விலகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விலகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2013

கப்பல் வீரர்கள் சிக்கல்: இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் விலகல்

கப்பல் வீரர்கள் சிக்கல்: இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் விலகல்

First Published : 26 March 2013 08:29 PM IST
கப்பல் வீரர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், இத்தாலிய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியுற்றதாக எழுந்த பலத்த சர்ச்சைகளால், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கியுலியோ தெர்ஸி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவுக்கு கப்பல் வீரர்கள் இருவரும் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரம் இத்தாலியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

மத்திய அரசில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகல்

மத்திய அரசில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகல்

மத்திய அரசில் இருந்து விலகுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவளவன் இன்று அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி, மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக விலகியதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.