கணித்தமிழார்வலர்
மாஃபா பாண்டியராசன் பள்ளிக்கல்வித்துறை யமைச்சரானார்
ஆவடிச் சட்டமன்றத்தொகுதி அஇஅதிமுக உறுப்பினரும் மாஃபாய் நிறுவனத் தலைவருமான கணித்தமிழார்வலர்
மாஃபா பாண்டியராசன் மாண்புமிகு முதல்வர் பரிந்துரையின்படிப் பள்ளிக்கல்வி
யமைச்சராக அமர்த்தப்படுகிறார்.
மாண்புமிகு அமைச்சர் பெருமானுக்குத் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு-புதுவை
தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அகரமுதல மின்னிதழ் சார்பில்
பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்வழிக்கல்விக்கும்
தமிழ்மொழிக் கல்விக்கும் ஏற்பட்டுள்ள
இடையூறுகளைக் களைந்து
தமிழ்வழிப்பள்ளிகளுக்கு நடத்தப்படும் மூடுவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து
தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஊக்கப்படுத்திச் சிறப்பாகச்செயல்பட வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக