(ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி)
thatheperiyakkam
தீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்!
 kachatheevu
1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது.
அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் எதிராவணம் அளித்துள்ளது.
இந்த அணுகுமுறை இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே காட்டுகிறது.
  சட்டத்திற்கு முரணாக 1974-இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீக்கிக் கச்சத்தீவை மீட்டுத், தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசை, தமிழ்த் தேசியப் பேரியக்கம்கேட்டுக் கொள்கிறது.
  தமிழகத்திற்கும், தமிழீழத்திற்கும் இடையே உள்ள இந்தக் கடல் பகுதியைமரபுவழிப்பட்ட இருநாட்டுத் தமிழர்களும் மீன் பிடித்துக் கொள்ளும்பொதுப்பகுதியாக அறிவிக்கும் வகையில், இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம்போட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் – 6: இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டுப்பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்!
  ஈழத்தமிழர்களை அழித்த இலங்கை அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டுப்புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்று செனீவாவில் ஐ.நா. மனிதஉரிமைகள் அவையில், 2014 மார்ச்சு 27 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதன் கீழே அடுத்த கூறாக இந்தப்பன்னாட்டுக் குழு, இலங்கை அரசின்இசைவு பெற்றுத்தான் இலங்கைக்குள் சென்று விசாரிக்க வேண்டும் என்றநிபந்தனையையும் போட்டது. இப்படியொரு நிபந்தனை இருப்பதால், இது ‘பல்’ இல்லாதத் தீர்மானம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அன்று த.தே.பொ.க.), அப்பொழுதே கூறியது.
  மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து ஆதரவு திரட்டிய வட அமெரிக்க வல்லரசு, பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழையமறுக்கும்இராசபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து, அந்தக்குழு இலங்கைக்குள் சென்றுவிசாரணை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மனித உரிமைகள் ஆணையர்நவநீதம்(பிள்ளை), பன்னாட்டு விசாரணைக்குழு விசாரணை தொடங்குவதற்குஇலங்கைக்குச் செல்லப் போவதில்லை, அதற்கான புகவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிக்கவும்இல்லை, அதே போல் இந்தியாவிடமும் புகவுச்சீட்டுகேட்கவில்லை என்று கூறுகிறார்.நவி(ப்பிள்ளை)யின் இக்கூற்று, பொறுப்பற்றது.
  பன்னாட்டு புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் நுழைய மறுக்கும் இலங்கைஅரசுக்கு எதிராக, பொருளாதார அழுத்தங்களைக் கொடுக்க அமெரிக்க அரசும், ஐ.நா.அவையும் முன் வர வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.
 rasapakshe+su,sa.+narenthirar
  நரேந்திரமோடி அரசு, தமிழினப் படுகொலைக் குற்றவாளியாக உள்ள சிங்கள இனவெறி அரசுடன், காங்கிரசைப் போலவே மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வளர்க்க விரும்புகிறது.கொழும்பில் சிங்கள அரசு நடத்தவுள்ள படைத்துறைக் கருத்தரங்கிற்கு, இந்தியப்படைத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளை மோடி அரசு அனுப்புகிறது. ஏற்கெனவே, வல்லரசுகளின் பன்னாட்டுத் தரகர் சுப்பிரமணிய சாமியைத் தமது அந்தரங்கத் தூதராக இராசபக்சேயைச் சந்திக்க நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். இந்திய அரசின் இவ்வாறான தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளையும், சிங்கள இனவெறி ஆதரவுச்செயல்பாடுகளையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்திற்கு எதிரான தனது உள்நாட்டு – வெளிநாட்டுக் கொள்கைகளைக் கைவிடுமாறும் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.