திங்கள், 17 ஜூன், 2013

ஒற்றைக் காலுடன் உயரமான சிகரத்தைத் தொட்ட வீராங்கனை!

ஒற்றை க் காலுடன் உயரமான சிகரத்தை த் தொட்ட வீராங்கனை!
 
கடந்த, 2011 ஆம் ஆண்டு, ஏப்பிரல், 12 ஆம் நாள், உத்தர ப் பிரதேச த்தலைநகர் இலக்னோவிலிருந்து, தில்லி செல்லும், "பத்மாவதி எக்ஸ்பிரஸ்' ரயிலில், பயணம் செய்தார், தேசிய அளவில், வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற, அருணிமா சின்கா, 25.

அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கி, பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா, கொள்ளையர்களை விரட்டினார். எனினும், அதிக எண்ணிக்கையில் இருந்த கொள்ளையர்களை, அவரால் விரட்ட முடியவில்லை.அவர்களிடம் சிக்கிய அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது, ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், வலது காலை மட்டும் இழந்தார்.

ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்தப் பெண், காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில், செயற்கை காலை பொருத்தி, இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார். அதில் அவர் தேர்ச்சி பெறவே, கடந்த ஏப்ரலில், "உலகின் மிகப் பெரிய சிகரம்' எவரெஸ்ட் மீது ஏறி, சாதனை படைத்தார்.இதன் மூலம், ஒரு காலை இழந்த, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார். பனி சூழ்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதும், தன் முதுகுப் பையில் இருந்து, இரண்டு திரிசூலங்களை எடுத்து, தரையில் நட்டு வைத்தார்; அருகிலேயே, சுவாமி விவேகானந்தரின் படத்தையும் வைத்தார்; சிவபெருமானின் புகழ் பாடும், பாடல்களைப் பாடினார்.
ஒற்றைக் காலுடன் தன்னை உலகின் மிக உயரமான சிகரத்தை ஏற வைத்த, இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.அதற்குப் பிறகு, உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு, பணம், புகழ் குவியத் துவங்கியுள்ளது. கிடைத்த பணத்தைக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு, விளையாட்டுப் பயிற்சி பள்ளி துவக்க உள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக