1000 ஆண்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1000 ஆண்டுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அமெரிக்காவில் 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை - கிறுக்குத்தனம்



இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான தண்டனைகள் வழங்குவது அமெரிக்காவின் வழக்கமாக உள்ளது. மனிதர்கள் வாழக்கூடிய காலத்திற்கும் மிகுதியாகச் சிறைத்தண்டனை விதிப்பதன் மூலம்  என்ன பயன் உள்ளது? ஆயுள் தண்டனைக்குப் பின் 1000 ஆண்டுகள் தண்டனை என்றால் கேலிககூத்தாக இல்லையா? நீதிபதியின் கணக்குப்படி 1000 ஆண்டுகள் வாழ்வதாகக் கொள்வோம்! அதுவும் ஆயுளில் அடங்கும் அலலவா? அப்படி இருக்க ஆயுள் தண்டனைக்குப் பின் எனக்கூறி யாரை முட்டாளாக்குகிறார்கள். அமரெரிக்கர்கள், அமெரிக்க நீதிபதிகளிடம் அறிவுக்குப் பொருந்திய வகையில் தண்டனை வழங்க அறிவுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


அமெரிக்காவில் பலாத்கார குற்றவாளிக்கு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அமெரிக்காவில் க்லிவ்லாந்து பகுதியில் 3 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அதன் பிறகு 1000 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு காஸ்ட்ரோ என்பவன், 3 பெண்களை கடத்திச் சென்து தனது வீட்டில் அடைத்துவைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, தப்பிச் செல்ல முயன்றால், மிகக் கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்தான். இவனது காவலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பி வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், பெண்களை மீட்டனர்.
இது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், காஸ்ட்ரோவுக்கு ஆயுள் தண்டனையும், அது முடிந்த பிறகு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்


வெள்ளி, 28 ஜூன், 2013

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மீட்பு!


Temple images
காஞ்சிபுரம்: ஆரியம்பாக்கத்தில் புதைந்து கிடந்த, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் கால, ஈஸ்வரன் கோவிலை, தொல்லியல் துறையினர் கண்டெடுத்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ளது ஆரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் வடக்குப் பகுதியில், தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்திற்கு, மண் மேடாக இருந்து. இதன் மீது 5 அடி உயரம் கொண்டு சிவலிங்கமும், மூன்றரை நீளமும், ஒன்றரை அடி உயர நந்தி சிலையும் இருந்தது. இதன் அடியில் பழமையான கற்கோவில் இருக்கும் என, கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன், சுரேஷ் ஆகியோர், தொல்லியல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆய்வு பணி நடந்தது. இதுகுறித்து, தொல்லியல் துறை காப்பாட்சியர் லோகநாதன் கூறியதாவது: ஆரியம்பாக்கத்தில் உப்புக்கற்களால் கட்டப்பட்ட சிவன்கோவில் புதைந்து கிடப்பது கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளது. கட்டடத்திற்கு பக்கவாட்டில் கூழாங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. நில நடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் கோவில் கட்டங்கள் சேதமடையாமல் இருக்க, கூழாங்கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இக்கோவில் பல்லவர்கள் காலத்தின் இறுதியிலும், சோழர் காலத்தின் துவக்கத்திலும் கட்டப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.