முத்துமீனாள்-பாராட்டு : nighazhvu_muuthumeenal_paaraattu

ஓய்வறியா கல்விப் பணியாற்றும்

ஆசிரியை முத்து மீனாள் 


 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியாக் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 விழாவிற்கு வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2015 ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல் ஒப்படைப்பு உணர்வுடன் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர் முத்து மீனாள். குடும்பச் சூழ்நிலைகள் அனைத்திலும் கருத்து செலுத்தியதுடன் பள்ளிக்கும் விடுப்பு எடுக்காமல் வந்துள்ளதைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.
   தேவகோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி விழாவிற்குத் தலைமை தாங்கி விருதினை  வழங்கிப் பேசுகையில், இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தின் பல்வேறு வேலைகளுக்கு இடையில் ஒப்படைப்பு உணர்வுடன் விடுமுறை எடுக்காகமல் ஆண்டு முழுவதும்  ஓய்வறியாக் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு இந்த விருது வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும், ஆசிரியைக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கவும், தொடர்ந்து அவரது கல்விப் பணி சிறக்கவும், குடும்பத்தினர் அனைவரும் நன்றாக வாழவும் வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.
  தேவகோட்டை சிரீ சேவுகன் அண்ணாமலை கலை – அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் வாழ்த்திப் பேசுகையில், அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் ஆசிரியை எவ்வித விடுப்பும் எடுக்காமல் ஒரு குறிக்கோளுடன் குடும்பத்தைக் கவனித்ததுடன் அரசு விடுமுறை நாட்களிலும் திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதும், விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் பயற்சி கொடுத்து அழைத்துச் சென்றதும் பாராட்டப்பட வேண்டிய செயல் ஆகும் என்று பேசினார்.
விருது பெற்ற ஆசிரியை முத்து மீனாள் ஏற்புரை வழங்கினார்.
ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
ஆசிரியை முத்துலெட்சுமி விழாவினை தொகுத்து வழங்கினார்.
-இலெ .சொக்கலிங்கம்
09786113160