிடுவார்கள். ஏதாவது அப்பாவியை அடையாளம் காட்ட, கூட்டம் அந்தப் அப்பாவியைத் துவைத்தெடுக்க ஜேப்படித் திருடனும், கும்பலும் தப்பிவிடும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83-வது சிறப்புக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராகப் போர்தொடுக்கப் போவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சூளுரைத்திருப்பது ஜேப்படித் திருடனின் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகியிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் என்று இவை எல்லாவற்றிலும் சம்பந்தப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும். இந்த நிலையில், ஊழலுக்கு எதிராகப் போர்தொடுக்கப் போகிறோம் என்றும், ஊழலை சகிக்க மாட்டோம் என்றும் வீரவசனம் பேசுவதைப் பார்த்தால், இந்த ஊழலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது போலவும், நடந்த தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட தனி நபர்கள்தான் காரணமே தவிர கட்சிக்கு எந்தவிதத் தொடர்போ தார்மிகப் பொறுப்போ இல்லை என்பதுபோலவும் அல்லவா இருக்கிறது?ஊழல் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாகவும், ஊழல் சமுத்திரத்தில் மூழ்கிக் களித்தவர்களாகவும்தான் இருந்திருக்கின்றன. ஓரிருவர் எத்தகைய ஊழலிலும் தொடர்புடையவராக இல்லாமல் இருந்திருந்தால், அவர் எந்தவிதப் பதவியையும் அனுபவிக்காதவராக இருந்திருப்பார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஊழல், காற்றைப்போல இந்திய நிர்வாகத்தில் வியாபித்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த லட்சணத்தில், சுதந்திர இந்தியாவின் 63 ஆண்டுகால சரித்திரத்தில் 51 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்கிற நியாயமான கேள்விக்கு சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.பிரதமர் மன்மோகன் சிங் பெரிய மனது வைத்து, தான் நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுமுன் ஆஜராகி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தைப் பற்றி விளக்கம் அளிக்கத் தயார் என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிக் கைதட்டல் பெற்றிருக்கிறார். தனக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும், தான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் பேசியதைக் கேட்க நன்றாக இருக்கிறது.நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு என்பது பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு என்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கான அவசியம் என்ன என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வி. நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவுக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் விசாரிக்கும் உரிமை உண்டே தவிர, இதன் பின்னணி பற்றி விசாரிக்கவோ, தொடர்புடையவர்கள் என்று கருதுபவர்களை அழைத்து விசாரிக்கவோ உரிமை கிடையாது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்பது அப்படிப்பட்டதல்ல. பிரச்னையின் எல்லா பரிமாணங்களையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.தேவைப்பட்டால் தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார், ஏன் சோனியா காந்தி உள்ளிட்ட யாரையும் எவரையும் கூப்பிட்டு விசாரிக்கலாம், கேள்வி எழுப்பலாம். இத்தனைக்கும், நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் பாஜகவைச் சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படுமானால், அதன் தலைவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். அப்படி இருந்தும் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க ஏன் தயங்குகிறது என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் விசாரணைக்குத் தயாராகும் பிரதமர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும்? பயப்பட வேண்டும்?காங்கிரஸ் மாநாட்டில் பேசியவர்கள் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றம் செயல்படுவதை பாரதிய ஜனதா கட்சி தடுக்கிறது, மக்கள் பிரச்னையை விவாதிக்க முடியாமல் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். நாடாளுமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பது பாஜக மட்டுமல்ல. இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளும்தான். அப்படி இருக்க, பிரச்னைக்கு "மதவாத' முலாம் பூச காங்கிரஸ் முயற்சிப்பது அரசியல் மோசடி அல்லாமல் வேறென்ன?நாடாளுமன்றம் 2ஜி அலைக்கற்றை பிரச்னைக்காக முடக்கப்பட்டதில் அரசுக்கு நஷ்டம் சில கோடிகள். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பாமல் விட்டிருந்தால், நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் மன்றத்தை விழிப்படையாமல் விட்டிருந்தால் காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ. 1,76,0000000000. அதாவது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய். ஜேப்படித் திருடன் கூக்குரலிடும் கதைதானே இதுவும்?ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று சூளுரைத்திருக்கும் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் குடியிருப்பு, 2ஜி அலைக்கற்றை ஊழல்கள் தொடர்பான கோப்புகள் மாயமாய் மறைகின்றனவே, அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டு ஊழல் ஒழிப்பு கோஷத்தை எழுப்பட்டும். ஒருபுறம் கோப்புகள் காணாமல் போகின்றன. மறுபுறம், யோக்கிய வேஷம் போடுகிறார்கள். எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்!ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்தக் கட்சிக்கும் அருகதை கிடையாது. அதற்காக, ஊழலை தேசியமயமாக்கவா முடியும்? ஏதோ, உதட்டளவு ஆர்வமாவது காட்டுகிறார்களே என்று நாம் திருப்தியடைய வேண்டியதுதான்!

திங்கள், 8 நவம்பர், 2010

காங்கிரசு - தி.மு.க கூட்டணி உரசல்கள்

within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
இளையபெருமாள் கோவனின் பேச்சை அடிக்கடி படிப்பார் போலிருக்கிறது. சில உண்மைகளைக் குறிப்பிட்டாலும் பொதுவாக ஒரு சார்பு போக்கு எதிரொலிக்கிறது. (பெக்ட்ராம்) அலைக்கற்றை ஊழலைத் தி.மு.க.வின் ஊழலாகப் பார்ப்பதை விட அதன் முதன்மைப் பங்கு காங்.கிற்கும் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஈழப்படுகொலையின் பக்க விளைவுகளைத் தி.மு.க.வும் சுமக்கிறது என்பதைக் கட்டுரையாளர் மறந்து விட்டது ஏனோ தெரியவில்லை! தலைமை அமைச்சராக வர ஆசைப்பட்ட சோனியா மேதகு அப்துல்கலாம் அறிவுரை என்ற பெயரில் வழங்கிய எதிர்ப்புரையால்தான் அந்த ஆசையைத் துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை எளிதில் மறந்து விட்டார். நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பல மூத்த தலைவர்கள் இருப்பினும் தன் மகள் இந்திரா பிரியதர்சினியைக் காங். தலைவராக்கி நாட்டு அரசியலில் குடும்பப் பரம்பரையைப் புகுத்திய காங்கிரசு நேருவின் வழியில் கலைஞர் பதினாறடி பாய்ந்துள்ளார். அவ்வளவுதான். தேர்தல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்பையும் மீறி நெருக்கடி நிலை கொண்டு வந்து பலரைக் காலி செய்த இந்திராவின் மாபெரும் வன்முறை ஊழலைக் கட்டுரையாளர் இளைய பெருமாளாக இருப்பதால் அறியவில்லை போலும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(1 hours ago) ashok said:
nadappu kala arasiyalai therinthukolla intha katturaiyai padithale pothum. good article


புதன், 22 செப்டம்பர், 2010

கூடுதல் தொகுதி பெற்றால் மட்டும் போதாது: கார்த்தி ப. சிதம்பரம்


சென்னை, செப். 21: கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவது மட்டும் போதாது என்று கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்தார்.  தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:தமிழக அரசியலில் மாற்றங்கள் பல தேவை என்றால், ஆட்சி மற்றும் அதிகார ரீதியாக மட்டுல்ல. அரசியல், கலாசார ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.  தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது அதிபர் தேர்தலைப் போல நடக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இப்போதும் கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற அடிப்படையில்தான் தேர்தல் களம் அமைந்துள்ளது. மக்கள் வாக்களிக்கும்போது, யார் முதல்வராக வர வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு வாக்களிக்கின்றனர். இந்த அரசியல் உண்மையைப் புரிந்து கொண்டு தமிழக காங்கிரஸ் மாற வேண்டும்.  களத்தில் இறங்குவதற்கு முன்பு நமது அணியின் மட்டையாளர் யார் என்பதை தீர்மானிப்பது போல பிரதான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை விடுத்து, தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கப்படுவர் என்றால் அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இதுதான் காங்கிரசின் மிகப் பெரிய பலவீனம்.  தேர்தலுக்கு முன் நமது அணியின் தலைவர் யார், எவரின் தலைமையில் ஆட்சி அமையும் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூற வேண்டிய நிலை உள்ளது. இதற்கேற்ப மாறினால்தான் 2011-ல் நடைபெறும் தேர்தலை நாம் வெற்றிகரமாக சந்திக்க முடியும்.கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதால் மட்டும் நிலைமை மாறிவிடாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி என்ற திருமணத்தின்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், தலை தீபாவளி முடித்த பின் கசப்பு ஏற்பட்டு விடுகிறது. மக்களிடம் நமது உறுதியான நிலையைத் தெரிவிக்காததால்தான் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். நமது கருத்தைக் கூறினால், சிலருக்கு வருத்தம் ஏற்படும். ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்படக் கூடாது.இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண நாம் என்ன செய்தோம் என்பதை மக்களிடம் விளக்கிக் கூற காங்கிரஸ் தயாராக இல்லாததால் நம் மீது வீண் பழி சுமத்துகின்றனர். இதை நாம் மறுக்கக் கூட இயலாதவர்களாக உள்ளோம். விஜயகாந்த் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. தேர்தலுக்காக காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை. இது மக்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம். நீண்டகாலக் குறிக்கோளுடன் வரும் 2016 தேர்தல் வரை, வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வர வேண்டும். இதற்கு, காங்கிரஸ் மேலிடமும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தயாரா?இந்த நிலையை வரும் காலத்தில் ராகுல்காந்தி மாற்றுவார் என்று நம்புகிறேன் என்றார் கார்த்தி சிதம்பரம்.இதில் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி பேசியதாவது: மக்கள் பிரச்னைகளுக்காக போராடினால் பாதிப்பு வரும். இதைச் சமாளித்து, தடைகளைத் தகர்த்து எறியும் தலைவர்களே தமிழக காங்கிரசுக்குத் தேவை. அவர்களால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் கட்சியை ஏற்றி வைக்க முடியும் என்றார் அழகிரி.கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், சிந்தனையாளர் பேரவையின் தலைவர் கு. நீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

பாவம்! காங்.கின் பெருமையைச் செல்வப்பெருந்தகைக்கு விளக்கிய கார்த்திக்கு அவர் தந்தைதான் காங்.கின் தமிழினப் படுகொலைச் செயற்பாடுகளை விளக்க வேண்டும். சிங்கள அதிபரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியத்தின் துணை கொண்டு தமிழினத்தை ஒழித்த பெருமை பற்றிக் கூறிவரும் பொழுது காங்.கிற்கு வீண் பழி வந்து விட்டதாகக் கூறுகிறாரே! ஒரு வேளை சோனியா செய்த பாவச் செயலால் காங்.கிற்கு வீண் பழி வந்து விட்டது என விளக்க எண்ணுகிறாரோ! ஆட்சியே கானல் நீராக இருக்கும் பொழுது யார் தலைமை என்று கூற வேண்டுமாம். கனவு காண்பதற்காக அவ்வாறு கூறுவதாக வைத்துக் கொள்வோம். பிற அணியினரே அத் தலைமையைத் தோற்கடித்து விடமாட்டார்களா? சிதம்பரத்தையோ 
தன்னையோ முதல்வராக அறிவிக்க வேண்டும் என்ற நப்பாசையை வெளிப்படுத்துகிறார் போலும். கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய இன்னொரு கோவன்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 4:32:00 AM
Thalaivai Thangabalu is our CM canditate. He is State congress leader. Karthik what is your doubt?
By PA Valarmathi
9/22/2010 4:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *