தமிழ் நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2013

தமிழ் நூல்களைக் கேட்பு நூலாக்கும் அமெரிக்கத் தமிழர்

தமிழ் நூல்களை க் கேட்பு நூலாக்கும்
 அமெரிக்க த் தமிழர்

கல்கி, உ.வே.சுவாமிநாதையர் ஆகியோரின் நூல்களை, முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கேட்கும் வண்ணம், அமெரிக்க வாழ் தமிழர், ஸ்ரீகாந்த், ஆடியோ புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த, ஸ்ரீகாந்த், 20 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறினார். அங்கு, மென்பொருள் துறையில், திட்ட மேலாளராக வேலை பார்த்தபடி, தமிழ் மன்றத்தை நிறுவிய ஸ்ரீகாந்த், அதன் மூலம், தமிழ் தொடர்பான, பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கான இசை, கவிதை, பேச்சு, நாடகங்கள் போன்றவற்றை அரங்கேற்றி வருகிறார்.தற்போது, சான்பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் மன்றத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உள்ள, ஸ்டான் போர்டு பல்கலை கழக வானொலியில், மூன்று மணி நேரம், தமிழ் சேவைக்காக ஒதுக்கப்படுகிறது. அதில், பாடல், நேர்காணல், நாடகம் என, பலவற்றை ஒலிபரப்பி வருகிறார். அவருடைய பணிகளில் முக்கியமானது, நாவல்களை, ஆடியோ புத்தகமாக தயாரிப்பது.கல்கியின், "பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு' ஆகிய நாவல்களை, ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், உ.வே.சா.,வின், "என் சரித்திரம்' நூலை, ஆடியோ புத்தகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்."ஆடியோ புத்தகம் எனில், செய்தி வாசிப்பது போல் இருக்கும்' என்ற, பொதுவான விமர்சனங்களை தாண்டி, தனித்துவத்துடன் உருவாக்கி இருக்கிறார்.நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு குரலையும் பயன்படுத்தி உள்ளார். கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, தானே பேசி அசத்தியுள்ளார். இது, 75 மணி நேரமாக ஓடும் ஆடியோ புத்தகமாக உள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீகாந்த் கூறியதாவது: துவக்கத்தில் துபாயில், மென்பொருள் துறையில் வேலை பார்த்த நான், அடுத்த, மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா சென்றேன். அங்கு, ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; குறிப்பாக, மொழி பிரச்னை அதிகமாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், ஆங்கிலத்திலேயே எழுதி, பேசுவதால், தமிழ் மொழி மறந்தே போகும் அபாயம் இருந்தது.எனவே, இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் இருக்க, என்னால் இயன்ற வகையில், பணியாற்றி வருகிறேன்.என் வேலை, மிகவும் பரபரப்பானது; மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடியது. இதில், போதுமான ஓய்வு கிடைப்பது, சாத்தியமில்லாதது. இருந்தாலும், எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில், தமிழ் சேவை செய்வது, சுகமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

இவருடைய ஆடியோவை கேட்ட, மாற்றுத் திறனாளிகளும், முதியோரும், இவருடைய சேவையை பாராட்டி, நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும், பாராட்டி வருகின்றனர். அவருடைய இணைய முகவரி: www.tamilaudiobooks.com

-நமது  செயதியாளர்- தினமலர்

சனி, 13 ஏப்ரல், 2013

28 நூலாசிரியர்களுக்குப் பரிசு: செயலலிதா உத்தரவு

சிறந்த தமிழ் நூல் எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு உரூ.30 ஆயிரம் வீதம் பரிசு: செயலலிதா உத்தரவு
 
சிறந்த தமிழ் நூல் எழுதிய 28 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பரிசு: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஏப். 13-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி க் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் போட்டிக்கு வரப்பெறும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து அந்நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் பதிப்பித்த பதிப்பகத்தார்களை ஊக்குவிக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

அதன்படி 2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நூலாசிரியர் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000-மும், பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு ரூ.10,000-மும் பரிசாக வழங்கப்படும். மேலும் 1330 குறட் பாக்களை முற்றோதல் செய்யும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திருக்குறள் ஒப்புவித்த 36 மாணவ-மாணவியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மேலும் மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ-மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.12,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-

மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன்
புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன்
புதினம் - அரு.மருததுரை
சிறுகதை - செல்வி பர்வின்பானு
நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன்
திறனாய்வு- பெ.அ. இளஞ்செழியன்
மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் ப.வேல்முருகன்

பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு
நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன்
அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ்
பயண இலக்கியம் - ப.முத்துக்குமார சுவாமி
வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை

நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன்
கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன்
பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் - முனைவர் கி.அய்யப்பன்

சட்டவியல், அரசியல் - முனைவர் ஆ.ஜெகதீசன்
மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன்

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1. டாக்டர் இல.மகாதேவன்,
2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ்.
சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன்
கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா

சுற்றுப்புறவியல் - வேணு சீனிவாசன்
நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன்
வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம்
இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு
பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி
தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.