அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த
மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்!
தேனி மாவட்டத்தில்
அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித
நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக
ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம்
அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது
பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற
இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும்
விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும்
தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது.
இச்செடியின் வேர், இலை, தண்டு, பூ போன்ற
அனைத்துப் பாகங்களும் தீங்கு விளைவிப்பவை ஆகும். மேலும் மேய்ச்சலுக்கு
செல்லும் கால்நடைகள் அயற்களை(பார்த்தீனிய)ச் செடியினை உட்கொள்வதாலும்,
கால்நடைகளின் உடலில் மோதுவதாலும் தோல்நோய், தோலின்நிறம் மாறுதல், அரிப்பு
ஏற்படுதல் மற்றும் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அயற்களை(பார்த்தீனிய) இலைகளை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, கல்லீரல்
மற்றும் கணையம் செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதே போல மனிதர்களுக்குத்
தோல் அரிப்பினை ஏற்படுத்துவதுடன் இதன் மகரந்தம் காற்றின் மூலம் பரவி, அதை
மூக்கால் நுகர நேரிடும் போது ஈளை(ஆத்துமா), காய்ச்சல் மற்றும் நுரையீரல்
தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.
எனவே மாவட்ட நிருவாகம் போர்க்கால
அடிப்படையில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளை அழிக்க நடவடிக்கை
எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக