உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுசென்னை

வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 அன்று சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. உ.த.ஆ.நி. தலைவராக முனைவர் பொன்னவைக்கோவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பொறி.அரசரும் மாநாட்டுச் செயற்தலைவராக முனைவர் சான்சாமுவேலும் உள்ளனர். அறிஞர்கள் பலரும் பணிக்குழுப் பொறுப்புகளில் உள்ளனர். இம்மாநாட்டில் நூல் வெளியீடும், விற்பனை அரங்கும் உள்ளமையை முன்னரே தெரிவித்திருந்தோம். அது குறித்த நினைவூட்டே இது.

1.நூல் வெளியீட்டு நிகழ்ச்சி:

பலர் இதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

 மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளும் இவ்வெளியீட்டு நிகழ்வில் தங்கள் நூல்களும் இடம் பெற விரும்புபவர்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள், நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டாளர் பெயர், நூல் விலை, தொடர்பு முகவரி, பேசி எண், மின்வரி முதலிய விவரங்களைத் தமிழில் வரும் வைகாசி 32 / சூன் 15 ஆம் நாளுக்குள் பின்வரும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.

thirunool50@gmail.com

பின்னர், பின்வரும் முகவரிக்கு ஐந்து ஐந்து படிகள் அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் வெளியீட்டிற்காக

மே/பா. ஆசியவியல் நிறுவனம்,

செம்மண்சேரி, சோழிங்க நல்லூர்  சென்னை 600 119

பேசி: 044-24501851, 24500831

2. விற்பனை அரங்கு

விற்பனை அரங்கைப் பயன்படுத்த விரும்புவதாகப் பலர் தெரிவித்திருப்பினும் யாரும் எழுத்து மூலமான வேண்டுகோளை அனுப்பவில்லை. எனவே, பதிப்பகம் அல்லது வெளியீட்டகம்  பெயரில் வேண்டுகோள் மடலைத் தமிழில்  உடன் பின்வரும் மின்வரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

thirunool50@gmail.com

விற்பனை அரங்கில் தத்தம் பதாகைகளைத் தமிழில் இடம் பெறுமாறு வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறோம்.

உலகத்தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் கூடும் மாநாட்டின் பொழுது தத்தம் நூல்களை விற்கவும் அறிமுகப்படுத்தவும் மாநாட்டு நூல் விற்பனை அரங்கத்தைக் கட்டணமின்றிப் பயன்படுத்திச் சிறப்புறுக.

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஒருங்கிணைப்பாளர்

நூல் வெளியீடு, விற்பனை அரங்கம்