திங்கள், 1 ஜூலை, 2013

1.5 இலட்சத்தில் திண்காரை வீடு!

1.5 இலட்சத்தில்  திண்காரை வீடு!
500 சதுர அடியில், 1.5 லட்சம் ரூபாயில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத, வீடு கட்டும் தொழில் நுட்பத்தை கண்டறிந்த, தேவதாசு மேனன்: சென்னை ஐ.ஐ.டி.,யில், பேராசிரியராக பணியாற்றுகிறேன். குறைந்த செலவில், கான்கிரீட் வீடுகள் கட்டுவது பற்றியும், அத்தகைய வீடு, நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும், சென்னை ஐ.ஐ.டி., மேற்கொண்ட ஆய்வின் பயனாக, குறைந்த செலவில், "ஜிப்சம்' பலகைகளால் ஆன, வீடுகளை கட்டினோம்.இதற்கு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, 1.32 கோடி ரூபாய் தந்தது. உரத் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட, "கிளாஸ் பைபர் ரீஇன்போர்டு ஜிப்சம்' பலகைகள் மூலம், இம்மாதிரியான வீடுகளை கட்டலாம். இப்பலகைகள், கண்ணாடி இழைகளால் வலுவூட்டப்பட்ட, கான்கிரீட்களால் ஆனது. குறைந்த தடிப்புடன், அதிக வலுவாக இருப்பதால், இதை மிக எளிதாக பயன்படுத்தலாம்.சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளின் தேவை, இதில் மிகவும் குறைவு. நிலநடுக்கத்தால் வீடுகள் பாதிக்கப்படாத வகையில், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் விதத்தில் வடிவமைத்தோம். ஜிப்சம் பலகைகள், கேரள மாநிலத்தின் கொச்சியில் கிடைக்கின்றன.பேஸ்மென்ட் தோண்டி, சிமென்ட் ஆலைக் கழிவுகளில் உருவாக்கப்பட்ட கல்லில், சுவர்களை எழுப்பினோம். ரூம்களின் வடிவமைப்பு மற்றும் வீட்டின் உட்புற ஜன்னல், கதவுகள் பொருத்த, தேவையான ஓட்டைகளை, ஜிப்சம் பலகையிலேயே வெட்டி, பொருத்தினோம்.இத்தொழில் நுட்பத்தால், 8 முதல் 10 மாடிகள் கொண்ட, அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டலாம். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்காத, 1,981 சதுர அடியில், இரண்டு அடுக்குமாடி வீடுகளை, ஒரே மாதத்தில் கட்டினோம்.269 சதுர அடியில், இரண்டு மாதிரி வீடுகளும், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு என, 497 சதுர அடியில் இரண்டு மாதிரி வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக