உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்
தென்னாப்பிரிக்கக் கிளை ஆற்றிவரும்
அளப்பரிய கல்விப் பணி
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்
தென்னாபிப்ரிக்கக் கிளை கடந்த வாரம் வரலாற்று முதன்மை மிக்க ஒரு கல்விப்
பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வைத் தென்னாப்பிரிக்காவின்
தர்பன் நகரில் நடத்தியது.
தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும்
அஞ்சும் நிலை நிலவும் தென்னாப்பிரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ்
பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ்
ஆசிரியர்களுக்கான பட்டயச் சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழாவில்
உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை
சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு
எசு.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு பாரிவேந்தர், பதிவாளர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு எசுஆர்எம் பல்கலைக் கழகத்தின்
தமிழ்ப் பிரிவின் பேராசிரியர் திரு இல.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில்,
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளரும் சிறப்புத்
தலைவருமான திரு வி. எசு. துரைராசா, இயக்கத்தின் செயலாளர் செருமனி வாழ் திரு
துரை கணேசலிங்கம், இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர்.என்.
(உ)லோகேந்திரலிங்கம் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாகத்
தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு மேற்படி பயிற்சி நெறி
தொடங்கப்பட்டது.
மேற்படி பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னாப்பிரிக்கக் கிளையின் தலைவர் திரு மிக்கி(ச் செட்டி) செய்திருந்தார்.
– தென்னாப்பிரிக்காவின் தர்பன் நகரிலிருந்து ஆர். ஏன். (உ)லோகேந்திரலிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக