துரோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துரோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூன், 2013

இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி மத்திய அரசின் இரண்டகம் : வைகோ

இலங்கை இராணுவத்துக்கு ப் பயிற்சி மத்திய அரசின் பச்சை த் துரோகம் : வைகோ

தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.
இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா?
தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.
அப்படியானால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா? தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் இராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.
இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் இலட்சக் கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.
உடனடியாக சிங்கள இராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்
சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்
சென்னை, சூன். 10-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலையால், ரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது.

தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் ராணுவத்தை ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச் செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.

2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் செய்ய முயன்றது. இதனால் கொடிய விபரீதம் தமிழர்களுக்கு நேரும் என கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல், ரகசியமாகவே அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது.

இலங்கையின் முப்படைகளுக்கும் தேவையான சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைத் தந்தது. பலாலி விமான தளத்தை இந்திய விமானப்படை தன் செலவில் பழுது பார்த்து புதுப்பித்தது. சிங்களரின் வான்வெளித் தாக்குதலுக்கு ரடார்களைக் கொடுத்தது.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளை இலங்கைக்கு ரகசியமாக அனுப்பி வைத்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே இயக்கியது. இலங்கை கடற்படையோடு இந்திய கடற்படை 2007 இல் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டது.

இந்திய கடற்படையினுடைய உதவியால்தான் விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தோம் என சிங்கள கடற்படை துணைத் தளபதியே பகிரங்கமாகச் சொன்னான். களத்தில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்கள், குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் முடிந்த 10.06.2013 இறுதிக்கட்ட யுத்தத்தின்போது துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கையே அம்பலப்படுத்தியது.

சிங்கள ராணுவத்தினர் மருத்துவமனைகள் மீதும், சின்னஞ்சிறு பிள்ளைகள் நடுங்கி ஒடுங்கிய பதுங்கு குழிகள் மீதும் குண்டு வீசிக்கொன்ற செயல் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நடைபெற்ற கொடிய மனிதப் பேரழிவுகளில் ஒன்றாகும்.

சிங்கள ராணுவம் என்பது காட்டுமிராண்டித்தனமாக தமிழர்களை மனித வேட்டை ஆடிய கொடியோர் கூட்டமாகும். “இந்திய அரசும் இந்திய ராணுவமும்தான் நாங்கள் நடத்திய போரை இயக்கியது” என்று சிங்கள அமைச்சர்களும், அதிபர் கொடியவன் ராஜபக்சேயும் மமதையோடு கூறினர்.

இந்திய ராணுத் தளபதியை கொழும்புக்கு அழைத்துச் சென்று விருதும் வழங்கினர். சிங்களர் கொடுஞ்செயலை எதிர்த்து, மைய அரசைக் கண்டித்து முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தனர்.

இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து விருந்து வைத்து காங்கிரஸ் அரசு வரவேற்றது. சிங்கள விமானப் படையினருக்கும், ராணுவத்தினருக்கும் தமிழ்நாட்டில் மத்திய அரசு பயிற்சி கொடுத்தது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பை மத்திய அரசு துச்சமாகக் கருதியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் நாட்டின் முதலமைச்சர் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, பிரதமருக்கு மூன்று கடிதங்களும் எழுதினார்.

வெலிங்டனில் இருந்து சிங்கள ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு விட்டதாக மத்திய அரசு ஒரு பொய்யான தகவலை முதலில் கொடுத்தது. உண்மை வெளிவந்து எதிர்ப்பு வலுத்த பின்னரே, வெலிங்டனில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், இந்தியாவின் வேறுறொரு பகுதியில் பயிற்சி பெற்றனர்.

ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. இத்தகைய சூழலில் இலங்கை ராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தசநாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27-ந் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மக்களும் தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள ராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு ராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா? தமிழ்நாட்டை தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது.

இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27-ந்தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை ராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.

அப்படியானால், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய ராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக் கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?

தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா? ஈழத்தில் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இலங்கையில் 2009-க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் ராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டு இருக்கிறது.

இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் லட்சக்கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.

உடனடியாக சிங்கள ராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

திங்கள், 25 மார்ச், 2013

மத்திய அரசு தமிழர்களுக்குவஞ்சகம் இழைத்துவிட்டது: டி. இராசா

மத்திய அரசு தமிழர்களுக்குத்

துரோகம் இழைத்துவிட்டது: டி.

இராசா

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: டி.ராஜா
வேலூர், மார்ச் 24: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.கூறினார்.
வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 25 நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இலங்கைக்கு எதிராக இந்திய அரசு தீர்மானத்தில் திருத்தம் செய்யாமல், வாய்மொழியாக மட்டுமே சில கருத்துகளை முன்வைத்தது.
எழுத்துப்பூர்வமாக திருத்தம் கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் கோரிக்கை வைத்தபோதும், நாடாளுமன்றத்தில் இதனை எழுப்பியபோதும், மத்திய அரசுக்கு அதை கண்டுகொள்ளாமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
தமிழகத்தில் எழுச்சிமிக்க போராட்டத்தை மாணவர்கள் நடத்தி, சர்வதேச அளவில் இலங்கை பிரச்னைக்கு வலிமை சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.
இப் போராட்டத்தை ஒருமுகப்படுத்த மாணவர்கள் அடுத்தக்கட்ட யோசனை செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீக்குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போராட்டத்துக்கு தீர்வாக அமையாது என்பதையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக போராட வேண்டும். இலங்கை மீது இந்தியாவே தீர்மானம் முன்மொழிந்திருந்தால் அந்தத் தீர்மானம் மிக வலிமையாக இருந்திருக்கும் என்றார் ராஜா.

சனி, 23 மார்ச், 2013

ஈழம் - மத்திய அரசு வஞ்சகம் செய்து விட்டது: தமிழக நா.உ.(எம்.பி.)க்கள் ஆவேசம்






இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: தமிழக நா.உ.(எம்.பி.)க்கள் ஆவேசம்

"இலங்கை விவகாரத்தில், மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது' என, குற்றம்சாட்டி, லோக்சபாவில், தமிழக எம்.பி.,க்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டதால், சபை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோஷம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் ஆரம்பமானது. அடுத்த கணமே, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும், தென்காசி லோக்சபா தொகுதி, இந்திய கம்யூ., - எம்.பி., லிங்கமும் எழுந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சபையில், பலத்த அமளி காணப்பட்டது. திடீரென, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அதே போல், தி.மு.க.,வைச் சேர்ந்த, பெரும்பாலான, எம்.பி.க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டாலும், மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த, பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர், சபாநாயகர் பக்கம் வராமல், தங்கள் இருக்கை அருகே, நின்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சரான அழகிரி, சபையில் இல்லை.
ஸ்தம்பிப்பு: "தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது' என, தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டாக குரல் எழுப்பியதால், சபையே ஸ்தம்பித்தது. ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, வலுவான தீர்மானம் வர விடாமல், மத்திய அரசு சதி செய்து விட்டது என்றும் கோஷமிட்டனர். பத்து நிமிடங்களுக்கு மேலாக, இந்த அமளி நீடித்ததால், கேள்வி நேரம் ரத்தானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரையிடம் வந்த, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத், ""பங்குச் சந்தை குறித்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். கூச்சல், குழப்பமாக இருந்தாலும், பரவாயில்லை. அமளிக்கு மத்தியில், மசோதாவை நிறைவேற்ற சம்மதம் தெரிவியுங்கள்,'' என்றார். அதற்கு, தம்பித்துரையும், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர், டி.ஆர்.பாலுவும் மறுப்புத் தெரிவித்து விட்டனர். அதேபோல், அரசின் இந்த வேண்டுகோளுக்கு, இந்திய கம்யூ., - எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தாவும், எதிர்ப்பு தெரிவித்தார். கமல்நாத் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், யாரும் சம்மதிக்கவில்லை.
ஒத்தி வைப்பு: தமிழக எம்.பி.,க்களால், சபையில் பலத்த அமளி நிலவவே, பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், செய்தவதறியாது திகைப்புடன் அமர்ந்திருந்தனர். இதனால், வேறு வழியின்றி சபையை, அடுத்த மாதம், 22ம் தேதிக்கு, ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
-  தினமலர் தில்லிச் செய்தியாளர் -




ஞாயிறு, 17 மார்ச், 2013

செனீவாவில் இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகம்: வைகோ

செனீவாவில் இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகம்: வைகோ

ஜெனீவாவில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் சாடியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் இலட்சோப இலட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது.
இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது. தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதானே இந்திய அரசு. தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும் வரவேற்கத்தக்க விதத்தில் சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், இராஜபக்சே அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித உரிமை மீறல் குறித்த புகார்களை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று நம்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூகமான வெற்றிகாண வேண்டுமென்று வாழ்த்துவதாகவும், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு அறிக்கை தந்து, கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்குத் தூக்குகிற ஈனச் செயலைச் செய்துள்ளது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு, 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த துரோகங்களை ஆணித்தரமான ஆதாரங்களைக் காரணமாகச் சொல்லி வந்துள்ளேன்.
சிங்கள அரசு இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பைச் செய்து வருகிறது. கேரள மாநில கடற்கரையை ஒட்டிய கடலில், இந்திய அதிகார எல்லையை அடுத்துள்ள கடல் பகுதியில், இத்தாலிய வர்த்தகக் கப்பலில் இருந்த கடற்படையினர், கடல் கொள்ளைக்காரர்கள் என்று எண்ணியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அத்தாக்குதலில் இரண்டு மீனவர்கள் உயிர் இழந்தனர். இதில் கைது செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர், இந்திய நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தின்படி, இத்தாலியிலிருந்து திருப்பி அனுப்பப்படவில்லை என்பதற்காக, இத்தாலியோடு இராஜ்ய உறவுகளை முறிப்போம் என்று இந்திய அரசு எச்சரித்தது. இத்தாலியத் தூதர் டேனியல் மன்சினி இந்தியாவிலிருந்து வெளியேறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், அவர் வெளியேறி விடாமல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக்காவலை இந்திய அரசு பலப்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழக மீனவர்கள் 578 பேரை, இதுவரை பல நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து சுட்டுப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை இயக்கும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு எந்த எச்சரிக்கையும் என்றும் செய்தது கிடையாது. அதற்கு மாறாக, அக்கொலைகார அரசை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில் பூதாகாரமாக எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குழி பறிக்கும் வேலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது. வினையை விதைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான விலையை காங்கிரÞ கட்சியும், அதன் தலைமையிலான மத்திய அரசும் கொடுக்க நேரிடும்.
மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன்.
- என்று சாடியுள்ளார்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையானது சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்கும் ஈனச்செயல்: வைகோ கடும் கண்டனம்
இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையானது சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்கும் ஈனச்செயல்: வைகோ கடும் கண்டனம்
சென்னை, மார்ச் 17-
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சிங்களக் கொலைபாதக அரசு ஈழத்தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் லட்சோப லட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15-ந்தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது.
 
இந்த அறிக்கை சிங்கள ராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது. தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதானே இந்திய அரசு.
 
தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும் வரவேற்கத்தக்க விதத்தில் சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், ராஜபக்சே அரசு அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித உரிமை மீறல் குறித்த புகார்களை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று நம்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூகமான வெற்றி காண வேண்டுமென்று வாழ்த்துவதாகவும், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு அறிக்கை தந்து, கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்குத் தூக்குகிற ஈனச் செயலைச் செய்துள்ளது.
 
லட்சக்கணக்கான ஈழத்தமி ழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு, 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த துரோகங்களை ஆணித்தர மான ஆதாரங்களைக் காரணமாகச் சொல்லி வந்துள்ளேன்.
 
சிங்கள அரசு இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பைச் செய்து வருகிறது. கேரள மாநில கடற்கரையை ஒட்டிய கடலில், இந்திய அதிகார எல்லையை அடுத்துள்ள கடல் பகுதியில், இத்தாலிய வர்த்தகக் கப்பலில் இருந்த கடற்படையினர், கடல் கொள்ளைக்காரர்கள் என்று எண்ணியதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
 
அத்தாக்குதலில் இரண்டு மீனவர்கள் உயிர் இழந்தனர். இதில் கைது செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர், இந்திய நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தின்படி, இத்தாலியிலிருந்து திருப்பி அனுப்பப்படவில்லை என்பதற்காக, இத்தாலியோடு ராஜ்ய உறவுகளை முறிப்போம் என்று இந்திய அரசு எச்சரித்தது.
 
இத்தாலியத் தூதர் டேனியல் மன்சினி இந்தியாவிலிருந்து வெளியேறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், அவர் வெளியேறி விடா மல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக் காவலை இந்திய அரசு பலப்படுத்தியுள்ளது.
 
ஆனால், தமிழக மீனவர்கள் 578 பேரை, இதுவரை பல நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து சுட்டுப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை இயக்கும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு எந்த எச்சரிக்கையும் என்றும் செய்தது கிடையாது. அதற்கு மாறாக, அக்கொலைகார அரசை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
 
தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? தமிழக மீன வர்களை இந்தியக் குடிமக் களாக இந்திய அரசு ஏற்க வில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில் பூதா காரமாக எழுந்துள்ளது.
 
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண் மைக்கும் குழி பறிக்கும் வேலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது. வினையை விதைத்துக் கொண்டே இருக்கிறது.
 
இதற்கான விலையை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான மத்திய அரசும் கொடுக்க நேரிடும். மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப் போகிறது என்று எச்சரிக்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.