விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை வேண்டும்: நார்வே

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
கொழும்பு, ஆக. 13-

நார்வே நாட்டின் சர்வதேச மேம்பாட்டு துறையின் முன்னாள் மந்திரி எரிக் சோலைம். 2006ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமாதானம் ஏற்பட முயற்சித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பெரு முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு உச்சக்கட்டப் போரில் விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து விட்டதாக இலங்கை அரசு கொக்கரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையின் இறுதிக்கட்ட போர் காலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எரிக் சோலைம் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது லட்சக் கணக்கானவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறி பல ஆண்டுகள் கடந்தும் சர்வதேச சமுதாயம் கண்களை மூடிக்கொண்டு போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள அனுமதித்து விடக்கூடாது.

இலங்கையில் நம்பகத்துக்குரிய ஜனநாயக முறை நிலவாததால் இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் இலங்கை செல்லும் ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் ஆணையர் நவீண் பிள்ளை, இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 22 மார்ச், 2013

சென்னை - மு.க.அழகிரி வீட்டில் புலனாய்வு


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரி பண்ணை வீட்டில்  புலனாய்வு  (சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை)
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
Tip to preserve Lettuce fresh
சென்னை, மார்ச்.22-

சென்னையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்கள் இறக்கமதி செய்ததில் ரூ.50 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக கார் டீலர் அலெக்ஸ், வருவாய் புலனாய்வு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

அந்த கார்களை வாங்கியவர்கள் வீடுகளில்தான் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த வகை சொகுசு காரில் ஒரு காரை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.

இதேபோல் ஒரு விலை உயர்ந்த கார் மு.க.அழகிரி வீட்டிலும் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுநாளே சி.பி.ஐ. சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட அனைவரும் இந்த சோதனை பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

மு.க.அழகிரியும், நெப்போலியனும் டெல்லியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள். சுமார் ஒரு மணி நேரம் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது தொடர்பாக தனது கவலையை மு.க.அழகிரி பகிர்ந்து கொண்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சனி, 4 டிசம்பர், 2010

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்குப் பிரிட்டன் வலியுறுத்தல்

குற்றங்கள் வேறு யாராலும் நிகழ்ந்திருந்தால் அரசிடம் உசாவுதலுக்கு வலியுறுத்தலாம். ஆனால் சிங்கள அரசே வன்கொடும் பேரழிவுகளையும் இன அழிப்புகளையும் செய்திருக்ககையில் அதனிடம் பன்னாட்டு உசாவல் குறித்து வலியுறுத்தி என்ன பயன்? தன் நண்பன் இந்தியா மூலம் தன் தடைகளை உடைத்தெறியும் வல்லமை மிக்கதாக அது விளங்குகிறது. மனித நேயம் மிக்க ஆன்றோர்களும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அரசுகளும் தாமே ஒரு குழுவை நியமித்து இன அழிப்பு பற்றிய உசாவுதல்களை
மேற் கொள்ள வேண்டும். அதற்கும் தண்டிக்கும் அதிகாரம் இல்லாவிட்டாலும் அக் குழு அறியும் உண்மைகள் தண்டிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பிடம் அதனை அளித்துத் தண்டனை வாங்கித் தர இயலும். ஆனால், எல்லா  வல்லரசுகளும் ஏதோ ஒரு வகையில்  அதற்கு உதவியதால்  அவை முட்டுக்கட்டை போடும். அத்தகைய அரசுகளையும் தூக்கி எறியும் வல்லமை அந்தந்த நாட்டு மக்களுக்கு வேண்டும். எனினும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை மனித உரிமை மீறல்கள்: விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

First Published : 03 Dec 2010 03:22:28 PM IST

Last Updated : 03 Dec 2010 05:05:21 PM IST

கொழும்பு, டிச.3- இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கெனவே நேரில் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சவும் அவரது சகோதரர்களும் போர்க்குற்றவாளிகள் என்று "விக்கிலீக்ஸ்" இணையதளம் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு பிரிட்டன் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள்

What Pranab Mugargee says about war crime inquary? Is India support the human disater or support the inquary?
By Singam
12/3/2010 9:23:00 PM
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ் நாட்டை ஏமாற்றும் கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையில் தமிழனுக்கு பாதுகாப்பு, மரியாதை இந்திய அரசிடமிருந்து கிடைப்பது நடக்காது. கருணாநிதி குடும்பத்தின் வீழ்ச்சி தமிழனின் எழுச்சி. அதே நேரம், ஜெயலலிதா ஆட்சியும் தமிழன் வாழ்வுக்கு உதவாது. தேசிய கட்சிகள் தமிழனை எழுவதை விரும்பாது. தேவை தமிழனுக்காக ஒரு புதிய எழுச்சி, புதிய கட்சி, சொல்கிறது இந்த பட்சி.
By பட்சி
12/3/2010 9:09:00 PM
மனித நேயமற்ற காட்டுமிராண்டி இராஜபக் க்ஷேவிற்கு ஆதரவு கொடுத்துவரும் முசோலினியின் வாரிசுகள் காந்தி தேசத்தை ஆட்சி செய்வதா ? தமிழினமே சிந்திப்பாயாக.
By திராவிடன்
12/3/2010 8:57:00 PM
lankasri com or மனிதன்.com parunkal
By vava
12/3/2010 5:27:00 PM
போர்க்குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்கள்?
By sbala
12/3/2010 4:33:00 PM
உலகில் எங்கு சென்றாலும் அங்கு தமிழன் இருப்பான் அரக்கன் ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டுவான்..கேடுகெட்ட இந்தியாவில்தான் இவனுக்கு பட்டு கம்பளம் ஏனென்றால் கழுகுகளுக்கு பிணம்தான் பிடிக்கும்.. வேறு எங்கு சென்றாலும் துடப்பம்தான் .. விதைத்ததை யாராக இருந்தாலும் அறுவடை செய்தாக வேண்டும்.. .
By tamilwin
12/3/2010 4:21:00 PM
RAJABHASHEY AND HIS FAMILY MEMBERS ARE UTTER CRIMINALS. THEY SHOULD BE PUNISHED AS PER THE LAW.
By PERUNCHITRANAR, PERAIYUR
12/3/2010 4:11:00 PM
இலங்கையின் நெருன்கியநண்பன் இந்தியா வையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
By Ran
12/3/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *