வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஆகஸ்ட், 2013

மழைக்காலத்தில் வீட்டுப் பேணுகை!

மழைக்காலத்தில் வீட்டு ப் பேணுகை!
 
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78511520130820223951.jpg 
 

மழைக்கால, "நசநச'ப்பில் இருந்து, எப்படியெல்லாம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்பதை கூறும், கே.சேகர்: நான், "நீட் அண்ட் கிளீன்' ஹவுஸ் கீப்பிங் நிறுவனத்தை, நடத்தி வருகிறேன். தற்போது மழைக்காலம் என்பதால், வீட்டின் மொட்டை மாடியை, சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில், மழை நீரானது குப்பையோடு அடித்து செல்லப்பட்டு, தண்ணீர் வடிவதற்கான குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாடியிலேயே நீர் தேங்குவது, பழைய வீடுகளுக்கு, பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.வீட்டில், "மழைநீர் சேகரிப்பு திட்டம்' செயல்படுத்தினால், நிலத்தின் நீர்மட்டம் உயர்ந்து, கோடையில் வீட்டின் கிணறுகள் வற்றுவதை தடுக்கும். மழைச்சாரல் காரணமாக, வீட்டின் கதவு
கள் நனைந்து, சற்று உப்பிக் கொள்ளும். இதனால், கதவை சரியாக மூடி, திறப்பதில் சிரமம் ஏற்படும். இதை தவிர்க்க, தேக்கு போன்ற நல்ல மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
மின் சாதனங்களை பயன்படுத்தும் போது ஈரக் கையுடன், "ஸ்விட்ச்' களை கையாள கூடாது.
சமையலறையில் பயன்படுத்தப்படும், மிக்சி போன்ற சாதனங்கள், எப்போதும், "ஆன்' நிலையிலேயே இருந்தால், விபத்தை ஏற்படுத்தும்.

உபயோகம் முடிந்ததும், "பிளக் பாயின்டில்' இருந்து, "பிளக்'குகளை எடுத்து விடுவது நல்லது.கட்டில் மற்றும் சோபாக்களில் அமர்ந்து, சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், மழைக் காலத்தில், எறும்புகளின் புழக்கம், அதிகமாக இருக்கும். எறும்புகள் கடித்து, குழந்தைகளின் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. மழைக் காலத்தில், நோய் தொற்று அதிகம் என்பதால், வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.குறிப்பாக, வீட்டில் நோயாளிகள் இருந்தால், அவர்கள் கழிவறையை பயன்படுத்திய பின், "பாத்ரூம் கிளீனர்' அல்லது, "பினாயில்' மூலம் சுத்தப்படுத்துவது நல்லது. மழை நீரை தேங்க விடாமல் தவிர்த்தால், கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். பழைய பிளாஸ்டிக் மற்றும் டயர்களை, அவ்வப்போது அப்புறப்படுத்தினால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அதில் தங்கி, பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.

வியாழன், 23 மே, 2013

வீடு தேடி வரும் புத்தகம்!

வீடு தேடி வரும் புத்தகம்!

வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, புத்தகங்களை இலவசமாக வீட்டிற்கு வீடு தரும், சேதுராமன்: நான், சென்னை, அம்பத்தூரில் வசிக்கிறேன். இளம் தலைமுறையினரிடம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓய்வு நேரத்தில், புத்தகங்கள் வாசிக்காமல், "டிவி' பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதிலேயே, நேரங்களை செலவிடுவதால், தாய் மொழியான தமிழை கூட, மாணவர்கள் சிரமப்பட்டே படித்ததால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முயற்சித்தேன். இன்றைய சூழலில், பலருக்கு போதிய நேரம் இல்லாததால், நூலகத்திற்கு நேரடியாகச் சென்று படிக்க முடியாது. குழந்தைகளுக்கு நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதில், பெற்றோருக்கும் பல சிரமங்கள் உள்ளதை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய எண்ணி, டி.சி.எஸ்., நிறுவனத்தில், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பள வேலையை, ராஜினாமா செய்து, "பேன்யன் ட்ரீ' என்ற நூலகத்தை, நண்பர்கள் உதவியுடன், 2010ம் ஆண்டு, புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்தேன். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ப, புத்தகங்களின் விவரங்கள் பற்றிய குறிப்பை, "ரீடர்ஸ் கிளப்' என்ற, எங்களின் இணையதளத்தில் வெளியிட்டோம். வேலைச் சுமை காரணமாக, நூலகத்திற்கு நேரடியாக வர முடியாதவர்களுக்குத் தேவையான புத்தகத்தை, நாங்களே அவர்களின் வீடு தேடிச் சென்று இலவசமாக, "டோர் டெலிவரி' செய்கிறோம். தேவையான புத்தகத்தை, தொலைபேசி அல்லது இணையதளம் மூலம், எங்களுக்கு தகவல் தந்தால் மட்டும் போதும். லாப நோக்கத்தை தவிர்த்து, ஒரு சேவையாக, இந்நூலகத்தை நடத்தி வந்தாலும், புத்தகங்களின் விலை உயர்வு, புத்தகத்தை, "டோர் டெலிவரி' செய்வதற்கான, ஆட்களின் மாத ஊதியம் மற்றும் வாகனங்களுக் கான பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை சமாளிக்க, ஒரு நபருக்கு, மாத சந்தாவாக, 60 ரூபாய் வசூலிக்கிறேன். தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், எங்களிடம் சந்தாதாரர்களாக உள்ளனர். தொடர்புக்கு: 99621 00032.

செவ்வாய், 14 மே, 2013

பழைய வீட்டை 50 அடி தூரம் நகர்த்தும் முயற்சி வெற்றி!

வீட்டுக்குள் உட்கார்ந்து யோசிச்சாங்களோ....பழைய வீட்டை 50 அடி தூரம் நகர்த்தும் முயற்சி வெற்றி!
கோவை: கோவையில், முப்பது ஆண்டு பழமையான கட்டடம், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, அப்படியே பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில் இருக்கும் வீட்டை, எவ்வளவு தூரத்திலும் கொண்டு சென்று அமைத்து விடும் வசதிகள் உள் ளன. ஆனால், நம் நாட்டில் அத்தகைய வசதிகளும், சாத்தியக்கூறுகளும் குறைவு. ஆனாலும், வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தவோ, சிறிது தூரம் நகர்த்தவோ முடியும் என்ற நிலையை, சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன.ஹரியானாவை சேர்ந்த பொறியாளர்கள், ஜாக்கி மற்றும் சிறிய ரக ரயில் வீல் பயன்படுத்தி, ஒரு கட்டடத்தை உயர்த்தவோ, நகர்த்தவோ செய்து வருகின்றனர். இம்முறை, இந்தியாவின் பல நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில் அருகே வசிப்பவர் தங்கவேலு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமான வீட்டை, 50 அடி தூரத்துக்கு பின்நோக்கி நகர்த்தும் பணி, முடியும் தருவாயில் உள்ளது.
இது குறித்து, பணியை மேற்கொண்டு வரும் டி.டி.பி.டி., நிறுவன நிர்வாக இயக்குனர் சுசில் ஷிசோடியா கூறியதாவது:
முன்னோர் கட்டிய வீடுகளில், நவீன உத்திகளை பயன்படுத்தி, தேவையான மாற்றங்கள் செய்தால், வீட்டின் ஜீவன் மாறாமல் இருக்கும். பழைய வீடுகளை, உயர்த்துவது, சிறிது தூரம் நகர்த்துவது போன்ற பணிகளும் அத்தகையது தான். முதல்முறையாக ஹரியானாவில் இத்தகைய முயற்சியை மேற்கொண்டோம். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களிலும் செய்து வருகிறோம்.தற்போது கோவையை சேர்ந்த தங்கவேலுவின் பழைய வீட்டை, 50 அடி தூரம் பின்னோக்கி நகர்த்தும் பணியை, கடந்த பிப்., மாதம் துவங்கினோம். 400 டன் எடை கொண்ட 2,400 சதுரடி பரப்பிலான வீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளை பயன்படுத்தி, நகர்த்தும் பணியில் ஈடுபட்டோம். தற்போது, வீடு நகர்த்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.கட்டடத்தை நகர்த்திட, எலக்ட் ரிக் வயரிங், பிளம்பிங் சிஸ்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களை அப்புறப்படுத்தவில்லை. வீட்டின் பிடிமானத்துக்காக, ஜன்னல்களில் செங்கல் கட்டு கட்டப்பட்டுள்ளது. இதை, பணி முடிந்த உடன் இடித்து, மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தி விடுவோம். பணி துவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களை கொண்டு, 35 அடிவரை நகர்த்தியுள்ளோம். இம்மாத இறுதியில் வீடு முழுமையாக பின்னோக்கி நகர்த்தப்பட்டு விடும். பின், தரைத்தளத்தை மட்டுமே மீண்டும் சரிசெய்ய வேண்டும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், முன்னோர் கட்டிய, வாழ்ந்த வீடுகளை அப்படியே பாதுகாக்க முடியும். இவ்வாறு, கூறினார்.


வீடு நகர்த்த ஆகும் செலவு ரூ.20 லட்சம்

பின்நோக்கி நகர்த்தப்படும் தங்கவேலுவின் வீடு, தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்கள் கொண்டது. மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு பின்புறம், அவருக்கு சொந்தமான காலியிடம் நிறைய இருக்கிறது. "வீடு, ரோட்டின் முன்புறமும், காலியிடம் அதற்கு பின்புறமும் இருப்பதால் தனக்கு பயன் குறைவு' என்று கருதிய தங்கவேலு, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, வீட்டை 50 அடி தூரத்துக்கு பின்நோக்கி நகர்த்த விரும்பினார். அவரது திட்டப்படி, பணி மேற்கொண்ட பொறியாளர்கள், வீட்டை நகர்த்தி வருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடி தூரத்துக்கு நகர்த்தப்பட்டு விடும். அதாவது, வீட்டின் உரிமையாளர் விரும்பியபடியே, பிரதான சாலையோரம் அவருக்கு காலியிடம் கிடைத்து விடும். அதை அவர், தான் விரும்பியபடியே, வணிக உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும். வீட்டை நகர்த்தும் இந்த பணிக்கு மொத்தம் ரூ.20 லட்சம் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 14 நவம்பர், 2012

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்ட உரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு : முதல்வர்

இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு : முதல்வர்

First Published : 14 November 2012 11:17 AM IST
இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கு வீடுகள் கட்டித் தர ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்திலுள்ள  அகதிகள்  முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்கள் நலன் காக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அகதிகள் முகாம்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற வகை செய்தல், முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் மானியம் வழங்குதல்,  தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. மேலும், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்துதல், வீடுகளை பழுதுப்பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், நியாய விலைக் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை  ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 அகதிகள் முகாம்களில் ஒரு வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,500 நீடித்து நிலைக்கக்கூடிய புதிய வீடுகளை கட்டுவதற்கும், அதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுக்கும்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

வீடுகளில் ரூ. 1.70 இலட்சத்தில் சூரியஆற்றல் மின் திட்டம்

வீடுகளில் ரூ. 1.70 இலட்சத்தில் சூரிய சக்தி மின் திட்டம்

First Published : 27 October 2012 05:10 AM IST
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல்வேறு சலுகைகளுடன் "சூரிய சக்தி கொள்கையை' அரசு வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையேயும், பிற நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதற்குப் பிறகு வீடுகளில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுவதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காக தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அலுவலகத்தை அணுகி வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனது வீட்டில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ திட்டமிட்டு ஆலோசனை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஏனெனில், இதுவரை சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ பல லட்சங்கள் செலவாகும் என்றும், அதன் பிறகும் தொடர்ந்து பராமரிப்புச் செலவுகள் இருக்கும் எனவும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அரசு கொள்கையை வெளியிட்ட பிறகுதான், இந்தத் திட்டத்துக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன என "டெடா' அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷெரிஃப் என்பவர் கூறினார்.
மானியம் மற்றும் ஊக்கத் தொகை: மக்களிடையே சூரிய சக்தி மின் உற்பத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு மானியத்தை அரசு அளித்து வருகிறது.
அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் என்ற அளவில் மானியத்தை அரசு அளித்து வருகிறது.
இதுமட்டுமின்றி ஊக்கத் தொகையையும் அரசு இப்போது அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவிய நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 (உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை) என்ற வீதத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அடிப்படையிலும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசா என்ற அடிப்படையிலும் ஊக்கத்தொகையை அரசு வழங்கும்.
2014 மார்ச் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத்தொகையை பெற முடியும். அதோடு, மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அளவை கணக்கிடும் வகையில் தனிப்பட்ட மீட்டரை (நெட் மீட்டர்) பொருத்த வேண்டியதும் கட்டாயம்.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் கூறியது:
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவித் தருவதற்கென தமிழகம் முழுவதும் ஏராளமான முகவர்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள முகவர்கள் மூலம், சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே அரசின் மானியத்தைப் பெற முடியும். இந்த முகவர்கள் குறித்த விவரங்களை அறிவதற்கு முகமை அலுவலகத்தை மக்கள் அணுகலாம். மேலும் வீடுகளில் 1 கிலோ வாட் அளவு நிறுவு திறனுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கும்.
நிறுவனங்களைப் பொருத்தவரை 100 கிலோ வாட் நிறுவு திறன் வரை அரசு மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை நிறுவ வங்கிக் கடனும் கிடைக்கிறது.
15 ஆண்டுகளுக்குபிரச்னை இருக்காது: சூரிய சக்தி மின் திட்டம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு என்பதால், இப்போது நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
அதே நேரம் அவ்வப்போது சூரிய தகடுகளைத் தூசுகள் படியாமல் துடைக்க வேண்டும். தூசுகள் படிந்தால் உற்பத்தித் திறன் குறையும்.
மானியத்தை கழித்துவிட்டு செலுத்தினால் போதுமானது...வீடுகளில் 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும். இதில் அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது மொத்த திட்டச் செலவில் 30 சதவீத அளவு மானியத்தை அரசு வழங்கும்.
இந்த மானியத்தை கழித்துவிட்டு மீதித் தொகையை முகவரிடம் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.