திங்கள், 13 ஏப்ரல், 2015

தமிழக அரசின் விருதாளர்களுக்குப் பாராட்டுகள்




முதலைமைச்சர் கணிணித்தமிழ் விருது பெறும் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கும் பிற விருதாளர்களுக்கும் பாராட்டுகள்!

சித்திரைத் தொடக்கத்தை முன்னிட்டுத் தமிழறிஞர்களுக்கும் தமிழமைப்புகளுக்கும்  கணித்தமிழறிஞர்களுக்கும் தமிழக அரசு விருதுகள் வழங்குகின்றது.
இதன்படி 2013 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு முனைவர் ந. தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் உருவா்ககப்பட்ட கணிணிமொழியியல் துறைத் தலைவராக இருந்து கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதுடன் மாணாக்கர்களையும் இத்துறையில் ஆற்றுப்படுத்தியவர். தமிழ்ச்சொல் 2000,  மென்தமிழ் என்பன இவரால் உருவாக்கப்பட்ட  தமிழ் சொற்செயலிகள்(word processors)  ஆகும். விருதாளர் முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கும் வாழ்த்தும் பாராட்டும்!
2014ஆம் ஆண்டின் முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு து. குமரேசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்ப்புத்தகத் தகவல் திரட்டான விருபா இவரது இணையத் தளமாகும். கணிணித்தமிழ் விருதுபெறும் விருபா குமரேசனுக்கும் பாராட்டும் வாழ்த்தும்!
தமிழைக் கணிணி அறிவியல் மூலம் பரப்புவதற்குப்பாடுபடும் ஆன்றோர்களுக்கு முதலமைச்சர் கணித்தமிழ் விருது வழங்கியுள்ள தமிழக அரசைப் பாராட்டுகிறோம்.

.தமிழ்ப்பணிகளும் நலப்பணிகளும் ஆற்றிவரும் நவி மும்பைத் தமிழ்ச் சங்கம், முன்னரே இந்தியாவிலுள்ள சிறந்த தமிழ்ச்சங்கம் என்ற விருதை மாலத்தீவில் நடைபெற்ற உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டின் பொழுது வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த்தாய் விருது இவ்வமைப்பிற்கு வழங்கப்பட உள்ளது. 

2015ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப் பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்த்தாய் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாகஉரூபாய் 5 இலட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்

நவி மும்பைத் தமிழ்ச்ங்கத்திற்கும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்திற்கும்  பாராட்டையும்  தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிச் சிறக்க வாழ்த்தையும் தெரிவிக்கிறோம்.

சிறந்த மொழியியல் அறிஞரான முனைவர் செ.வை.சண்முகம் 2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற உள்ளார். 2014 ஆம் ஆண்டிற்கான கம்பர்விருதை வழங்கித் தமிழக அரசும் இவரைச் சிறப்பிக்கிறது.

 .
திருக்குறள் சார்ந்த படைப்புகளில் கருத்து செலுத்தி வரும் முனைவர் அ.இலலிதா சுந்தரம் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான கபிலர் விருது வழங்கப்பட உள்ளது.

மேலம் 2014 ஆம் ஆண்டிற்கான
உ.வே.சா. விருது - மருது அழகு  இராசாவிற்கும்
சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையனுக்கும்
அறிஞர் போப் விருது -   செ. நாராயணசாமிக்கும்
உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு. முகம்மதலிக்கும்

.2015ஆம் ஆண்டுக்கான
கபிலர் விருது - கவிஞர் பிறைசூடனுக்கும்
உ.வே.சா. விருது - திரு. குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கும்
கம்பர் விருது - கோ. செல்வத்திற்கும்
சொல்லின் செல்வர் விருது - முனைவர் சோ. சத்தியசீலனுக்கும்
அறிஞர் .போப் விருது - மதுரை இளங்கவினுக்கும் (எம். ஆரோக்கியசாமி)
உமறுப்புலவர் விருது - மு. சாய்பு மரைக்காயரருக்கும்
இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகனுக்கும்

வழங்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக  உரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் பொன்னாடையும் வழங்கப்படும்
.
மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.

 விருதாளர் அனைவருக்கும் வாழ்த்துகளையும்
 பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம்.

அகரமுதல - மின்னிதழ்
தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக