ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது – பேரா.சி.இலக்குவனார்
ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம்
தமிழைப் புறக்கணிக்கக் கூடாது
ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது தமது
முன்னேற்றம் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை.
ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்து விடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து தமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா?
தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம்
தமிழுக்கு அடுத்துக் கற்க வேண்டிய மொழியே அன்றித் தமிழை விடுத்துக்
கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை
இரண்டாம் மொழியாகவும் கற்றல் வேண்டும்.
-செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக