thalaippu_inidheilakkiyam02

1. எங்கும் கலந்துள்ள இறைவன்

கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என்
எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில்
கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில்
கலந்தான் கருணை கலந்து.

எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது.
இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான்.
எல்லா இடங்களிலும் கலந்து இணைந்துள்ள இறைவனை வள்ளலார் இவ்வாறு வாழ்த்துகிறார்.
எனவே, நமக்கு அருள் பார்வையும் நற்செயலும் உயர் எண்ணமும் நல்லிசையும் தேவை என்பதை  வள்ளலார் உணர்த்துகின்றார்.
திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டு உள்ளது.
ilakkuvanar_thiruvalluvan_kuralkuuttam01– இலக்குவனார் திருவள்ளுவன்