நீச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜூலை, 2013

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்

தன்னுயிர் கொடுத்து நண்பர்களைக் காத்த மாணவர் பரமேசுவரன்






கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுற்றுலா சென்ற மதுரை திருநகர் பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் இப் பகுதி மக்களின் மனதில் இருந்து இன்னும் அகலவில்லை.
 கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் இரு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சென்று, சக மாணவர்களைக் காப்பாற்றிய அந்த மாணவர், அலையின் சீற்றத்தில் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
 திருநகர் சி.எஸ். ராமாச்சாரியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 113 பேர் மற்றும் 5 ஆசிரியர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு ஜூலை 12 ஆம் தேதி சுற்றுலா சென்றனர்.
 தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரைக்குச் சென்றபோதுதான் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கு மாணவ, மாணவிகள் கடலில் கால்களை நனைத்தபடி நின்று கொண்டிருந்த வேளையில், ஒருசில மாணவர்கள் அலைகளில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் சிலரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றபோது, அவர்களை உயரமான மாணவர்கள் காப்பாற்றச் சென்றுள்ளனர்.
 அதில் திருநகர் காந்திஜி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பரமேஸ்வரன் (17)தண்ணீரில் தத்தளித்த தன் சக நண்பர்களைக் காப்பாற்றச் சென்றுள்ளார். நீச்சல் தெரிந்த பரமேஸ்வரனின் முயற்சியில் பாலாஜிராஜன், பாலமுருகன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த விஷ்ணுதரனையும் கரை சேர்த்த பரமேஸ்வரன், மீண்டும் கடலுக்குச் சென்றபோது திரும்பவில்லை. ஆனால், விஷ்ணுதரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கரையில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் மூழ்கிய சதீஷ்குமார், தேவ் ஆனந்த் ஆகியோரது உடல்களை மீட்டனர்.
 மூன்று மாணவர்களை மீட்ட பரமேஸ்வரன், நண்பர்களுடன் இருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரம் கழித்தே அவர் காணவில்லை என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களும் தள்ளப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு பரமேஸ்வரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
 இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர் அவரது பெற்றோர் சரவணன் - ராஜேஸ்வரி. நீச்சல் பயிற்சி பெற்ற பரமேஸ்வரனை, கடலில் மூழ்கி இறந்த நிலையில் பார்த்த அதிர்ச்சி இன்னும் எங்களைவிட்டு நீங்கவில்லை. தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்தபோதுதான், சக மாணவர்களை கடலில் சென்று காப்பாற்றியது தெரியவந்தது என்றனர்.
 சக மாணவர்களை மீட்ட பரமேஸ்வரனின் வயிற்றில் கடல் நீர் இல்லை. பிரேதப் பரிசோதனையின்போது இது தெரியவந்திருக்கிறது. கரைக்குத் திரும்ப முயற்சி செய்தும் அவரால் முடியாமல் நீரில் மூழ்கியிருக்கிறார். நல்ல நீச்சல் தெரிந்தவர்கள்தான் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள் என்று தூத்துக்குடி போலீஸôர் தெரிவித்ததாக பரமேஸ்வரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 மற்ற மாணவர்களைப் போல கடலில் விளையாடச் சென்றபோது இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவரது வீரச் செயல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. பரமேஸ்வரன் மறைந்தாலும், அவரது நினைவலைகள் திருநகர் வாசிகளின் மனதில் நிழலாடிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தமிழகத்தின் நீச்சல் மங்கை!

தமிழகத்தின் நீச்சல் மங்கை!


தில்லி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற, தமிழக நீச்சல் வீராங்கனை, இராகவி: சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறேன். எஸ்.ஐ.இ.டி., கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா, சென்னை மாநகராட்சியில் கட்டட வேலை செய்கிறார். அப்பா, இரண்டு வயதிலேயே சென்னை மாநகராட்சியின், நீச்சல் குளத்தில் நீச்சல் பழக கூட்டிச் செல்வார்.ஐந்து வயதிலேயே, நீச்சல் குளத்தில், 6 கி.மீ., தூரம், தொடர்ந்து நீந்தி, திறமையை நிரூபித்தேன். 2001ம் ஆண்டில் நடந்த, மாநில அளவிலான, 200 மீட்டர் , "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், தங்கப் பதக்கம் பெற்றேன். இதுதான், நான் பெற்ற முதல் வெற்றி பதக்கம்.தொடர்ந்து, "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' நீச்சல் பிரிவில், நிறைய வெற்றிகள் பெற்றதால், அப்பிரிவிலேயே கவனம் செலுத்த துவங்கினேன். 2006ம் ஆண்டு, டில்லியில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில், 50 மீட்டர், "பேக் ஸ்ட்ரோக்' மற்றும் "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கினேன்.கடந்த, 2008ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வாங்கினேன். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, 200 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றேன்.டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், துபாயில் நடந்த சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டேன் .கடந்த, 16 ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய நீச்சல் போட்டிகளில், பல பதக்கங்களை பெற்றிருக்கிறேன். கடந்த ஆண்டு, 200 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், 2.46 நிமிடம், 92 மைக்ரோ நொடிகளில், "ரெக்கார்டு பிரேக்' செய்து, தேசிய அளவில் புதிய சாதனை நிகழ்த்தினேன். நீச்சல் வீரர் அக்னீஷ்வரின் அப்பா ஜெயப்பிரகாஷ் தான், இதுவரை, "ஸ்பான்சர்' செய்து வருகிறார். வரும், 2016ம் ஆண்டு, பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வெல்வதே என் லட்சியம்.

சனி, 21 ஜனவரி, 2012

never imagined to escape: பிழைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை:

ப்பலில் பணியாற்றுபவர் நீச்சல் தெரியாது என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய வேதனையான ஒன்று. நீச்சல் , எதிர்பாரா நேர்ச்சியில் பிறரைக் காப்பாற்றும பயிற்சி முதலானவை அளிக்கப்பட்ட பின்னரே யாராக இருந்தாலும் கப்பல்களில் பணியாற்றச் செய்ய வேண்டும்.  இப்பொழுது பிழைத்தவர் இனியேனும் நீச்சல் கற்றுக் கொள்ளட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /





புதுச்சேரி: "கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன்' என, கடலில் மூழ்கிய இத்தாலி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய புதுச்சேரி வாலிபர் கூறினார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பிரமாண்டமான கப்பல், ஜிக்ஜியோ தீவில் தரை தட்டி மூழ்கத் துவங்கியது. இதில் பயணம் செய்த, 3,000க்கும் மேற்பட்ட பயணிகளும், 1,023 சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், இந்தியாவை சேர்ந்த, 300 பேர் இருந்தனர். இந்தக் கப்பலின் ஓட்டலில், புதுச்சேரி, முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், வேலை செய்து வந்தார். ராம்குமாரின் நிலை குறித்து தெரியாமல், அவரின் தந்தை தேவேந்திரன் மற்றும் உறவினர்கள் பரிதவித்தனர். மத்திய அமைச்சர் நாராயணசாமி, இத்தாலி நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, ராம்குமார் மீட்கப்பட்டதை உறுதி செய்தார்.

புதுச்சேரி திரும்பிய ராம்குமார், கூறியதாவது: ஜிக்ஜியோ தீவு அருகே சென்ற போது, வழக்கத்தை விட கப்பல் தள்ளாடியதால், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக, தரை தளத்தில் உள்ள என் அறைக்கு சென்றேன். அங்கு, இடுப்பளவிற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறிதுநேரத்தில், கப்பல் சாய்ந்து மூழ்கத் துவங்கியதால், பயத்தில் உறைந்து போனோம். என்னால் முடிந்த அளவிற்கு, சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றி தப்பிக்க வைத்தேன். பின், நாங்கள் படகில் ஏறி தப்பினோம். கப்பலில் வைத்திருந்த என்னுடைய சம்பளம், சான்றிதழ்கள், லேப்-டாப்கள் மூழ்கிவிட்டன. எனக்கு நீச்சல் தெரியாது. பிழைப்பேன் என்று, நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன். இவ்வாறு ராம்குமார் கூறினார்.

சென்னை: இத்தாலி சொகுசு கப்பல் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில், முதற்கட்டமாக, நேற்று முன்தினம் இரவு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை திரும்பினர். இரண்டாம் கட்டமாக, நேற்று காலை, 8.30 மணிக்கு, எமிரேட்ஸ் விமானம் மூலம், எட்டு பேர் சென்னை வந்தனர். இவர்களில், ரெபகா, சிம்ராய் ஆகிய இரு பெண்களும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்.

சென்னை விமான நிலையத்தில், விபத்தில் சிக்கியவர்கள் கூறியதாவது: கடந்த, 13ம் தேதி இரவு 9 மணிக்கு, கப்பல் ஆடத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில், கப்பல் சாயத் துவங்கியது. அனைவரும் அலறினோம். இரண்டு மணி நேரத்தில், கப்பல் முழுவதுமாக, கடலில் சாய்ந்து விட்டது. இதற்கிடையில், படகுகள் மூலம் பயணிகள், அருகில் உள்ள தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மறுநாள் மீட்புக் குழுவினர் வந்து, எங்களை மீட்டு, அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்தனர். மறுநாள், அனைவரும் ரோம் அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம், சென்னை வந்து சேர்ந்தோம். நாங்கள் வைத்திருந்த பாஸ்போர்ட், சான்றிதழ்கள், கடலில் மூழ்கி விட்டன. எங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

கப்பல் விபத்தில் தப்பிய 7 பேர் திருச்சி வருகை: கொழும்பிலிருந்து திருச்சி வந்த கிங்பிஷர் விமானம் மூலம், கப்பல் விபத்தில் சிக்கிய ஏழு பேர், நேற்று அதிகாலை 3 மணிக்கு, திருச்சி வந்தனர். இவர்கள், சொகுசு கப்பலில் கேட்டரிங் பிரிவில் பணியாற்றியவர்கள். மறு பிறவி கண்டது போல், விபத்தில் சிக்கிய கப்பலிருந்து தப்பி, நேற்று அதிகாலை, திருச்சி விமானம் நிலையம் வந்த துறையூர் ராஜா,25, பொன்னமராவதி ராஜாகுமார்,35, கொடுமுடி கார்த்திகேயன்,24, சேலம் கிருஷ்ணன்,27, அறந்தாங்கி முத்துக்குமார்,31, சிவகாசி செல்வக்குமார்,25, நெய்வேலி ராஜ்குமார்,25, ஆகிய ஏழு பேரையும், அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.

100ம் ஆண்டில் மற்றொரு டைட்டானிக் சம்பவம்: கடந்த, 1912ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெள்ளிக் கிழமை தான், "டைட்டானிக்' என்ற சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி, அதில் பயணம் செய்த பெரும்பாலானோர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த, 100வது ஆண்டுக்கு, இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், சரியாக, 13ம் தேதி வெள்ளிக் கிழமையே கோஸ்டோ கான்கார்டியா சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.