akaramuithala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
akaramuithala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜூன், 2019

அளவளாவல் – கவிதை உரையாடல்

அகரமுதல


ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019
மாலை 5.30

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

தொடர்பிற்கு: சதுர்புசன் 98400 96329; கிருபானந்தன் 97910 69435

வியாழன், 21 டிசம்பர், 2017

காலத்தின் குறள் பெரியார் நூல் வெளியீட்டு விழா


‘காலத்தின் குறள் பெரியார்’ 

நூல் வெளியீட்டு விழா

மார்கழி 07, 2048 வெள்ளி

திசம்பர் 22,2017 மாலை 6.00

தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:  பேரா.சுப.வீரபாண்டியன்


அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும்,
வணக்கம்.
தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது என் குறட்பாக்கள். அதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குறட்பாக்களில் தளைபிழைகள் இருப்பின் அதைத் திருத்திட வேண்டும் – வெண்பா என்றால் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகியவை மட்டுமே இருக்க வேண்டும்; வேறு தளைகள் விரவி வரலாகாது – என்கிற அச்ச உணர்வோடு சென்ற ஆண்டு மென்மையும் மேன்மையும் ஒருங்கே பெற்ற செந்தமிழ் வேந்தர் (என்னை அவருடைய மகனாகவும் மாணவனும் ஆகவே உணர்கிறேன்) மின்னூர் தந்த மேதைமை முனைவர் மின்னூர் சீனிவாசன் அவர்களால் அறிமுகம் ஆன பாசுரப் பாவலர், பைந்தமிழ்ப் பற்றாளர் ஐயா வேணு.குணசேகரன் (என் இன்னோர் ஆசான்) அவர்கள் துணையுடன் சென்ற சனவரித் திங்கள் அன்று தொடங்கிய பணியும், காலத் தட்டுப்பாடும், வாழ்வியல் முட்டுப்பாடுகளும், பொருளியல் கட்டுப்பாடுகளும் இணைந்து ‘அய்யாமொழி பொய்யாமொழி’ எனத் தொடங்கப்பட்ட நூல் காலங்கடந்து இப்போது “காலத்தின் குறள் பெரியார்“ என்று பொலிவு பெற்றுத் தமிழுலகில் தவழ இருக்கின்றது.
  ஐயா மின்னூர் சீனிவாசன் அவர்களும் குறிஞ்சி தந்த கோமான் பாச்சலூர் மாணிக்கம் அவர்களும் நூலில் வாழ்த்துப்பாக்கள் வழங்கியுள்ளனர்.
 பொன்னுரையைப் பேரா.சுப.வீ அவர்களும் பண்புரையை யாசுமின் அவர்களும் அன்புரையைத் தோழர் ஓவியா அவர்களும் குணவுரையைப் பாசுரப்பாவலர் வேணு.குணசேகரன் அவர்களும்
மனவுரையைத் திருக்குறள் மாமணி குறள் பா.தாமோதரன் அவர்களும் இனவுரையை அண்ணன் பா.பொன்னுராசன் அவர்களும் மணியுரையை அரிமா சு.மணிவண்ணன் அவர்களும் முத்துரையை முயற்சி க.முருகேசன் அவர்களும் அளித்துள்ளனர்.
முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை காலக்கட்டுப்பாட்டினால்…பின்னுரையாய் என்னுரை எழுதி இணைக்கப்பட்டு உள்ளது.
அன்பர்கள் அனைவரும் 22.12.2017 வெள்ளியன்று மாலை 6 மணியவில் எழும்பூர் இக்சா (ICSA) மையத்தில் முனைவர் மின்னூர் சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் வருகை தந்து நூலையும் இந்த வேலையும் வெற்றிபெறச் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
என்றென்றும் தங்களுடன் தங்களுக்காய்
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

புதன், 1 மார்ச், 2017

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்




தமிழின் தனிப்பெருந் தன்மைகள்
5. செம்மை
 சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது.
எ-டு:
தமிழ்                                                                தெலுங்கு
தன்மைப் பெயர்     யான்,                         யாம்    ஏனு, மேமு
நான், நாம்                                                      நேனு, மனமு
முன்னிலைப் பெயர்     நீன்(நீ)              நீம்    நீவு, மீரு
படர்க்கைப் பெயர்     தான், தாம்          தானு, தாமு
அ,இ,உ என்னும் முச்சுட்டெழுத்துகளையும் எ,ஏ, யா என்னும் மூவினாவெழுத்துகளையும் அடியாகக் கொண்ட தமிழ் ஐம்பாற் பெயர்களின் ஓரியலொழுங்கு, மொழிநூலறிஞரின் உள்ளத்தை மிகக் கவரத் தக்கது. இது போன்ற அழகிய மெய்ப்பொருளிய லொழுங்கை வேறெம் மொழியிலேனும் மொழிக் குடும்பத்திலேனும் காண முடியாதென்று கால்டுவெலார் வியந்து கூறியிருத்தலைக் காண்க.
  புதுப்பெருக்கு நீரைக்குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல் மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல் தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய ஆற்றுதலை (திறமையோ டிருத்தலை)க்  குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச்சொல் கன்னடத்தில் (மாடுதல் என்னும் வடிவில்), பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும் கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.
செந்தமிழெழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும் ரகரம் தொகல் தெலுங்கிற்கும் பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும், சிறப்பாகும்.
எ-டு:
மலையாளம்     :     கஞ்சி-கஞ்ஞி, நீங்கள்- நிங்ஙள், வந்து- வந்நு.
தெலுங்கு :     சுருட்டு – த்சுட்ட, பருப்பு – பப்பு, மருந்து – மந்து.
கன்னடம் :     பள்ளி -ஃக(ஹ)ள்ளி, பாளை -ஃகா(ஹா)ளெ, பொன் -ஃஎகா(ஹொ)ன்னு.
வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்: ஆயிரம் – சகஃச்ஸ்ர, கலுழன் – கருட (g), கோட்டம் – கோ ஃட்(ஷ்)ட, கோட்டை – கோட்ட, சாயை – சாயா (உ), தூணம் –  ஃச்(ஸ்)தூணா, நகரம் – நகர (g), பள்ளி – பல்லி, மயில் – மயூர, முகம் – முக (kh), வட்டம் – வ்ருத்த.
  இங்ஙனம் தமிழுக்கு எது வழுநிலையோ, அது பிற மொழிகட்கு வழாநிலையாம். தமிழுக்குச் செம்மை இன்றியமையாத பண்பாயிருத்தலி னாலேயே, அது செந்தமிழ் எனப்பட்டது. ஒருவன் பொதுமக்களோடு எத்துணைக் கொச்சையாய்ப் பேசினும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும் இலக்கண நடையைக் கையாளவேண்டு மென்பதே தமிழ் மரபு. அம் மரபே, மூவாயிரம் ஆண்டாகத் தமிழைக் கெடுக்கப் பகைவர் சூழ்ச்சி செய்துவரினும், அது கெடாவாறு அதனைக் காத்து வந்திருக்கின்றது. உலக வழக்கு வேறு; கொச்சை வழக்கு வேறு. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. ஆதலால், பிற மொழிகள்போல் தமிழையுங்கருதிக்கொண்டு, பொதுமக்கள் கொச்சை நடையே உலக வழக்கென்பது தமிழுக்கு எட்டுணையும் பொருந்தாதென்க. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=189&pno=13
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் :
செந்தமிழ்ச் சிறப்பு
(தொடரும்)

திங்கள், 13 பிப்ரவரி, 2017

சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்





சொந்தக் காணிகளில்

குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்:

தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்

  விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம்  நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள்  2 ஆவது வாரமாகத் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r.
  மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
வெகு மக்கள் அமைப்பின் ஒன்றியம் பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தமது ஆதரவினை வழங்கியுள்ளது.
  தம் மீது கரிசனை கொண்டு பல்வேறு அரசியல் தரப்புக்களும் தம்மைச் சந்தித்து வருகின்ற போதிலும், எவரும் தமது  சிக்கலுக்குத் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.
  இதேவேளை கேப்பாப்பிலவு பிலக் குடியிருப்பு மக்களுக்கு யாழ். இளைஞர்கள் ஆதரவு தெரித்து யாழ்ப்பாணம்  பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 அதேபோல்,  கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், படையினர் வயமுள்ள தமது காணிகளை விடுக்குமாறு வலியுத்தியும் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
படங்கள் :  ஈழ(த்)தேசம்